அண்ணாமலை தீபமா வாழணும்பா!



ஏரியா லிட்ரேச்சர்
இது மரணமாஸூ பேட்ட
எங்க சேரியெல்லாம்
ரஜினிகாந்து கோட்ட

பெங்களூரு கண்டக்டரு
பேட்ட புகழும்
சூப்பர்ஸ்டாரு

நல்லவனுக்கு
நல்லவன்
ஆண்டனிக்கு
கெட்டவன்

குமரி முதல்
இமயம் வரை
பேரெடுத்த தங்கமகன்
வந்தாரை வாழவைக்கும்
தமிழகத்தின் தலைமகன்

ஊருக்கெல்லாம் தேரு
ஓட்டின ஆட்டோக்காரன்
பார்புகழும் வசூல் மன்னன்
எங்க எந்திரன்

சூப்பர்ஸ்டாரு திரையில்
தெரிஞ்சா விசிலுதான்
தியேட்டரெல்லாம்
ரசிகன் பாடுவான்
உன் புகழுதான்

ஊருக்கெல்லாம்
அள்ளித்தரும் படையப்பா
ஆயிரம் வருஷம்
அண்ணாமலை தீபமா
வாழணும்பா!

- சீத்தலைப் பாட்டனார்