பிகினி அணிவது ஈசினு நினைச்சீங்களா..? கேட்கிறார் ராய் லட்சுமி



தமிழ் சினிமாவில் 14வது ஆண்டைக் கொண்டாடுகிறார் ராய் லட்சுமி. ‘நீயா 2’, ‘மிருகா’, ‘சிண்ட்ரெல்லா’ என அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பதால் உற்சாகத்துடன் ஃப்ரெஷ் பொக்கேவாக புன்னகைக்கிறார். கேஷுவலாக அவரிடம், ‘லட்சுமி ராய்... நல்லாதானே இருக்கு..? ஏன் ராய் லட்சுமினு மாத்திக்கிட்டீங்க..?’ என்றால் தலையில் அடித்துக் கொள்கிறார்!

‘‘தூக்கத்துல இருந்து இப்பதான் எழுந்தீங்களா..? ராய் லட்சுமினு பெயரை மாத்தி ரொம்ப வருஷங்களாச்சு! ராசிக்காகவோ, மூடநம்பிக்கைக்காகவோ இந்தப் பெயரை வச்சுக்கல. திடீர்னு ஒருநாள் அப்பா, ‘உன் பெயரை ராய்லட்சுமினு மாத்திக்க’ என்றார். நான் அப்பா பேச்சை தட்டாத புள்ள! அதனால ‘ஏன் மாத்திக்கணும்’னு கேட்கல.

ஃப்ரெண்ட்ஸ்கிட்ட தகவலா சொன்னப்ப, ‘உன் நல்லதுக்குதான் சொல்லியிருப்பார்’னு தங்கள் கருத்தைச் சொன்னாங்க. தட்ஸ் ஆல்.என்ன... இப்பவும் பலர் லட்சுமி ராய்னுதான் கூப்பிடறாங்க. ராய் லட்சுமி வெறும் ஸ்கிரீன் நேமாவே நிக்குது! உன் பேரன்ட்ஸ் உனக்கு

நல்லதுதான் சொல்வாங்க.. செய்வாங்க..’னு சொன்னாங்க.
அவரோட விருப்பத்திற்காக நேம் மாத்திக்கிட்டேன். ஆனா இப்பவும் சிலர் என்னை லட்சுமிராய்னுதான் சொல்றாங்க. ராய்லட்சுமிங்கறது ஸ்கிரீன் நேம் மட்டும்தான்னு ஆகிடுச்சு...’’ கலகலக்கும் ராய் லட்சுமி தன் 15வது வயதில் சினிமாவில் அறிமுகமானவர்.

‘‘ஆமா. தமிழ்ல ‘கற்க கசடற’ல அறிமுகமாகறப்ப எனக்கு 15 வயசுதான். அப்ப இண்டஸ்ட்ரி பத்தி எதுவுமே தெரியாது. படங்கள் கிடைக்கறது சுலபமா இருந்தாலும் ஆடியன்ஸ் பல்ஸ் தெரியலை.ஒவ்வொரு இண்டஸ்டஸ்ட்ரிக்கும் ஒரு கல்ச்சர் இருக்கு. தமிழ் கலாசாரம் என்னனு அப்ப எனக்குத் தெரியாது. ஆடியன்ஸ் என்ன எதிர்பார்க்கறாங்கனு புரிஞ்சுக்கற பக்குவமும் இல்ல. என் பொசிஷன் என்னனு உணருவதற்குள் நாலு வருஷங்கள் ஓடிப் போச்சு.

அப்புறம் நிறைய படங்கள் பண்ணினேன். மலையாளம், தெலுங்குனு பம்பரமா சுத்தினதுல தமிழ்ல இடைவெளி விழுந்துடுச்சு. ‘தாம் தூம்’க்காக மறுபடியும் என்னை ஜீவா சார் அழைச்சிட்டு வந்தார். என் செகண்ட் இன்னிங்ஸ் இங்கிருந்துதான் ஆரம்பமாகுது.‘காஞ்சனா’ல நான் நடிக்கிறப்ப தமிழ்ல ஹாரர் மூவிஸுக்கான கிரேஸ் இல்ல. இந்தப் பட ஹிட்டுக்கு அப்புறம்தான் அந்த டிரெண்ட் ஆரம்பமாச்சு...’’ மூச்சுவிடாமல் தன் சினிமோகிராஃபியை சுருக்கமாக சொல்லி முடித்த ராய் லட்சுமி, செலக்டட்டாக நடிப்பதையே இப்போது விரும்புகிறார்.

