சகுனியின் தாயம்



கே.என்.சிவராமன்
உண்மைலயே தமிழகத்துல நக்சல்பாரி இயக்கம் முழுவீச்சோட பரவினதா நினைக்கிறீங்களா?’’ தமிழரசனின் இளமைக் கால புகைப்படத்தை பார்த்தபடியே ஸ்காட்
வில்லியம்ஸ் கேட்டான். ‘‘எதனால இந்த சந்தேகம் உங்களுக்கு வந்தது?’’ கேட்டதுடன் அவன் பக்கம் திரும்பி அமர்ந்தார் வால்டர் ஏகாம்பரம். ‘‘1963 வரைக்கும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிதான் இந்தியாவுல இருந்தது. சரியா?’’
‘‘ம்...’’

‘‘1964லதான் பிளவு ஏற்பட்டு சி.பி.எம். உருவாச்சு. ஆனா, மேற்கு வங்க மாநிலத்துல இருந்த சில சி.பி.எம். தோழர்கள், கட்சியோட நடவடிக்கைகளை எதிர்த்தாங்க. தேர்தல்ல போட்டியிடறது, மாநில அரசுல பங்கேற்கறது, பெயர் அளவுக்கான விவசாயப் போராட்டங்கள்... இதுல எல்லாம் அவங்களுக்கு உடன்பாடில்லை. சிறு சிறு குழுவா சிதறி போர்க்கொடி தூக்கினாங்க...’’
‘‘உண்மைதான்...’’

‘‘இந்த நேரத்துல தான் மூணு வருஷம் கழிச்சு, ஐ மீன் 1967ல, டார்ஜிலிங் மாவட்டத்துல இருந்த நக்சல்பாரி கிராமத்துல விவசாயிகளோட எழுச்சி நடந்தது. ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’னு குரல் கொடுத்தாங்க. இதுதான் பின்னாடி ஆயுதம் தாங்கிய நக்சல்பாரி போராட்டமா வளர்ந்தது...’’
‘‘ஆமா...’’

‘‘இந்த விவசாயிகளோட எழுச்சியை இந்தியா முழுக்க இருந்த சி.பி.எம். தோழர்கள்ல சிலர் ஆதரிச்சாங்க. கட்சியை விட்டு வெளியேறினாங்க. அவங்களைத்தான் நக்சல்பாரிகள்னு சொல்றீங்க. அம் ஐ ரைட்?’’
‘‘யெஸ்...’’

‘‘தமிழகத்துலயும் இப்படி ஒரு ஸ்பிளிட் நடந்தது. ஆனா, இங்க சி.பி.எம்.லேந்து வெளியேறினவங்க ஒரு சதவீதம் கூட கிடையாதே? சொல்லப் போனா மாநிலத் தலைவர்கள்ல யாருமே நக்சல்பாரி எழுச்சிக்கு குரல் கொடுக்கலையே...’’
‘‘உண்மைதான்...’’

‘‘சில பகுதிகள்ல, அதுவும் திட்டுத் திட்டாதான் கொஞ்சம் பேர் வெளியேறினாங்க. அப்படி இருக்கிறப்ப, நக்சல்பாரி இயக்கம் முழுவீச்சோட பரவினதா எப்படி சொல்றீங்க?’’
கேட்ட ஸ்காட் வில்லியம்ஸை வியப்புடன் பார்த்தார் வால்டர் ஏகாம்பரம். ‘‘இந்த ஹிஸ்ட்ரி எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?’’

‘‘பாடமா படிச்சேன் வால்டர். என்ன அப்படி பார்க்கறீங்க? நாங்க வணிகர்கள். எங்களுக்கு தேசம், இனம், நாடு, மதம்னு எதுவும் கிடையாது. பிசினஸ் பண்ணறது மட்டும்தான் எங்க நோக்கம். ஸோ, எந்த இடத்துல நாங்க வியாபாரம் செய்யப் போனாலும் முதல்ல அந்த இடத்தைப் பத்தி தெரிஞ்சுப்போம். அதுக்காக தனியா க்ளாஸ் எடுப்பாங்க. குறிப்பா யார் யாரெல்லாம் எதிர்ப்பாங்க... அவங்க பின்புலம் என்னன்னு டீடெய்லா சொல்வாங்க. இதுக்காகவே டேட்டாஸ் கலெக்ட் பண்ணுவோம்...’’
‘‘டேட்டாஸ்?’’

