HOT கிசுகிசு



நடிகைக்கு தாராளம் காட்டிய நடிகர்!

டைரக்டர் டூ   ஹீரோ டூ குணச்சித்திரம் என ட்ராவல் ஆன உயர நடிகரைப் பற்றித்தான் கோலிவுட்டில் பேச்சாம். ஆரம்ப கால படங்களில் சின்னச்சின்ன வேடத்தில் நடித்த நடிகையுடன் ‘டூயட்டில்’ இருக்கிறாராம் நடிகர். சமீபத்தில் வெளிநாடு சென்ற அந்த நடிகை, ஏர்போட்டில் காஸ்ட்லியான வைர நெக்ஸலைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு  வீசியதுடன் அதன் விலையையும் விசாரித்திருக்கிறார்.

செம காஸ்ட்லியான அந்த நகையின் விலையில் மூன்றில் ஒரு பர்சன்ட் கூட நடிகையின் பர்சில் இல்லையாம். ஆனாலும் நடிகை அசராமல் உடனே ஒரு வேலை செய்தார். சம்பந்தப்பட்டவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். தட்டிவிட,  அந்த நெக்லஸ் கடை அக்கவுன்ட்டுக்கே டிஸ்கவுன்ட் ஆஃபர் கூட கேட்காமல் முழு அமௌண்டும் கிரெடிட் ஆகிவிட்டதாம். நடிகரின் சின்ஸியாரிட்டியைக் கண்டு ‘வாவ்’ கொட்டுகிறார்கள்.

புது ஆசை

நடிக்க வேண்டிய படங்கள் கைவசம் இரண்டு இருந்தும், பாலிடிக்ஸ் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர். அவரது வழியில் ஹீரோயினாகிவிட்ட மகளுக்கு, இப்போது அப்பாவைப் போல அரசியலில் ஆர்வம் வந்துள்ளதாம். மீட்டிங் கிளம்பிக்கொண்டிருந்தவரைப் பார்த்து,  ‘‘நானும் கூட வர்றேன்ப்பா...’’ எனக் குழந்தையாய்  அடம்பிடிக்க.. மகளைப் பார்த்து அப்பாவுக்கு ஜிவ்வென கண்கள் சிவந்துவிட்டதாம்.

கடுப்பாகி கிளம்பிய  இயக்குநர்

பாரீனில்  இருந்தபடியே இங்கே முதலீடு செய்து வரும் படக்கம்பெனி, செலவு இழுத்து விடும் இயக்குநரின் படத்தைத் தவிர்த்து, அடுத்தடுத்த ஹீரோக்களின் படங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் கடுப்பான இயக்குநர், ‘‘நீங்க இப்படி ஜவ்வாக இழுத்தால் படத்தை எப்போ எடுத்து... எப்போ முடிக்கிறது..?’’ எனக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

அவர் சொல்வதை  மௌனமாகக் கேட்டுக்கொண்ட கம்பெனி, ‘‘மொதல்ல  ரிலீஸ் தேதியைச் சொல்லுங்க. அக்யூரேட்டாக் கூட சொல்ல வேணாம்.. ரஃப்பாகவாவது ஒரு டேட் சொல்லுங்க.. இப்பவே   ஷூட்டுக்கு கிளம்பிடலாம்...’’ என கறாராக சொன்னதில், கடுப்பாகிவிட்ட  இயக்குநர்  அன்றைக்கே ஹைதராபாத் பஸ்சைப் பிடித்து போய்விட்டார்.

நடிகை லாக் ஆனதன் சீக்ரெட்..

முதல் படத்திலேயே அசத்தல் பர்ஃபாமென்ஸ் செய்து, அவார்டு மேல் அவார்டில் குளித்த நடிகை, அடுத்து படங்களே பண்ணாமல் காணாமல் போனவர்களின் லிஸ்ட்டில் சேர்ந்தார். இப்போது கிட்டத்தட்ட அறிமுக நடிகை ரேஞ்சில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். ‘‘நடிகைக்கு என்னாச்சு? ஏன் அப்ஸ்காண்ட் ஆனாங்க..?’’ என விசாரித்தால்.. அதன்  பின்னணி இப்படியா சங்கதி என திகைக்க வைக்கிறது.

எல்லாம் அந்த இயக்குநரால் வந்த விளைவாம். நடிகையிடம் ‘‘என் படத்துல நடிச்சதாலதான் உனக்கு பெயர். உனக்கு ஸ்டோரி நாலேஜ் கம்மி.. அதனால நான் சொல்லாமல் ரெண்டாவது படமாக நீ கமிட் ஆகிடாத...’ என சொல்லி அப்பாவி பொண்ணை லாக் செய்து வைத்ததுதானாம். இப்போது ஞானோதயம் வந்து திருந்திவிட்டார். நடிகைக்கு நல்ல நல்ல கதைகள் வந்தபோதெல்லாம், அதைக் கெடுத்துவிட்டவர் மேல் செம காண்டில் இருக்கிறாராம் நடிகை.

ஷியஸ்