அஞ்சு பன்ச்-அக்‌ஷரா ஹாசன்



*கமல் வீட்டில் வளரும் கிளாரா, கோரா என பெயரிடப்பட்ட இரண்டு பூனைக்குட்டிகளிடம் அக்‌ஷரா பிரியம் கொண்டாடுவார். வெளியூர் பயணத்தின் போது கூட அவைகளின் நலத்தை விரும்பிக் கேட்பார்.

*கையில் கேமரா மாடலில் கலர் டாட்டூ குத்தியிருக்கிறார். கேமரா மீதான காதலில் விளைந்த டாட்டூ அது.

*காபி பிரியர். எங்கே நல்ல காபி கிடைத்தாலும் விசாரித்து தேடி ஓடி பருகும் பழக்கம் உடையவர்.

*சென்னையில் அப்பாவிடம் ஆறு மாதம், மும்பையில் அம்மாவிடம் ஆறு மாதம் என இருந்து வருகிறார்.

*சமையலில் எக்கச்சக்க ஆர்வம். விதவிதமாக நான்வெஜ் அயிட்டங்களை அம்மா, அப்பா, அக்காவுக்கு சமைத்துத் தருவார்.

நன்மதி