வலைப்பேச்சு



@Mugil Siva - பொழுது போகாத சின்னம்மா, குத்துமதிப்பா ஏதேதோ நம்பருக்கெல்லாம் போன் பண்ணி பேசறாங்களாம்! அப்படி தப்பித் தவறி உங்களுக்கு அழைப்பு வந்தா நீங்க சின்னம்மாகிட்ட என்ன கேட்பீங்க?

@Vasu Devan - ஒரு வாரமாக அரசு சுகாதார மையங்களில் (PHC) அலைந்து வருகிறேன்.  இரண்டாவது டோஸ் கோவி ஷீல்ட் இன்னும் கிடைத்த பாடில்லை. அடையாறு, வேளச்சேரி, பெசன்ட்நகர், ஆர்.ஏ.புரம் மையங்கள் சில மூடப்பட்டுள்ளன. இன்னும் சில மையங்களில் 50 - 100 ஊசிகள் மட்டுமே தினம் போடப்படுகின்றன.  

முழுக்க முழுக்க  தடுப்பூசிகள் தனியாருக்கு  தாரை வார்க்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் தங்கு தடையின்றி கிடைக்கிறது.  அடிப்படையான மருத்துவ சேவையை முழுவீச்சில் தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கின்றன. நம்மைப் போன்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பிரச்சினையில்லை. அடித்தட்டு மக்கள்  தடுப்பூசி இல்லாமல் அவதிப்படுவது மட்டுமல்லாமல் அடுத்த அலை நோய்த் தொற்று வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியுள்ளார்கள். மிக ஆபத்தான நிலைமை...

@Karkuzhali Sreedhar - கிளப்ஹவுஸ் செயலியின் சின்னம் மாறியிருப்பதை இன்றுதான் கவனித்தேன். புதிய சின்னத்தில் இடம்பெற்றிருக்கும் டண்டரா பகு (Dandara Pagu) என்ற கறுப்பழகி பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அகமலர்ந்து அவர் சிரிக்கும் இந்தப் புகைப்படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

சமூக சேவகர், தயாரிப்பாளர், உடலழகை நேர்மறையாக அணுக உதவும் தலைவர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், கறுப்பினப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றுபவர் என்ற பன்முகங்களைக் கொண்டிருக்கிறார். தன்னுடைய ஆளுமை, ஆற்றல், நயமிக்க பண்பு இவற்றால் முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுத் தன்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

கிளப்ஹவுஸில் பொருளாதாரம், இனவாதம் போன்ற பதற்றம் ஏற்படுத்தக்கூடிய தலைப்புகளில் கலந்துரையாடல்களை நெறியாள்கை செய்தார். ஒருவரையொருவர் முன்பின் அறிந்திராதவர்கள் பேசிக்கொள்ளும்போது அவர்களிடையே பாலமாகச் செயல்பட்டார். மாறுபட்ட அரசியல் சமூகக் கருத்தியல்களைக் கடந்தும் மக்கள் கலந்துரையாடல் செய்ய உதவி வருகிறார். ‘‘இனி யாரும் சார்புநிலையின்றி இருப்பது இயலாத காரியம். இன்னமும் மதில்மேல் பூனையாக இருந்தீர்களானால் விரும்பியோ விரும்பாமலோ வன்முறைக்கும் அவமரியாதைக்கும் துணைபோகிறீர்கள் என்றுதான் பொருள்...’’ என்கிறார்.

டண்டரா பகு இளவயது முதல் வறுமை, வன்முறை, இனவாதம் போன்ற கொடுமைகளைச் சந்தித்து வளர்ந்தவர். ஆனால், உளவியல் சிகிச்சைமூலம் ஆழ்ந்த ஒத்துணர்வையும் நன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டது உணர்வுசார்ந்த வலியை எதிர்கொள்ளவும் வாழ்க்கையில் தொடர்ந்து பயணம் செய்யவும் உதவியது என்கிறார்.
‘‘என்னைப்போலவே மற்றவர்களும் மாறமுடியும்; மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். நம் ஒவ்வொருவரின் கையிலும் அதற்கான ஆற்றல் இருக்கிறது...’’ என்கிறார்.

@Saravanakarthikeyan Chinnadurai - தபு அவரோடு நடித்த எல்லா நாயகர்களுக்குமே அக்கா போல்தான் இருக்கிறார். அனேகமாக அவர் பிறந்த போது அவர் அப்பாவுக்கே
அக்கா போல்தான் இருந்திருப்பார் என ஊகிக்கிறேன்.

