எதிர்கால ஆயுதம்!
யுவால் நோவா ஹராரி என்ற பெயர் தமிழ் வாசக பரப்பில் பரிச்சயமான பெயர். அவரின் ‘சேப்பியன்’ என்ற புத்தகம் சில வருடங்களுக்கு முன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சக்கைபோடுபோட்டது.  மனித இனத்தின் சுருக்கமான வரலாறு என்று உபதலைப்பிட்ட அந்தப் புத்தகத்துக்குப் பிறகு பல புத்தகங்களை எழுதிய ஹராரி இந்த வருடம் ‘நெக்சஸ்’ எனும் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் உபதலைப்பு ‘கற்காலம் முதல் செயற்கை நுண்ணறிவு வரை தகவல் வலைப்பின்னலின் சுருக்கமான வரலாறு’. என்ன சொல்கிறார் ஹராரி இந்தப் புத்தகத்தில்..?
‘தகவல் தொழில்நுட்பம், அதன் வலைப்பின்னல், பரிமாற்றம் எல்லாம்தான் ஒரு சமுதாயத்தை கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தை திட்டமிடச் செய்தன. ஆனால், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எனும் தகவல் தொழில்நுட்பத்தைப் பொறுத்தளவில் அது சமூகங்களைப் பிளவுபடுத்தும் ஒரு தொழில்நுட்பமாக இருக்கிறது.
இதனால் எதிர்காலத்தில் என்னவிதமான சமூகத்தை நாம் உருவாக்கலாம் என்ற திட்டமிடலையும் இந்த தொழில்நுட்பத்தை வைத்து செய்யமுடியாதபடி இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் எதிர்கால ஆயுதமாக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதால் இந்த தொழில்நுட்பத்தை ஏன் நாம் இவ்வளவு சிரத்தையாக கற்கவேண்டும், நம்பவேண்டும்?’ என்று கறாராகக் கேட்கிறார் ஹராரி இந்தப் புத்தகத்தில்.
டி.ரஞ்சித்
|