சிரிப்பு!



ரீடர்ஸ் வாய்ஸ்

* சமந்தா முகத்தின் சிரிப்பே சொல்கிறதே உழைப்பு, கனவு, அர்ப்பணிப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை.- பிரேமா குரு, சென்னை; ஆத்மநாதன், ஆற்காடு; ஜெர்லின், ஆலந்தூர்; கலிவரதன், கீழ்க்கட்டளை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

* அரசியல் ஆதாயத்திற்காக மோடி அரசு இனி எந்த மாநிலத்தையும் கூறு போட முயற்சிக்கலாம். தமிழ்நாடுதான் மோடிக்கு கிள்ளுக்கீரை ஆயிடுச்சே என்று அடித்துச் சொல்கிறது ‘காஷ்மீர் போல் தமிழகமும் இரண்டாக பிரிக்கப்படுமா..?’ கட்டுரை. - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; மனோகர், மேட்டுப்பாளையம்; பிரேமா, சென்னை; யாழினிபர்வதம், சென்னை; கருணாகரன், போரூர்; இலக்சித், மடிப்பாக்கம்.

* புதிய கல்விக் கொள்கை, மருத்துவ ஆணைய மசோதா போன்ற புதுப்புது குண்டு வீச்சுகள் ஏழை எளிய மக்களின் கொஞ்ச நஞ்ச படிப்பையும் முன்னேற்றத்தையும் முற்றிலும் அழித்துவிடப்போகிறது என்ற எச்சரிக்கை மணியை சரியான நேரத்தில் அடித்துள்ளீர்கள். - பப்பு, அசோக் நகர்; மல்லிகா அன்பழகன், சென்னை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்;  கதிரவன், மதுரை; மனோகரன், கோவை.

* சிறப்பாக பல மொழிப்படங்களிலும் நடித்து பேரும் புகழும் பெறத்துடிக்கும் ஷ்ரத்தா நாத்தின் கனவுகள் நனவாக வாழ்த்துகிறோம். - மகேஸ்வரி, பொள்ளாச்சி; ப. மூர்த்தி, பெங்களூரு; கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

* பலபேர் திறமைகளில் உருவான திரைப்படத்துக்கு தன் பெயரை முதன்மைப் படுத்த விரும்பாத இயக்குநர், ‘காப்பான்’ படைத்தலைவர் கே.வி.ஆனந்த் பேட்டி பக்கா. - மீ. அழகுமங்கை, அடையாறு; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆர்.ஜெ.சி, சென்னை; சரண் சுதாகர், வேளச்சேரி; மனோகர், மேட்டுப்பாளையம்.

* ஆந்திர அரசியல் கொலைகள், பழிக்குப்பழி என விரியும் இரத்த சரித்திரம் குலை நடுங்க வைக்கிறது. - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; பிரேமா, சென்னை; மலர்விழி, வேளச்சேரி; கதிர், மதுரை; வெங்கட், கோவை.

* கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’யின் ஒரு துளி தேனைப் பருகக் கொடுத்துள்ளீர்கள். முழுமையாக சுவைக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். - வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; ப.மூர்த்தி, பெங்களூரு; மனோகர், மேட்டுப்பாளையம்; கோ. தியாகராஜன், கீழ்வேளூர்.  

* பல பக்க ஜோக்குகளும், குட்டிச் செய்திகளும், தொடர்களும், சினிமா செய்திகளுமாக ஒரு வாசமிகு கதம்பமாக ஜொலிக்கிறது ‘குங்குமம்’.- ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; பிரேமா குரு, சென்னை; மாளவிகா ரமேஷ், மாம்பலம்; மியாவ்சின், கே.கே.நகர்; ஜெரிக், சென்னை; கவின், சென்னை.