ஒரு நாட்டையே குறி வைக்கும் கேன்சர்!



சமீபத்தில் கென்யா தலைநகர் நைரோபியில் நீண்ட போராட்டம் ஒன்று நடந்தது. அதில், புற்றுநோயை நாட்டின் பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
காரணம், வருடந்தோறும் கென்யாவில் 30 ஆயிரம் பேர் புற்றுநோயால் மரணமடைவதுதான்!இப்படியான ஒரு கோரிக்கையை  இதற்குமுன் யாரும் வைத்ததில்லை. அதனால் இந்தப் போராட்டம் பிபிசி உட்பட பல ஊடகங்களில் முக்கிய செய்தியானது.

நான்கு கோடிப் பேர் வாழும் கென்யாவில் வெறுமனே 35 புற்று நோய் மருத்துவர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஒரு மருத்துவரே 3 ஆயிரம் புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க வேண்டிய நிலை. சீனா, அமெரிக்காவில் 150 புற்றுநோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். அத்துடன் கென்யாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான உபகரணஙகளும் வசதிகளும் ரொம்பவே குறைவு.

அங்கே புற்றுநோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம். இப்படியான துயர நிலையே அங்கு நிலவுகிறது. புற்றுநோயை பேரழிவாக அறிவித்தாலாவது அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என்ற நோக்கத்தில் களமிறங்கியிருக்கின்றனர் போராளிகள்.

த.சக்திவேல்