ரெண்டு!



ஜீரோ!

பாலிவுட் க்ளாமர் கேக் திஷா பதானி, இப்போது ஜீரோ சைஸ் ஃபிட்னஸுக்கு மாறியிருக்கிறார். சமீபத்திய ‘பாஹி 3’யில் ஒரு பாடலுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடியவர், ‘ஜீரோ ஃபிட்னஸ் ஆனதில் எவ்ளோ ப்ளஸ் இருக்குது தெரியுமா?’ என நெளிந்து வளைந்து கண்சிமிட்டுகிறார்.அடுத்து இந்தியில் பிரபுதேவாவின் இயக்கத்தில் சிலிர்க்கப் போகும் திஷா, பெண் இயக்குநரான ஆஷிமா ஸிப்பரின் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். இதை தயாரிப்பவர்கள் சின்னத்திரையில் கொடிகட்டிப் பறந்த ஏக்தா கபூர், ஷோபா கபூரின் படம் என்பதால், மகிழ்ச்சியில் திளைக்கிறார் திஷா.

தபு ரசித்த முதுகு!

இந்தியில் வெளியான ‘ஜவானி ஜானேமன்’ என்ற அடல்ட் ஜானரின் ஹீரோயின் ஆலயா. பாலிவுட்டில் ஒரு காலத்தில் எழுச்சி குயினாக இருந்த பூஜா பேடியின் மகள் இவர்!நியூயார்க்கில் ஆக்ட்டிங் டிப்ளமோ முடித்த ஆலயாமுதல் படத்திலேயே தபுவுடன் நடித்ததில் செம ஹேப்பியாக வலம் வருகிறார்.
டாட்டூ ப்ரியையான ஆலயா, ஒருமுறை ஃபேமிலி ட்ரிப்பாக கோவா சென்றார். அங்கே தன் பரந்து விரிந்த முதுகில் அழகான பெரிய டாட்டூ ஒன்றை வரைந்தார். அதை தபு பார்த்துப் பாராட்ட... குஷியாகிவிட்டது பொண்ணு!

மை.பா.