அஞ்சு பன்ச் -ஷங்கர்



*திரைப்பட முன்தயாரிப்பு சம்பந்தமான அத்தனை வேலைகளையும் ஒரு கையடக்க குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொண்டு விவாதிப்பார்.

*ஒருவருக்கு இட்ட வேலையை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றும் வரை அவரை சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பார். முழுமையாக ஒருவரை நம்பி வருகின்ற ஏமாற்றம்தான் இந்த உலகின் வழக்கமான சரிவு என்பார்.

*ரசிகர்களின் ரசனையை அறிய திரையரங்குகளில்தான் படங்களைப் பார்ப்பார். தனிப்பட்ட அழைப்புகளைத் தவிர்ப்பார்.

*எந்த கிசுகிசுக்களிலும், எதிர்மறையான விவாதங்களிலும் கலந்துகொண்டு நேரத்தை வீணடிக்கமாட்டார். பேட்டிகளில் வார்த்தைகளை அளந்து
பேசுவார்.

*மாதத்தில் ஒரு நாள் (அ) வாரத்தில் ஒரு நாளாவது குடும்பத்தோடு சந்தோஷமாக செலவளிப்பார். வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்தோடு வெளிநாட்டுப் பயணம் நிச்சயம்.

நன்மதி