சிக்ஸ் பேக் ரஜினி!





ஆச்சு! பின்னணி இசை, மிக்ஸிங் தவிர ‘கோச்சடையான்’ வேலைகள் 95 சதவீதம் முடிந்தாயிற்று. சமீபத்தில் சவுந்தர்யா ரஜினி வெளியிட்ட ‘டபுள் சூப்பர் ஸ்டார்’ ஸ்டில், ரசிகர்களுக்கு இரட்டிப்பு தீனி போட்டிருக்கிறது.

‘‘சிங்கிள் போட்டோவே இப்படி என்றால் மொத்த படமும் சும்மா அதிருமில்ல....’’ என ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது ரசிகர் கூட்டம். மாவீரன் கோச்சடையான், மகன் ராணா என டபுள் ரோலில் கலக்கியிருக்கும் ரஜினி, வீரம் மட்டுமின்றி நடனத்திலும் கை தேர்ந்தவராக வருகிறார். கோச்சடையானின் மனைவியாக ஷோபனாவும், ராணாவின் இதயதேவதையாக தீபிகா படுகோனேவும் நடித்திருக்கின்றனர். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகளும், கிராஃபிக்ஸ் வேலைகளும் லண்ட னில் நடந்திருக்கின்றன.

ஒரு ஸ்கூப் நியூஸ்... ரஜினி இதில் சிக்ஸ்பேக்குடன் காட்சியளிக்கிறார். அது கிராஃபிக்ஸ் கைவண்ணம் என்றாலும், சூப்பர் ஸ்டாரின் கட்டுடல் பார்த்து ரசிக்கக் காத்துக் கிடக்கின்றனர் ரசிகர்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘எதிரிகள் இல்லை...’ என்று ரஜினி சொந்தக் குரலில் பாடியிருப்பது கோச்சடையானின் கூடுதல் விசேஷம்! ரஜினியின் ஜப்பான் ரசிகர்களுக்காக அந்த மொழியிலும் வெளியாகிறது ‘கோச்சடையான்’.
- அமலன்