COFFEE TABLEசெம ஹாட் மச்சி!

ஆறு மில்லியன் ஃபாலோயர்களை ஃபேஸ்புக்கில் வைத்துள்ளதால் தினம் தினம் புதுப்புது போட்டோஷூட்களைத் தெறிக்க விடுகிறார் ரெட்டி. ரோட்டுக்கடையில் காபி குடிப்பது, சாய்பாபாவைத் தரிசிப்பது என மொமண்ட்களையும் பகிர்கிறார்.  சமீபத்தில் செம ரொமான்டிக் ஹாட் லுக்கில் போஸ் கொடுத்து, அதை பதிவிட்டும் விட, வைரலாகி வருகிறது அந்த ஹாட் கேக்குகள்.

பவர்பேங்க்

டெபிட் கார்டை விட கொஞ்சம் பெரிய அளவில் இருக்கிறது ‘ஏங்கர்’ பவர்பேங்க். அதனால் எங்கு வேண்டுமானாலும் சுலபமாக எடுத்துக்கொண்டு போகலாம். ‘‘பவர்பேங்க்கில் சார்ஜ் போட்டால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக வெகு நேரம் பிடிக்கிறது...’’ என்பது வாடிக்கையாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு.  இதை நிவர்த்தி செய்வதற்காக 10000mAh திறனுடன் இந்த பவர்பேங்க்கை வடிவமைத்திருக்கிறார்கள். விலை ரூ.2,800.

ஹேப்பிஷா!

சந்தோஷமாகப் புன்னகைக்கிறார் சாயிஷா. கணவர் ஆர்யாவுடன் அமேஸிங் டின்னர், அம்மாவுடன் பாசப்பிணைப்பு என ஹேப்பியான தருணங்களை இன்ஸ்டாவில் பகிரும் பொண்ணு, இப்போது ‘காக்க காக்க’ படத்திலுள்ள ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்...’ பாடலை அழகாக ரசித்து பாடியதுடன் அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். ‘‘படப்பிடிப்புக்கு இடையே அந்தப் பாடலை பாடினேன். எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டு அது...’’ என்கிறார் கூலாக.

பாசக்கார குரங்கு!

சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் கூட இப்போது வைரலாகலாம். இதற்கு உதாரணம் இந்தப் படம்.நினைவிழந்த நிலையில் இருக்கும் குரங்குக்குட்டியைக் கையில் ஏந்தி கதறுகிறது தாய்க் குரங்கு. சமீபத்தில் இந்த துயரக் காட்சி இணையத்தில் பரவியது. அமேசான் காட்டுத்தீயைப் பார்த்துதான் குரங்கு கதறுகிறது என்று பலரும் நினைத்துவிட்டனர். ஆனால், நிஜம் வேறு. 2017ல் ஐபல்பூரில் நிகழ்ந்த சம்பவம் இது. அப்போதும் இந்தத் தாய்க் குரங்கு வைரலானது.

ஆரோக்கியமற்ற இந்தியா

உலகளவில் ஆரோக்கியமற்ற உணவை உண்பவர்களில் மூன்றில் ஒருவர் இந்தியர். அத்துடன் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு சாப்பிட போதுமான உணவு இல்லை. ஆரோக்கியமில்லாத உணவால் இங்கே பிறந்து வளர்கின்ற குழந்தைகளில் ஐந்தில் ஒன்று ஒல்லியாக உள்ளது. தவிர, இந்தியாவில் சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் இரவு உணவை உண்ணாமல் பசியோடு உறங்கச் செல்கின்றனர்.  

அத்துடன் உலகளவில் வயதுக்கு ஏற்ற உயரமில்லாத குழந்தைகளில் பத்தில் மூன்று பேர் இந்தியக் குழந்தைகள்.  இந்நிலையில் மத்திய அரசு பொதுநல
சுகாதாரத்துக்கு பட்ஜெட்டில் வெறும் 1% மட்டுமே ஒதுக்குகிறது!

குங்குமம் டீம்