பெல்ட் செய்து பின்னி எடுங்க!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                ஜீன்ஸ், ஸ்கர்ட், மிடி... இப்படி எந்தவித வெஸ்டர்ன் உடை அணிந்தாலும், அதற்கு அழகு சேர்க்கும் வகையில் பெல்ட் அணிவது இன்றைய இளம்பெண்களின் ஃபேஷன். பெல்ட் என்றால் லெதரிலோ, ரெக்சினிலோ செய்யப்படுபவை அல்ல... பெரிய பெரிய மணிகளும் முத்துகளும் வளையங்களும் பொருத்திய விதம்விதமான கயிறுகளில் செய்யப்படுகிற பெல்ட்கள்!

குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அணியும் விதம் விதமான பெல்ட்டுகள் செய்வதில் நிபுணி, விருத்தாசலத்தை சேர்ந்த மாயாவதி. ‘‘படிச்சது பிளஸ் 2. எந்த கைவினைப் பொருளைப் பார்த்தாலும், உடனே பண்ணிப் பார்த்துக் கத்துப்பேன்.

அந்த வகைல மேக்ரமி ஒயரை வச்சு விதம்விதமான பொருள்கள் பண்ணக் கத்துக்கிட்டேன். ஹேண்ட் பேக், கீ செயின், ஹேர் பேண்ட், பூத்தொட்டி, செல்போன் பவுச், கரண்டி ஸ்டாண்ட்... இப்படி அதுல நிறைய பண்ணலாம். அதுல ஒரு வகைதான் பெல்ட். 10 மாடல்களுக்கும் மேல பண்ண முடியும்’’ என்கிற மாயாவதி, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘மேக்ரமி ஒயர், பக்கிள், விதம்விதமான மணிகள், வளையங்கள், அலங்காரப் பொருள்கள்... ஒரு கிலோ ஒயர் 360 ரூபாய்க்குக் கிடைக்கும். இதுல 30&40 பெல்ட்டுகள் பண்ணலாம். பக்கிள் 10&15 ரூபாய்க்கு வரும். மொத்தமா 500 ரூபாய் முதலீடு போதும்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?

‘‘பத்துக்கும் மேலான மாடல்கள் பண்ணலாம். அடிப்படையான பின்னல் வகைகளைக் கத்துக்கிட்டா போதும்... அதை வச்சு பிறகு நம்ம கற்பனைக்கேத்தபடி விருப்பமான டிசைன்ல போடலாம். குழந்தைங்களுக்கு, டீன் ஏஜ்ல இருக்கிறவங்களுக்கு, வயசானவங்களுக்குனு மாடல்கள்ல பின்னலாம். டிரெஸ்சுக்கு மேட்ச்சா என்ன கலர்ல வேணாலும், ரெண்டு மூணு கலர் சேர்த்தும் போடலாம். இதையே கொஞ்சம் பெரிசா போட்டு துப்பட்டாவாகவும் உபயோகிக்கலாம். அதுக்கான பின்னல் டெக்னிக் வேற...’’

விற்பனை மற்றும் லாபம்?

‘‘பின்னலோட டிசைனை பொறுத்து, ஒரு நாளைக்கு 10 பெல்ட் வரைக்கும் போடலாம். ஒரு பெல்ட்டுக்கான அடக்க விலை 75 ரூபாய் வரும். 25 ரூபாய் மேல வச்சு வித்தாலே லாபம்தான். ரொம்ப நுணுக்கமான டிசைன்ல, நிறைய அலங்காரம் வச்சுக் கேட்கறவங்களுக்கு, அதிக விலைல தரலாம். வீட்டுக்குப் பக்கத்துல உள்ள ஃபேன்சி கடைகள்ல, டிரஸ் கடைகள்ல சப்ளை பண்ணலாம்.’’

பயிற்சி?

‘‘வெறும் அரை மணி நேரப் பயிற்சிலயே கத்துக்கலாம். பெல்ட்டுக்கான மெட்டீரியலோட சேர்த்து கட்டணம் 200 ரூபாய்.’’           
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்