அஞ்சு பன்ச்-நாசர்
 1.தன்னைத் தேடி ஒப்பந்தம் செய்ய வருகிறவர்களிடம், இந்தக் கேரக்டருக்கு இவர்தான் சரியாக இருப்பார் என பெருந்தன்மையாக சிபாரிசு செய்வார். 2.தெருவில் கிடக்கிற பலவிதமான கற்களை வீட்டுக்கு கொண்டு வந்து அதை கலைப்பொருளாக மாற்றி விடுவார். வீட்டில் காம்பவுண்ட் முழுக்க இப்படியான கைவண்ணம் உண்டு.
3.எந்த ஊருக்கு ஷூட்டிங் போனாலும் அங்கிருக்கும் பழைய நண்பர்களை வரவழைத்துப் பேசுவார் அல்லது கிடைத்த இடை வெளியில் அவர்களைப் பார்க்கக் கிளம்பி விடுவார்.
4.பழுப்பு நிறதாள்கள், வகை வகையான பேனாக்கள், மை பாட்டில் என பொருட்கள் கண்டிப்பாக பெட்டியில் இடம் பெறும். சிறு ஓவியம், கடிதங்கள் எழுதுவது தனக்கு உயிர்ப்பை கொடு க்கும் என்பார்.
5.நடிகராக ஆரம்பித்த காலத்திலிருந்தே ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என எழுதி கையெழுத்திட்டு வருகிறார்.
நன்மதி
|