யார் இந்த மியா கலிஃபா? நம்பர் 1 porn star



உலகிலேயே அதிக முறை இணையத்தில் தேடப்பட்ட ஆபாசப்பட நடிகை...

மியா கலிஃபா... இது வெறும் பெயர் அல்ல; இணையத்தை அதிரவைத்த மெகா பிராண்ட். 300 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளிய வீடியோக்களில் நடித்தவர். இரண்டு கோடிக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் என மியாவின் புரொஃபைலை அடுக்கிக்கொண்டே போகலாம். இத்தனைக்கும் மூன்று மாதங்கள் மட்டுமே ஆபாசப்படங்களில் நடித்தார்; ஈட்டிய வருமானம் 12 ஆயிரம் டாலர். அதாவது 8.83 லட்ச ரூபாய்!யார் இந்த மியா கலிஃபா?

27 வருடங்களுக்கு முன்பு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பிறந்த மியா கலிஃபாவின் இயற்பெயர் சாரா ஜோ சாமூன்.
மியா கலிஸ்ட்டா என்று வீட்டில் செல்லமாக அழைக்கப்பட்டார். அம்மா ரிமா. கண்டிப்பான அப்பா ஆண்டன் சாமூன். பழமைவாதத்தைப் பின்பற்றும் கிறிஸ்துவக் குடும்பமாக இருந்ததால் மிகுந்த கட்டுக்கோப்புடன் வளர்க்கப்பட்டார் மியா.

பெய்ரூட்டில் புகழ்பெற்ற ப்ரெஞ்ச் தனியார் பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். இங்கே படித்தால் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்
படவே தேவையில்லை. ஆனால், தொடர்ந்து அங்கே மியாவால் படிக்க முடியவில்லை. ஆம்; தொண்ணூறுகளில் நடந்த இஸ்ரேலுக்கும் லெபனானுக்கு மிடையிலான போர் மியாவின் வாழ்க்கையிலும் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டது. உயிரைத் தற்காத்துக்கொள்ள வேறு நாட்டுக்குப் போகவேண்டிய நிலைக்கு அவரது குடும்பம் தள்ளப்பட்டது.

2001ல் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். அப்போது மியாவின் வயது 8. லெபனானில் இழந்த அமைதியை அமெரிக்காவும் திருப்பித் தரவில்லை. இங்கே விதி வேறு வடிவில் விளையாடியது. மியா அமெரிக்காவுக்கு வந்த இரண்டாவது வாரத்தில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் உலகையே உலுக்கி எடுத்தது. மாநிறம், லெபனானின் குடிமகள்  என்பதால் மியாவையும் அவரது குடும்பத்தினரையும் தீவிரவாதிகள் போல சுற்றி
யிருப்பவர்கள் பார்த்தனர். பல நாட்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்தனர். அத்துடன் குண்டுப் பூசணிக்காய் போன்ற தோற்றம் மியாவை சக குழந்தைகளிடமிருந்து அந்நியப்படுத்தியது.

லெபனானில் விட்ட பள்ளிப் படிப்பையும் கல்லூரியையும் அமெரிக்காவில் தொடர்ந்தார். சிறு வயதிலிருந்து அமெரிக்காவிலே படித்ததால்தான் அவரால் ஆங்கிலத்தை சரளமாகப் பேச முடிகிறது. படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாலும் விளையாட்டில்தான் மியாவுக்கு ஆர்வம் அதிகம். ஸ்போர்ட்ஸ் பிரசென்டராக வேண்டும் என்பது அவரது கனவு. ஃபுளோரிடா ஸ்டேட் செமினோல்ஸ் கால்பந்து அணியின் தீவிர ரசிகை.  
ஆனால், அவரது நிறமும் தோற்றமும் விளையாட்டை வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்துவிட்டது. தோற்றத்தைப் பற்றி சக மாணவர்கள் கேலி செய்வதை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

கல்லூரி வந்ததும் அவருக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகமானது. அப்போதிருந்தே மற்றவர்களைக் கவர வேண்டும்; குறிப்பாக ஆண்கள் விரும்பும் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசை அவரின் மனதுக்குள் வளரத் தொடங்கியது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பிஏ வரலாறு சேர்ந்தபிறகு எடைக்குறைப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். படிப்பை முடிப்பதற்குள் 50 பவுண்ட் எடையைக் குறைத்து ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறினார். அத்துடன் மார்பகங்களை அறுவை சிகிச்சை செய்து அழகை மெருகேற்றினார்.

