ஒரே இரவில் சிவப்பாக மாறிய நதி!



தென் கொரியாவை வளமாக்கும் இம்ஜின் நதிதான் இப்போது ஹாட் டாக். வட கொரியாவின் எல்லையில் இருந்து தென் கொரியாவை நோக்கி பாய்கிறது இந்த நதி. சமீபத்தில் திடீரென்று சிவப்பு வண்ணமாக மாறிவிட்டது இம்ஜின். நதிக்கரையில் குடியிருந்தவர்கள் பீதியில் உறைந்துவிட்டனர். நதி ஏன் அப்படியாகிவிட்டது? ஆராய்ந்ததில் பேரதிர்ச்சி காத்திருந்தது.

பன்றிக்காய்ச்சல் உலகையே ஆட்டிப் படைத்துள்ளது. இதற்கு தென்கொரியாவும் விதிவிலக்கல்ல. பன்றிக்காய்ச்சலைத் தடுக்கும் முயற்சிக்காக 47 ஆயிரம் பன்றிகளைக் கொன்று புதைத்துள்ளனர் தென்கொரிய அதிகாரிகள். பன்றிகள் புதைக்கப்பட்ட இடத்தில் மழை பெய்திருக்கிறது.

இறந்து போன பன்றிகளின் உடலில் இருந்த ரத்தம் கசிந்து நதியில் கலக்க, சிவப்பு நதியாகிவிட்டது இம்ஜின். தொற்றுக்கிருமிகளை நீக்கிய பின்தான் பன்றிகளைக் கொன்றிருக்கின்றனர். அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்கிறார்கள்.

த.சக்திவேல்