@mohanramko - ஆவின் விளம்பரத்துக்கு, வாசகம்... ‘ஸ்வீட் எடு, கொண்டாடு’! நல்லா இருக்காண்ணே..?

@Sivaji_KS - மீ : அண்டாவைத் தூக்கிட்டு எங்க போற?
சங்கி : நானும் Village Cooking மாதிரி சமைக்கப் போறேன்.
மீ : என்ன சமைக்கத் தெரியும்?
சங்கி : சுடுதண்ணி வைக்கத் தெரியும்!

@angry_birdu -
பெட்ரோல் விலை - ரூ.39.29.
ஒன்றிய அரசு வரி  - ரூ.32.90.
டீலர் கமிஷன் - ரூ.3.82.
மொத்தம் - ரூ.76.02.
மாநில அரசு வரி - ரூ.24.42 (15% + ரூ.13.02).

விற்பனை விலை - ரூ.100.44.
ஒன்றிய அரசின் வரியான ரூ.32.90ல் 57 காசுகள் மட்டுமே மாநிலங்
களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதில் தமிழ்நாட்டுக்கு கிடைப்பது 2
காசுகள்.

@Giri47436512 - நாலு எழுத்து தெரிஞ்சா போதும்னு நெனக்கறவங்க ‘கண் டாக்டர்’ மட்டும்தான்!

@Suyanalavaathi - அண்ணே...
ஸ்வீட் வேணும்...
சொல்லுப்பா... எவ்ளோ ஸ்வீட் வேணும்..?
முதல்ல 1.5 டன் சாம்பிள் குடுங்க..!

@teakkadai1 - உறவு / நட்பில் நாம் ராஜாவைப் போல் இருந்தால் ராஜாவைப் போல் தனியாய் இருக்க வேண்டும். Down to earth ஆக இருந்தால் உதாசீனப்படுத்தப் படுவோம். இதில் equilibrium maintain பண்ணுவது ஒரு கலை.

@saravankavi - இந்தாம்மா சசிகலா... நீங்க இப்படியே ஊர்ல இருக்கிற அதிமுக ஆளுங்களுக்கு போன் போட்டு பேசிக்கிட்டு இருங்க... அங்க என்னடான்னா அமமுக ஆளுங்க எல்லாம் திமுகவுல சேர்ந்துக்கிட்டு இருக்காங்க...

@SHIJA25 - தமிழக மக்களுக்காக சிறையில் மாதக்கணக்கில் விரதம் இருந்தேன் - சசிகலா
அப்புறம் எதுக்கு ஊதுபத்தி உருட்டுனீங்க..? ஓ... விரதத்திற்கு கொளுத்தி வைக்கவா?!

@Aakashkannan96 - சமைக்கும் பெண்ணின் மகிழ்ச்சியும், துக்கமும் உணவின் ருசியில் வெளிப்படுகிறது..!

@Kozhiyaar - நெடுஞ்சாலையில் நடுவில் புகுந்து வரும் இரு சக்கர வாகனங்களைத் தடுக்க, இரு சாலைகளுக்கு இடையில் அகழி வெட்டி அதில் முதலைகளை விட்டால்தான் முடியும் போல!

@ramjiyahoo - உண்மையான சமூக ஆர்வலர் இவரே!

@nagapattinathan - நண்பர்களிடம் இருக்கும் சகிப்புத்தன்மை நம் வீட்டிலும் இருக்க வேண்டும்.

@ArunKMurugesan - ஒரு பொருள் வாங்குவதற்கான யோசனையில் இருக்கும் வரைதான் அம்மா அதற்கு சம்பந்தம் இல்லாதவளாக இருப்பாள். அது வீட்டுக்குள் வந்தவுடன் அது அம்மாவினுடையதாக மாறிவிடும்!

@ItsJokker - தம்பி... விறகடுப்பு சாப்பாடு உடம்புக்கு எவ்ளோ நல்லது தெரியுமா..? அதுல சாப்ட்டா டேஸ்ட்டா இருக்கும் தெரியுமா..?
என்ன பிரச்சனை இப்போ..? கேஸ் விலைக்கு முட்டு குடுக்கறியா..?
ஏதே... ஆமா... என்ன இப்ப?!

@RajaAnvar_Offic - ப்ரெஸ்டீஜ் என்றவுடன் ‘குக்கர்’ ஞாபகம் வந்தால் நீ மனுசன்... ‘கெளரவம்’ படம் ஞாபகம் வந்தால் நீ பெரிய மனுசன்!