முதல் முறையாக ஆண்களின் பார்வை அவர் மீது திரும்பியது. அவர்கள் மியாவின் அழகைப் புகழ்ந்து பேசினார்கள். படிக்கும்போதே பார்டெண்டர், ப்ரீஃப்கேஸ் கேர்ள், மாடல் என பல வேலைகளைப் பார்த்து பெற்றோரை எதிர்பார்க்காமல் தன்னுடைய பொருளாதாரத்தையும் அவரே கவனித்துக் கொண்டார்.

18 வயதில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர் வயாட் ஓ ப்ரையனைத் திருமணம் செய்து கொண்டார். இப்படி எல்லோரையும் போல சாதாரணமாகச் சென்று கொண்டிருந்த மியா கலிஸ்ட்டாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது அந்தச் சம்பவம்.

2014ம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் மியா தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தார். எதேச்சையாக ஆபாசப் படத் தயாரிப்பாளர் ஒருவரின் கண்ணில் பட்டார் மியா. ‘‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. மாடலிங் செய்தால் உங்க எதிர்காலம் நல்லா இருக்கும். உங்க உடற்கட்டுக்கு நிர்வாண மாடல் செமையா இருக்கும்...’’ என்று ஐஸ் வைக்க, மியாவும் குளிர்ந்து போய் ஓகே சொல்ல, பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.
வெகு நாட்களாக ஆண்களிடம் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைத்துவிட்டது என மகிழ்ச்சி யில் துள்ளிக் குதித்தார் மியா. ஆனால், அந்த நபர் ஆபாசப் படங்களில் நடிக்கத்தான் தன்னை அணுகியிருக்கிறார் என்பது பிறகுதான் மியாவுக்குத் தெரியவந்தது.

ஆபாசப் படப்பிடிப்பு நடந்த இடம், சூழல் எல்லாமே மியா கலிஸ்ட்டாவுக்குப் பிடித்துப் போக, மியா கலிஃபாவாக மாறி களத்தில் குதித்தார். இந்த விஷயம் அவரது கணவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.ஒரு ரகசியம் போல ஆபாசப் படங்களில் நடித்தார். லட்சக்கணக்கான பெண்கள் இதில் நடிக்கிறார்கள். அவர்களின் உண்மையான பெயர் கூட வெளியில் தெரியாது. அவர்களை வெளியில் பார்த்தால் கூட யாராலும் சுலபமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.

இதுமாதிரி தானும் வெளியில் தெரிய வாய்ப்பே இல்லை என்று நினைத்தார். அதனால் எந்தவிதமான தயக்கமும் அச்சமுமின்றி நடித்தார்.
ஆனால், நடந்தது வேறு.இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தாஅணிந்து ஒரு வீடியோவில் நடிக்க, அது பட்டி தொட்டியெல்லாம் பரவி மியா கலிஃபாவின் பெயர் தலைப்புச் செய்தியாகிவிட்டது. பல இடங்களில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இஸ்லாமிய அமைப்புகள் மியாவின் வரலாற்றைத் தோண்டி எடுத்துவிட்டனர்.

