நான் லக்கி கேர்ள்! பூரிக்கும் பவ்யா த்ரிகா



பக்கத்து வீட்டுப் பெண் சாயல், குறும்புப் பார்வை, புரியாத மொழியில் வசனங்கள் என ‘கதிர்’ படத்தின் மூலம் லுக், நடிப்பு என பவ்யா த்ரிகாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. அடுத்தடுத்த படங்களிலும் பொண்ணு இப்ப செம பிஸி.
‘‘பெரிய நடிகர் ஆகணும்னு எங்கப்பா விரும்பினார். ஆனா, அன்னைக்கு இருந்த சூழல் அவரால சினிமால சாதிக்க முடியல. அவருடைய ஆசையும் என்னுடைய ஆசையும் சேர்ந்து நான் முயற்சி செஞ்சேன்... இப்ப நீங்க பேட்டி எடுக்கற நிலைக்கு வந்திருக்கேன்...’’ புன்னகைக்கிறார் பவ்யா த்ரிகா. உங்களைப் பற்றி சொல்லுங்க!

பேசிக்கலி பஞ்சாபி பொண்ணு. அப்பாவும் அம்மாவும் தில்லி, அம்ரிஸ்தரை சேர்ந்தவங்க. அப்பா ஐஆர்எஸ் ஆபீஸரா இருக்காரு. எனக்கு சினிமாவில் ஆர்வம் அதிகம். ஸோ, மாடலிங் செய்ய ஆரம்பிச்சேன். எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில பட்டப்படிப்பு, மைக்கேல் இன்ஸ்டிட்யூட்ல டிஜிட்டல் மார்க்கெட்டிங் கோர்ஸ் படிச்சேன். சின்ன வயசுல இருந்தே நிறைய விளம்பரங்களில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

முதல் வாய்ப்பு எப்படி அமைந்தது?

போட்டோகிராஃபர் வெங்கட்ராமன் சார்தான் காரணம். அவருடைய ஒரு ப்ராஜெக்ட்ல அப்பா வேலை செய்துட்டு இருந்தார். நான் சும்மா துணைக்கு போவேன். ஒருநாள் வெங்கட்
ராமன் சார் சும்மா ஒரு டெஸ்ட் எடுத்தார். அந்த மொமெண்ட்ல இருந்துதான் நடிக்க ஆரம்பிச்சேன். இதுவரையிலும் சுமார் 200க்கும் மேலான விளம்பரங்கள்ல நடிச்சிட்டேன்.

முதல் பட வாய்ப்பு எப்படி அமைஞ்சது?

சோஷியல் மீடியா மத்தவங்க லைஃப்ல என்ன பண்ணும்னு தெரியாது. ஆனா, எனக்கு இந்த கரியர் ஆரம்பிச்சது சோஷியல் மீடியா மூலமாதான். ‘கதிர்’ பட டைரக்டர் தினேஷ் பழனிவேலுக்கும் எனக்கும் பொதுவான சோஷியல் மீடியா நண்பரொருவர் என் பெயரை தினேஷ் சார்கிட்ட சிபாரிசு செய்தார். அவங்களுக்கும் ஒரு கேர்ள் நெக்ஸ்ட் டோர் மாதிரி ஒரு பொண்ணு தேவைப்பட்டிருக்காங்க. அப்படித்தான் ஆடிஷன்ல கலந்துகிட்டேன். செலக்ட் ஆனேன். மூணே நாட்கள்ல ஷூட்டிங் ஆரம்பிச்சிடுச்சு.

உங்க பேவரிட் நடிகர் யார்?

எப்பவுமே சூர்யாதான்.

உங்க ட்ரீம் ரோல் என்ன?

எல்லா கேரக்டரும் நடிக்கணும்... குறிப்பா ‘பத்மாவத்’ இந்திப் படம் மாதிரி ஹிஸ்டாரிக்கல் படங்களிலும் நடிக்கணும்.

முதல் படம் வெளியானப்ப உங்க மனநிலை எப்படி இருந்தது..?

எத்தனையோ படங்கள் ஓடிடி பிளாட்பார்ம்ல ரிலீஸ் ஆகிட்டு இருக்கும்போது நான் நடிச்ச படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருக்கு. உண்மைலயே இதை பெரிய லக்கா நினைக்கறேன். நான் லக்கி கேர்ள்! படத்துக்கும் விமர்சன ரீதியா நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. என் கேரக்டரையும் குறிப்பிட்டு பாராட்டறாங்க.

உண்மைலயே சந்தோஷமா இருக்கு.சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் இதெல்லாம் பெரிய விஷயமா தெரியல. ஆனா, ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் ஸ்பாட்ல நடக்கற விஷயங்களைப் பார்க்கும்போதுதான் சினிமா எவ்வளவு கஷ்டம்னு புரியுது.  

உங்க ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்..?

வொர்க் அவுட் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். விதவிதமா வொர்க் அவுட் செய்வேன். யோகா, சைக்கிளிங், டிரெக்கிங், டான்ஸ்... இப்படி நிறைய வெரைட்டிகள்ல வொர்க் அவுட் செய்றது ரொம்ப பிடிக்கும்.

அடுத்த படம் பத்தி சொல்லுங்க?

நிறைய வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கணும். இப்போதைக்கு ஜி.வி பிரகாஷ் சார் கூட ஒரு படம் நடிச்சு முடிச்சிருக்கேன். அது என்ன படம், என்ன தலைப்புனு இப்ப சொல்ல முடியாது. கூடிய சீக்கிரம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும்.  

ஷாலினி நியூட்டன்