Coffe Table



* ஓவியர் ஹெக்டே
                        
‘கோமாளி’யில் ஸ்கூல் பொண்ணாக கலக்கியவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழில் இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கும் சம்யுவுக்கு பெயின்ட்டிங்கில் செம இஷ்டம். பெங்களூருவில் உள்ள தன் வீட்டின் இன்டீரியர் மற்றும் பெயின்ட்டிங் வேலைகளை ரசித்துச் செய்தவர், அந்த ஸ்வீட் மொமன்ட்டை இன்ஸ்டா பக்கத்திலும் வீடியோவாக தட்டிவிட்டிருக்கிறார். ‘‘என் பாய் ஃப்ரெண்ட் வீட்டுக்கு வர்றதால, ஹாலை நானே பெயின்ட் பண்ணினேன்...’’ என்று ஒளிவுமறைவின்றி சம்யு பேசியதில், குவிந்திருக்கிறது லட்சம் லைக்ஸ்!

கலக்கல் பேபி

டோலிவுட்டில் நானியின் ‘மஜ்னு’வில் கலக்கிய ரியா சுமன், கோலிவுட்டில் ஜீவாவின் ‘சீறு’வில் என்ட்ரி ஆகிறார். இதன் ஃபைட் ஷூட்டில் ரியாவுக்கு ஐந்து நிமிடம் ரெஸ்ட் கிடைத்துவிட, அந்த லிட்டில் பிரேக்கையே க்ளிக்கியதுடன், அதை இன்ஸ்டாவில் பதிவிட்டு மகிழ்ந்திருக்கிறார்.  கலக்குங்க பேபி.

ஒரு மணி நேரம் சூட்டை தக்கவைக்கும் காபி கோப்பை!

காலையில் காபி குடிக்கவில்லை என்றால் அந்த நாளே ஓடாது என்பவர்களுக்காக ‘எம்பர்’ நிறுவனம் பிரத்யேகமாக ஒரு காபி கோப்பையைத் தயாரித்திருக்கிறது. உங்களுக்கு வேண்டிய சூட்டில் காபியைக் கோப்பைக்குள் ஊற்றிவிட்டால் போதும். ஒரு மணி நேரம் வரை அதே சூட்டில் காபி இருக்கும். சூட்டின் அளவைக் கட்டுப்படுத்த ஆப் கூட உள்ளது. புளூடுத் வழியாக கோப்பையை ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொள்ளலாம். விலை: ரூ.9 ஆயிரம்.