மியா ஆபாசப் படங்களில் நடிப்பது வீட்டுக்குத் தெரியவர, அன்றிலிருந்து பெற்றோர்களும் சில உறவினர்களும் நண்பர்களும் மியாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர். இன்றும் கூட அவர்கள் பேசுவதில்லை. இன்னொரு பக்கம் பர்தா அணிந்து நடித்ததற்காக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொலை மிரட்டல் அவரை உறங்கவிடவில்லை. பர்தா வீடியோவின் ஹிட்டைத் தொடர்ந்து மியாவின் மற்ற வீடியோக்களும் வைரல் ஆயின.

லட்சத்தில் ஒருத்தியாக, நம்பர் ஒன் ஆபாசப்பட நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார் மியா. அவர் டிஸ்னிலேண்டுக்குச் சென்றால் கூட அங்கிருப்பவர்களால் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு உலகப் பிரபலமாகிவிட்டார்.இத்தனைக்கும் பர்தா அணிந்து நடிக்க அவருக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. அதை வெளிப்படையாகச் சொல்ல பயம். தயாரிப்பாளர் கேட்டுவிட்டார் என்பதால் ஒருவித தயக்கத்துடனே நடித்திருக்கிறார்.
மியாவின் புகழ் பரவ, ஆபாசப் படத் தயாரிப்பு நிறுவனங்கள் ஒப்பந்தம் போட வரிசை கட்டி அவரது வீட்டின் முன் நின்றன.

ஆனால், மியாவோ இனிமேல் ஆபாசப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று சொல்ல, இணையமே அதிர்ந்தது. கொலை மிரட்டல், அதீதமான பிரபலம், பெற்றோர், உறவினர்களுடனான கசப்பு எல்லாம் சேர்ந்து அவரை ஆபாசப் படத் துறையை காலாகாலத்துக்கும் வெறுக்க வைத்துவிட்டது.
அடுத்த சில மாதங்கள் வெப் கேம் மாடலாகவும் ஸ்போர்ட்ஸ் டாக் ஷோவிலும் பணிபுரிந்தார். அதீத பிரபலம் கொடுத்த அதிர்ச்சியால் அவரால் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியவில்லை.

‘‘யாராவது என்னைப் பார்த்தாலே ஆடைக்குள் நுழைந்து பார்ப்பதைப் போல உணர்கிறேன்...’’ என்று கண்ணீர் விட்டார். எந்த வேலையிலும் சேர முடியவில்லை. அப்படியே சேர்ந்தாலும் சில நாட்கள்தான்.தவிர, 2014ல் கணவர் வயாட்டை விட்டு பிரிந்து தனியாக வாழ வேண்டிய சூழல். 2016ல் முறைப்படி விவாகரத்தும் பெற்றுக்கொண்டார்.

துறையில் இல்லாவிட்டாலும் மியாவின் புகழ் மங்கவில்லை. சமூக வலைத்தளங்களில் அவர் நுழைந்ததுமே மில்லியன் கணக்கானோர் பின்தொடர ஆரம்பித்தனர். இதை வைத்து நன்றாகவே வருமானம் பார்த்து வருகிறார். விளையாட்டு மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் அவ்வப்போது தலைகாட்டுகிறார்.

தான் யாரென்று தெரியாத, தன்னை முழுமையாகக் காதலிக்கும் ஓர் ஆணுக்காக வெகு நாட்கள் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த அத்தனை குணங்களுடனும் ஸ்வீடனைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சேண்ட்பெர்க் இருந்தார்.

2019ல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா லாக்டவுனுக்கு நடுவில் ஜூன் மாதம் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடந்தது. கொரோனா சரியானபிறகு வரவேற்பை விமரிசையாக  நடத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார். கடந்த கால ரணங்களில் இருந்து மீண்டுவிட்ட மியாவால் இன்று வெளியில் சுதந்திரமாக வர முடிகிறது. மற்றவர்களின் பார்வை அவரைப் பாதிப்பதில்லை. அடுத்து அம்மாவாக புரொமோஷன் ஆகவேண்டும் என்பது அவரது ஆசை; கனவு.  

த.சக்திவேல்