@manipmp - மாஸ்க் போட்டதிலிருந்து இப்பெல்லாம் வாயை ஊதுங்கனு சொல்வது வழக்கொழிஞ்சு போச்சு.

@kusumbuonly - பலருக்கு அவதூறுக்கும், விமர்சனத்துக்கும் வித்தியாசம் தெரிய மாட்டேங்குது.
கொரோனா இரண்டாம் அலையை மோடி மிகச்சிறப்பாக கையாண்டார் - அவதூறு.
நமக்கு போதுமான தடுப்பூசிகளை இருப்பில் வைக்காமல் வெளிநாடுகளுக்கு மோடி விற்றார் - விமர்சனம்.

@Gokul Prasad - ‘Public figures to follow’-வில் பிரபலமான பெண்களின் பக்கங்களை மட்டுமே முகநூல் எனக்குப் பரிந்துரைக்கிறது. ஏராளமான நடிகைகளைப் பின்தொடர்வதால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது என நினைத்து எனக்குப் பிடித்தமான ஆண் எழுத்தாளர்களின், நடிகர்களின், இயக்குநர்களின், இசைக்கலைஞர்களின் பக்கங்களைத் தேடிப் பிடித்து அவற்றிற்கு வகைதொகையின்றி லைக் கொடுத்து ஒரு வாரமாகிவிட்டது. இப்போது பார்த்தால் நடிகைகளின் பக்கங்களை மட்டும் காண்பிக்காமல் பெண் எழுத்தாளர்களின், பிற துறைகளைச் சேர்ந்த பெண் சாதனையாளர்களின் பெயர்களாக எடுத்துக் காட்டுகிறது. பெண்களை மட்டுமே ஆராதிப்பேன் என முகநூல் அல்காரிதம் முடிவுசெய்து விட்டதா? ஆனால், ‘People you may know’-வில் பெண்களின்தடயமே இன்றி எல்லாமே ஆண்களின் முகநூல் கணக்குகளாக இருக்கின்றன.

கைக்கு எட்டாத தொலைவிலுள்ள பிரபல பெண்களைப் பின்தொடரலாமாம். நட்பில் இணையக்கூடிய வாய்ப்பிருக்கும் பெண்களின் முகநூல் பக்கங்களைக் காண்பிக்கக்கூட முடியாதாம்.
இது என்னமாதிரியான விநோத டிசைன் எனத் தெரியவில்லை. ஒரு மனிதனுக்கு எதிராக எத்தனை சதிகள் நடக்கின்றன!

@barathithambi - ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழலுக்கான முகாந்திரம் இல்லை என்று இந்திய சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், இந்த ரஃபேல் விவகாரத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக பிரான்சில் இப்போது பெரும் புயல் கிளம்பியிருக்கிறது.

@Rajesh Kumar - வேலை தேடும்போது ஒரே ஒரு ரெஸ்யூமை தயார் செய்து வைத்துக்கொண்டு அதையே எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கக் கூடாது. எந்த வேலைக்கு அப்ளை செய்கிறோமோ அந்த வேலைக்கு ஏற்ப ரெஸ்யூமை customize செய்ய வேண்டியது முக்கியம்.ரெஸ்யூம் அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் என்றால் அதில் முதல் பக்க ரியல் எஸ்டேட் மிக மிக மதிப்பானது. அதை பார்ப்பவர்கள் 30 விநாடிகளில் நம்மைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

எனவே டெக்னிகல் வேலை என்றால் தொழில்நுட்ப திறமைகள், மேனேஜ்மென்ட் வேலை என்றால் நிர்வாகத் திறமை என்று நாம் வேலையின் தேவைக்கேற்ப நம்மைப்பற்றி எதை ஹைலைட் செய்ய விரும்புகிறோமோ அதை அந்த 30 விநாடிகளுக்குள் ரெக்ரூட்டரின் மனதில் பதிய வைக்க வேண்டியது அவசியம்.அதற்காக இல்லாததை இருப்பதாக பொய் சொல்ல வேண்டும் என்பதில்லை. எல்லாம் நம்மிடம் ஏற்கனவே இருக்கும் திறமைகள்தான், ஆனால் அதை தேவைக்கு ஏற்றபடி எப்படி ஹைலைட் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
புகைப்படம்: @ActressShivanii

@mozhi221087 - விலகித்தானே இருக்கச் சொன்னேன்... விலக்கி வைக்கச் சொல்லலையே...இப்படிக்கு கொரோனா!

@LAKSHMANAN_KL - நீர் அடித்து நீர் விலகாது! - சசிகலா.
அந்த நீர் ‘பன்னீர்’தானே..?!