my first kiss...



டோலிவுட்டின் ‘புட்டபொம்மா...’ பூஜா ஹெக்டேதான். இளசுகளை தலையாட்டி பொம்மை டான்ஸில் கிறுகிறுக்க வைத்த புஜ்ஜு குட்டி. தமிழில் ‘முகமூடி’யில் புன்னகைத்த ஹீரோயின். இப்போது இந்தி, தெலுங்கு என டபுள் இண்டஸ்ட் ரீயிலும் டாப் ரேஸில் நிற்கிறார்.
அல்லு அர்ஜுனின் ‘ஆல வைகுந்தபுரம்லு’ சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு பிரபுதேவா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’, அகிலின் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’ என ஜொலி ஜொலிக்கிறார்.

அகிலின் பட ஷூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கிவிட்டதால், லாக்டவுனுக்குப் பிறகு மீண்டும் எனர்ஜியாகிவிட்டார். கேரவனில் இருந்து இறங்கி வரும் பூஜாவைஅவரது ஹேர் டிரஸ்ஸரும், மேக்கப் உமனும் கொரோனா கவசத்துடன் வரவேற்கிறார்கள்.  

மிஸ் யுனிவர்ஸ் டு மூவி ஹீரோயின்..?

யெஸ். ஆனா, நான் மிஸ் யுனிவர்ஸ் ஆகலை. உலக அழகிப் போட்டியில செகண்ட் ரன்னர்அப் ஆகத்தான் வந்தேன். அதுக்கு முன்னாடி மிஸ் இண்டியா அழகிப் போட்டியில லீடிங்ல வந்திருக்கேன். அப்புறம், ஒருமுறை மிஸ் டேலண்ட் பட்டம் வாங்கியிருக்கேன். அதையடுத்து ‘மிஸ் இண்டியா சவுத் கிளாமரஸ் ஹேர்’னு பட்டம் வாங்கியிருக்கேன்.

காலேஜ் படிக்கும் போதே, மாடலிங், ஃபேஷன் ஷோ பண்ணிட்டிருந்தேன். அப்படியே அழகிப் போட்டிகள்ல என்ட்ரி ஆனேன்.
என் அப்பா, அம்மாவோட பூர்வீகம் மங்களூரு. உலக அழகி ஐஸ்வர்யா ராயோட ஊர் அது. எங்க அம்மாவோட தாய்மொழி துளு. எங்க வீட்ல துளு, இந்தி, மராத்தி, ஆங்கிலம்னு எல்லாம் பேசுவோம்.

நான் பிறந்து வளர்ந்தது மும்பையில்தான். நான் மிஸ் இண்டியா போட்டியில் இருந்தபோதுதான் தமிழ்ல ‘முகமூடி’யில் கமிட் ஆனேன். அதுல நடிக்கும் போதே, டோலிவுட் ஆஃபர் வந்துச்சு. அங்கிருந்து பாலிவுட். ஹிருத்திக்கின் ஜோடியா ‘மொகஞ்சதாரோ’ பண்ணினேன். இப்ப பிரபாஸுடன் நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’ கூட இந்தி, தெலுங்குனு பைலிங்குவல் ஃபிலிம்தான்.

ஒரு பாலிவுட் பிரபலத்துடன் ஒருநாள் முழுக்க நீங்க டைம் செலவு பண்ணலாம்னா... யாரை செலக்ட் பண்ணுவீங்க?
ஷாரூக்! நான் அவரோட ரசிகை. அதுவும் ஷாரூக் நடிச்ச ‘குச் குச் ஹோத்தா ஹை’ படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது.
ஷாரூக் க்யூட்டா சார்மிங்கா இருப்பார். அறிவாளி. நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருப்பார். அவரோட நாலேஜ் பாத்து வியந்திருக்கேன்.
ஒரு நாள் முழுக்க அவரோட செலவு பண்ணினா, இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயங்கள் அவரோட நிறைய பேசலாம். தெரிஞ்சுக்கலாம்.
கிஸ்ஸிங் சீன்ல செமயா ரொமான்டிக் மூட் கொண்டு வந்துடறீங்களே..?

