எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் எலெக்ட்ரானிக்ஸ் ஜாம்பவான்!



சமீபத்தில் லாஸ் வேகாஸ் நகரில் பிரமாண்டமான கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ  நடந்தது. இதில் நூற்றுக்கும் மேலான நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களின் தொழில்நுட்ப அப்டேட்டை காட்சிக்கு வைத்தன.

ஜப்பானிய எலெக்ட்ரானிக்ஸ் ஜாம்பவானான ‘சோனி’ நிறுவனம் எதைக் காட்சிப்படுத்தப் போகிறது என்பதே பலரது ஆர்வம்.
அந்த ஆர்வத்தை இரட்டிப்பாக்கி ஆச்சர்யப்பட வைத்தது ‘சோனி’. ஆம்; ஒரு எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறது ‘சோனி’.

‘விஷன் எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காரை ‘சோனி’யின் செயற்கை நுண்ணறிவுத் துறை மற்றும் ரோபாட்டிக்ஸ் துறை உருவாக்கியிருக்கிறது. இதற்குமுன் இந்தத் துறைகளைச் சேர்ந்தவர்கள்தான் ‘அய்போ’ என்ற ரோபோ நாயை உருவாக்கியிருந்தனர்.

ஆட்டோமொபைல் துறையில் நானும் குதிக்கப்போகிறேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது சோனி!இந்நிலையில் காரின் வடிவமைப்பு ஒரு பிரபல நிறுவனத்தின் காரைப் போல இருப்பதாக விமர் சனங்கள் எழுந்துள்ளன!      

த.சக்திவேல்