ஏழாம் அறிவை எட்டும் சூர்யா!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

              டிகர்களின் பரிணாமம்  அவர்களின் படத்தேர்விலும், ஏற்கும் கதாபாத்திரத்தின் பொருட்டும் அமைகிறது எனலாம்.

அப்படி பாலாவின் ‘நந்தா’வில் தன்னைப் புனரமைத்துக்கொண்ட சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸின் ‘கஜினி’யில் ஒரு பயண எல்லையைத் தொட்டார். இந்திவரை ஓங்கி ஒலித்த ‘கஜினி’யின் புகழ் கவனத்திலிருந்து மறைவதற்குள், சூர்யாவின் அடுத்த மைல்கல்லையும் ஏ.ஆர்.முருகதாஸே வடித்துக் கொடுத்திருக்கிறார். ரெட்ஜெயண்ட் தயாரிப்பில் அமைந்த ‘7ஆம் அறிவு’, சூர்யாவின் அடுத்த பரிணாமத்தின் சாட்சியாக அமையவிருக்கிறது.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineபடத்தின் பாடல்கள் வழக்கமான சூர்யா, ஏ.ஆர். முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணியில் இசை ரசிகர்களின் காதுகளை இன்னும் சில காலத்துக்கு குத்தகை எடுக்கும் அவசரத்தில் இருக்க, படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கான வேலைகள் ஒருபுறமும், தன் சொந்தத் தயாரிப்பான ‘எங்கேயும் எப்போதும்’ பட வெளியீட்டின் கடைசிக்கட்ட பணிகள் இன்னொருபுறம் தந்த அழுத்தத்தின் நிலையிலும் பேசினார் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘‘2000 ஆண்டுகளை உள்ளே தக்கவச்சிருக்க உயிர்ப்பான வரலாற்றுப் பின்னணி கொண்ட கதை இது. இன்னொரு பக்கம் வளர்ந்த அறிவியல் அமைப்புடன் கூடிய தற்காலமும் கைகோர்க்குது. மனித அறிவின் ஆறு நிலைகளைத் தாண்டி ஏழாவது அறிவும் சாத்தியமேங்கிற உண்மையை வரலாறும், அறிவியலும் கலந்து சொல்லியிருக்கேன். ஏழாம் அறிவுங்கிறது புதுமைக்காக சொல்லப்பட்ட அதீத கற்பனை இல்லை. இது மனிதனால முடிகிற விந்தைதான்ங்கிறதை இரு வேறு காலகட்டத்தில பயணிச்சு சொல்லியிருக்கேன். இதுக்காக தயாராக பல அறிவியல் உண்மைகளுக்கான ஆராய்ச்சி தேவைப்பட்டது. எல்லாத்திலும் புகுந்து வெளியே வந்து தயாரானதுதான் இந்தப் படத்து திரைக்கதை.

ஏழாம் அறிவுங்கிறது மனிதனின் அடுத்த ஆச்சரிய நிலை. அந்த நிலையில் அமையுது சூர்யாவின் பாத்திரம். இதில தமிழகத்தோட... தமிழனோட பெருமையும் அடிநாதமா இருக்கு...’’

‘‘சூர்யாவுக்கு ஏகப்பட்ட கெட்டப்புகள் இருக்கு போலிருக்கே..?’’

‘‘பார்வைக்கு அப்படித் தெரியும். ஆனா கதைப் படி ரெண்டுதான். வெளியான படங்கள்ல கடந்த கால அரசனா ஒரு தோற்றத்தோட வர்ற சூர்யாவோட வாழ்க்கையின் இறுதி வடிவம்தான் துறவி கெட்டப். இதோட நவீன தோற்றத்தில கலர்ஃபுல் சூர்யா. படத்தில மேற்கொள்ள வேண்டிய சவால்களுக்காக நிறையவே தயாரானார் அவர். உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் உடலை கட்டுக்கோப்பா மாற்றியது ஒரு புறம், மார்ஷியல் ஆர்ட்ஸ்ங்கிற தற்காப்புக் கலைகளுக்காக வியட்நாம் போய் தங்கியிருந்து கற்றுத் தேர்ந்து வந்தது இன்னொரு பக்கம்னா, இதெல்லாம் தெரியாத அடுத்த பக்கமும் ஒண்ணு இருக்கு. அது சர்க்கஸ் நுட்பங்கள். அதுக்காகவும் சர்க்கஸ் வித்தைகளுக்குத் தனியா பயிற்சி எடுத்தார்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஇதெல்லாமே சூர்யாவோட பயணத்தில அடுத்தகட்ட சவால்கள்னு சொல்லலாம். அவரைத்தாண்டி படத்தில் சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே அடுத்தகட்ட முயற்சின்னும் சொல்லலாம். ஏன்னா என்னைப் பொறுத்தவரை, என்னோட அடுத்தடுத்த முயற்சிகள்ல அடுத்த கட்டத்தை நோக்கிப் போய்க்கிட்டே இருக்க விரும்புவேன். அதுல சிறப்பானதையும் கொடுக்க நினைக்கிறேன்..!’’

‘‘ஸ்ருதி ஹாசன், அபிநயா பற்றிச் சொல்லுங்க..?’’

‘‘அபிநயாவுக்கு சின்னதா ஒரு சிறப்புக் கேரக்டர். மற்றபடி ஸ்ருதிதான் ஹீரோயின். இதில விஞ்ஞானியா வர்ற ஸ்ருதி இந்தப்படத்திலேர்ந்து தமிழ்ல கவனிக்கப்படும் ஹீரோயினா இருப்பாங்க. கதை என்ன கேட்டதோ, கேரக்டருக்கு எது தேவையோ... அதைத் தயங்காம செய்திருக்காங்க ஸ்ருதி..!’’

‘‘படத்துக்காக சீனா போனீங்க இல்லையா..?’’

‘‘ஆமா... அங்கே ‘ஷாவ்லின் டெம்பிள்’ல படம் பிடிச்சது மறக்கமுடியாத தருணம். தமிழைப் பொறுத்தவரை ஷாவ்லின் கோயில்ல படமாக்கப்பட்ட முதல் படம் ‘7ஆம் அறிவு’. அது மட்டுமில்லாம, சீன கிராமம் ஒண்ணை செட் போட்டுப் படமாக்கியதும் படத்தோட ஹைலைட்கள்ல ஒண்ணு. மதன் கார்க்கி எழுதிய சீனமொழிப் பாடல் ஒண்ணு ஹாரிஸ் இசைல சீக்கிரமே உங்க காதுகளுக்கு வந்து சேரும்..!’’

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

‘‘தயாரிப்பாளராகவும் ஆகிட்டீங்க. எப்படி இருந்தது தயாரிப்பு அனுபவங்கள்..?’’

‘‘என்னை விட சிறந்த தயாரிப்பாளர், ‘7ஆம் அறிவு’ தயாரிச்ச உதயநிதி ஸ்டாலின்ங்கிறதுதான் உண்மை. இதுல நீங்க கேட்டதுக்கும் பதில் இருக்கு. ஏன்னா ஒரு இயக்குநரா நான் இதுவரை சந்திச்ச தயாரிப்பாளர்கள்ல அவர்தான் பெஸ்ட். அவரைப்போல எதிர்காலத்தில நானும் ஒரு சிறந்த தயாரிப்பாளராக முடியும்னு நம்பறேன்..!’’
 வேணுஜி