Data corner



திருப்பதி கோயில் - 2019ம் ஆண்டு:2,78,90,179 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது 2018ம் ஆண்டைக் காட்டிலும் 1,88,132 அதிகம்.

*உண்டியல் காணிக்கை ரூ.1,161.74 கோடி வசூலாகியுள்ளது. இது 2018ம் ஆண்டை விட, ரூ.95.25 கோடி கூடுதல்.
*12,49,80,815 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
*1,16,61,625 பக்தர்கள் மொட்டை அடித்துள்ளனர்.
*பக்தர்களுக்கு அறைகள் வாடகை விட்டதன் மூலம் ரூ.83.71 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

பாதுகாப்பான விமான நிறுவனங்கள் பட்டியலில் 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை முதல் இடத்தில் இருந்த குவாண்டாஸ் நிறுவனம், 2019ம் ஆண்டிலும் முதலிடம் பிடித்துள்ளது.  

தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் 34% தவறானவையாக இருப்பதாக தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேற்கு ஆசிய நாடுகளில் எழுந்துள்ள பதற்ற நிலையால் கடந்த வாரத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளா–்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

தூங்குவதற்கு முன் 80%; காலை கண்விழித்து 30 நிமிடங்களுக்குள் 74% இந்தியர்கள் செல்போன் பயன்படுத்துகின்றனர்.  

இந்திய விபசார விடுதிகளின் பிடியில் 1,60,000 நேபாளப் பெண்கள் இருக்கிறார்கள்.

அன்னம் அரசு