பறக்கும் மனிதன்



மனிதனால் பறவையைப் போல வானத்தில் பறக்க முடியுமா?‘முடியும்’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறார் ரிச்சர்ட் பிரௌனிங். இங்கிலாந்தைச் சேர்ந்த தொழில் அதிபர், ஓட்டப்பந்தய வீரர், பேச்சாளர் மற்றும் சாகசப் பிரியர் என பன்முகங்களுக்குச் சொந்தக்காரர் இவர். சமீபத்தில் இவர் ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு பறவையைப் போல வானில் பறந்தார்.

மணிக்கு 32.02 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து அசத்தியுள்ளது இந்த மனிதப் பறவை. ரிச்சர்டின் சாகசம் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டது. ‘‘நிஜ அயர்ன்மேன்...’’ என்று ரிச்சர்டை புகழ்கின்றனர். 2016ம் வருடத்தில் ஒரு குழுவை அமைத்து இந்த சூட்டை உருவாக்கியிருக்கிறார். சூட் உருவாக 15 மாதங்கள் ஆகிவிட்டன. ஒரு லட்சம் பவுண்டுதான் ரிச்சர்டின் பட்ஜெட். ஆனால், அதையும் மீறி சென்றுவிட்டதாம்!

த.சக்திவேல்