தேங்க்ஸ். ஆனா, ‘உங்களுக்கு எது ரொம்பவே டஃப் சீன்’னு கேள்வி கேட்டிருந்தா கிஸ்ஸிங் சீன்ல நடிக்கறதைப் பத்தி சொல்லியிருப்பேன். நிஜமாகவே அது ஒரு டஃப் ஒர்க் தான். கிஸ்ஸிங் சீன்ஸ் பாத்துட்டு ஆடியன்ஸ் எல்லாமே ‘செமயா இருக்குதுல்ல... அப்போ ஸ்பாட்டில் எப்படி ரொமான்டிக் சிச்சுவேஷன் இருந்திருக்கும்’னு நினைப்பாங்க.

ஆனா, அப்படியெல்லாம் இருக்காது. கிஸ்ஸிங் சீன் ஷூட் பண்றது டெக்னிக்கல் சார்ந்த விஷயம். திரையில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி, ரொமான்டிக் மூட் வருவதற்கு ஒரு பக்காவான டெக்னிக்கல் மேக்கிங் இருந்தால்தான் சாத்தியம். இந்த டெக்னிக்கல் விஷயம் கொஞ்சம் சொதப்பினாலும், கிஸ்ஸிங் சீன் பல்பு வாங்கிடும். இன்னொரு விஷயம், கிஸ்ஸிங் சீன் ஷூட் பண்றப்ப ஸ்பாட்டுல நம்மைச் சுத்தி நூறு பேர் இருப்பாங்க.

‘மொகஞ்சதாரோ’ படத்துல ஹிருத்திக் ரோஷனோட கிஸ்ஸிங் சீன்தான் என் ஃபர்ஸ்ட் கிஸ்ஸிங் சீன் அனுபவம். அவ்ளோ கூட்டத்துக்கு மத்தியில் கிஸ் எப்படி கொடுக்கறதுனு யோசிக்கும்போதே, படபடப்பு வந்துடும். டென்ஷனை எல்லாம் மறைச்சுட்டு முகத்துல ரொமான்டிக்  மூட் கொண்டு வர்றது நிஜமாகவே டஃப்போ டஃப்.

இப்பவும் கிஸ்ஸிங் சீன் ஷூட் பண்றப்ப கை கால் எல்லாம் உதறுது!
டென்ஷனை எப்படி சமாளிக்கறீங்க..?

ரொம்பவும் சிக்கலான தருணங்களை கவனமா சந்திச்சு, சமாளிச்சிருக்கேன். ஒருசில நேரங்கள்ல என்னோட ரெண்டு படங்களின் ஷெட்யூலும் ஒரே நேரத்துல கிளாஷ் ஆகிடும். தேதிகள் ஒண்ணுக்கொண்ணு ஸிங்க் ஆகி, நம்மளை பதட்டமாக்கிடும். அப்படித்தான் லாக்டவுனுக்கு முன்னாடி பிரபாஸ் பட ஷூட்டிங்கிற்கு கூப்பிட்டாங்க. ஆனா, அப்ப நான் இத்தாலியில் இருந்தேன். அப்புறம், ஒருவழியா தேதிகளை சரி செய்து கொடுத்தேன்.
பிரபாஸோடு நடிக்கறது ஹேப்பி. அவர் ரொம்பவே சிம்பிள்.

‘பாகுபலி’, ‘சாஹோ’வுக்குப் பிறகு அவர் இன்டர்நேஷனல் ஸ்டார் ஆகிட்டார். ஆனாலும் இன்னமும் சிம்பிள் அண்ட் ஹம்பிள் மேன்தான். நான் ஃபாரீன்ல இருக்கும் போது ‘நீங்க பிரபாஸின் ஜோடியா நடிக்கிறீங்களா? வாவ்வ்வ்’னு என்னோட நட்பு வட்டமே கேட்டு ஆச்சரியமானாங்க. அப்படி ஒரு கிரேஸ் அவருக்கு இருக்கு!

மை.பாரதிராஜா