‘‘ஒரேநேரத்துல ஏனோதானோனு பத்து படங்கள்ல நடிச்சு என்ன பயன்? அதனாலதான் தேர்ந்தெடுத்து நடிக்கறேன். ‘நீயா 2’ அப்படி அமைஞ்சதுதான். வித்தியாசமான கதை. ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, கிராஃபிக்ஸுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கேனு தோணிச்சு.ஆக்சுவலா எனக்கு ஹாரர், அனிமல் ஜானர் பிடிக்கும். இந்தப் படம் இந்த இரண்டும் சேர்ந்த கலவை! அதனால சட்டுனு ஓகே சொல்லிட்டேன்.

படத்துல வரலட்சுமி, கேத்தரின் தெரசா இருக்காங்க. ஸோ வாட்? எங்க மூணு பேருக்குமே படத்துல முக்கியத்துவம் இருக்கு. டைரக்டர் முதல்லயே எல்லார்கிட்டயும் எல்லார் போர்ஷன்ஸ் பத்தியும் சொல்லிட்டார். உண்மைல மல்டி ஸ்டார் படங்கள் பண்றதுதான் சவால். பிசியா இருக்கிற எல்லாரையும் ஒரே இடத்துல ஒரே ஃப்ரேம்ல கொண்டு வர்றது அவ்வளவு ஈசி இல்ல. அதேமாதிரிதான் சிஜி படங்கள்ல நடிப்பதும். ஏன்னா, கிராஃபிக்ஸுக்கு இடம் விட்டுட்டு குறிப்பிட்ட இடத்துல நின்னு நடிக்கறேன். கிராஃபிக்ஸ்ல வரும் உருவத்தை கற்பனைல நினைச்சு ரியாக்ட் பண்ணணும். ‘நீயா 2’ல இருந்த இந்த சவாலை ஏற்று நடிச்சிருக்கேன்!

‘மிருகா’, ‘சிண்ட்ரெல்லா’ ஷூட் போயிட்டிருக்கு. தெலுங்கு, கன்னடத்துலயும் நான் பிசியாக்கும்!’’ கண்சிமிட்டும் ராய் லட்சுமி, திடீரென தன் உடல் ஏறும், இறங்கும் என்கிறார்.‘‘என் உடல்வாகு அப்படி! இப்ப ‘ஜூலி 2’ல பார்த்தீங்கனா செம ஃபிட்டா தெரிவேன். ஒரு சமயம் 75 கிலோ இருந்தேன். அப்புறம் ஒர்க் அவுட் செஞ்சு 59 கிலோஆனேன்.

‘ஜூலி 2’ல ஒப்பந்தம் ஆனப்ப ‘படத்துல நீங்க பிகினி அணிய வேண்டியிருக்கும்’னு சொன்னாங்க. இதுக்காகவே ஒரு மாசத்துல எடையைக் குறைச்சு ஃபிட்டா மாறினேன்! இதுக்கான டயட், ஒர்க் அவுட்டை நானே ரிசர்ச் பண்ணி கடைப்பிடிச்சேன்! ஜிம்ல வெயிட்டே தூக்காம ஒரு டஃப் ஒர்க் அவுட்ல... அதாவது மிலிட்டரி டிரெயினிங் மாதிரியான ஒரு ஒர்க் அவுட்ல எடையைக் குறைச்சேன்...’’ என்ற ராய் லட்சுமி, சோஷியல் மீடியாவையே ரசிகர்களுடன் உரையாடும் ப்ளாட்ஃபார்மாகப்  பயன்படுத்துகிறார்.

‘‘ரசிகர்கள்கிட்ட நேரடியா பேச முடியுது. அதனாலதான் அதுல ஆக்டிவ்வா இருக்கேன். என்ன... நெகடிவ் கமெண்ட்ஸ் வரும். அதைப் பொருட்படுத்தறதில்ல. மில்லியன் கணக்குல நெட்ல நல்ல விஷயங்கள் இருக்கிறப்ப எதுக்காக சில நூறு நெகடிவ்வை நினைச்சு மண்டையைக் குழப்பிக்கணும்?

இப்ப நான் நடிக்கற படங்கள், அன்றாட அப்டேட்ஸ்... இதெல்லாம்தான் சோஷியல் மீடியால ஷேர் பண்றேன். மத்தபடி பட புரொமோஷனுக்கு அதைப் பயன்படுத்தறதில்ல!’’ என்கிறார் ராய் லட்சுமி.

மை.பாரதிராஜா