ஹீரோயின் ஆகிறார் சச்சின் மகள்?



கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தை வழியில் கிரிக்கெட்டில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால், சச்சினின் மகள் சாரா டெண்டுல்கரோ லண்டனில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சாராவை டுவிட்டரில் 1.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அடிக்கடி சாரா வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் பிரபலம். கடந்த ஆண்டே அவர் சில பிராண்ட் விளம்பரங்களில் நடித்துள்ளார். நடிகை பனிதா சந்து, தனியா ஸ்ரப் ஆகியோரும் சாராவுடன் நடித்திருந்தனர்.

மருத்துவம் படித்துள்ள 24 வயது சாராவுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதாலேயே விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்... விரைவில் பாலிவுட்டிலும் என்ட்ரி ஆவார்... அதற்கான வேலைகள் நடக்கின்றன... சச்சினும் அவரது மனைவி அஞ்சலியும் மகளின் ஆசைக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டனர்... என வட இந்திய மீடியாக்கள் ஸ்கூப் நியூஸாக வெளியிட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சாஹித் கபூர் நடிக்கும் படத்தில் சாரா அறிமுகமாக இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், அப்போது அந்தச் செய்தியை சச்சின் டெண்டுல்கர் மறுத்தார்.

‘‘எனது மகள் இப்போது படிப்பில் கவனம் செலுத்துகிறார்... அதில் அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்... அவர் படத்தில் நடிப்பதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை...’’ என்றார்.
இப்போதும் அதே முடிவில்தான் சச்சின் இருக்கிறாரா..? தெரியவில்லை.ஆனால், சச்சின் மகள் சாரா சமூக வலைத்தளங்களிலும், மாடலிங்கிலும் பிசியாக இருப்பது என்னவோ உண்மை.
மீடியா அலறுவதுபோல் ஒருவேளை சாரா நடிக்கத் தொடங்கிவிட்டால் தமிழுக்கு வருவார்... ‘குங்குமம்’ வார இதழின் அட்டையை அலங்கரிப்பார்!
பொறுத்திருப்போம்!

காம்ஸ் பாப்பா