‘‘ம். இன்னிக்கி உலகை யார் ஆட்சி செய்யறாங்கன்னு நினைக்கறீங்க? மனிதர்களா? நோ. பணக்காரங்களா? ம்ஹும். அமெரிக்கனா? சான்ஸே இல்லை. அப்படீன்னா யாரு? டேட்டாஸ். யெஸ், வால்டர்... புள்ளிவிவரங்கள்தான் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் கன்ட்ரோல் பண்ணுது. அதை வச்சுக்கிட்டு நீங்க என்ன வேணும்னாலும் பண்ணலாம்...’’
‘‘புரியல...’’

‘‘தெளிவாவே சொல்றேன். எந்தப் பகுதில எத்தனை பேர் வசிக்கிறாங்க, அதுல படிச்சவங்க, படிக்காதவங்க, குழந்தைங்க, இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள்னு வயது வாரியா கணக்கு எடுப்போம். குறிப்பா ஆண்கள், பெண்கள்னு இதைப் பிரிச்சுப்போம். அவங்களோட பொருளாதார வசதி, வீட்ல என்னென்ன பொருட்கள் இருக்கு, மாத  ஆண்டு வருமானம் எவ்வளவுன்னு எதையும் விட மாட்டோம். இதை வச்சுத்தான் விளையாடவே ஆரம்பிப்போம். குறிப்பா சம்பந்தப்பட்ட பகுதில எந்த சாதியோட ஆதிக்கம் இருக்கு, அவங்க கலாசாரம் என்ன, அவங்களை எதிர்க்கிற சாதி யாரு, இந்த இரு பிரிவுல யார் நமக்கு சாதகமானவங்க, யாரை எப்படி எதன் மூலமா நம்ம பக்கம் திருப்பலாம், இதுக்கு எப்படி குறிப்பிட்ட அந்த சாதியோட கலாசாரத்தை பயன்படுத்தலாம்னு ஸ்டெடி பண்ணுவோம்... திட்டம் தீட்டுவோம்... அதுக்குப் பிறகுதான் களத்துலயே இறங்குவோம்...’’

‘‘...’’
‘‘இப்படித்தான் எங்க நிறுவனத்துக்கு நெருக்கமான ஒரு என்.ஜி.ஓ. மூலமா தமிழகத்தை அக்குவேறு ஆணிவேறா அலசினோம். அப்பத்தான் ஒரு குழுவை பத்தின ஹின்ட் கிடைச்சது. மேல் விபரங்கள் தெரிஞ்சுக்கத்தான் உங்க உதவியை நாடினேன்...’’

‘‘அதுக்குத்தான் அவசியமில்லையே... உங்களுக்கே நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கே ஸ்காட்?’’
‘‘இல்லை வால்டர். எனக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கு. அதுல முன்னாடி சொன்னீங்களே அப்பு... அப்புறம் இந்த தமிழரசன்... இதெல்லாமே அடக்கம்...’’
‘‘இப்ப நான் என்ன பண்ணணும்?’’

‘‘தமிழகத்துல நக்சல்பாரி மூவ்மென்ட் பத்தி சொல்லுங்க...’’
‘‘ஏறக்குறைய நீங்க சொன்னா மாதிரித்தான் நடந்தது. மாநில அளவுல எந்த சி.பி.எம். தலைவரும் நக்சல்பாரி எழுச்சிக்கு ஆதரவா குரல் கொடுக்கலை. ஆனா, மாவட்ட அளவுல ஒரு சிலர் திட்டுத் திட்டா அணி திரண்டாங்க. அதுல முக்கியமானவங்க அப்பு, ஏ.எம்.கோதண்டராமன், புலவர் கலியபெருமாள்...’’
‘‘ம்...’’

‘‘இவங்க கல்லூரி மாணவர்களை அணி திரட்ட முயற்சி பண்ணினாங்க...’’
‘‘ஓகே...’’
‘‘அப்படித்தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும் போனாங்க. அந்த காலத்துல புரட்சியாளர்களோட கூடாரமா அந்த யூனிவர்சிட்டிதான் இருந்தது. தொடர்ச்சியான இவங்களோட பிரசாரத்தால பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இந்த மூவ்மென்ட்டுக்கு வந்தாங்க. அதுல தமிழரசனும் ஒருத்தன்...’’
‘‘இந்த இளைஞர்களைத்தான் அழித்தொழிப்பு செய்ய கிராமங்களுக்கு அனுப்பினாங்க இல்லையா?’’

‘‘ஆமா. ஆனா, அது எதிர்பார்த்தா மாதிரி நடக்கலை...’’
‘‘என்ன காரணம்?’’
‘‘தமிழகத்தோட அமைப்புதான். பத்து கிலோ மீட்டர் அளவுல ரெண்டு கிராமங்கள் இருக்குனு வைச்சுப்போம். இந்த கிராமத்துல ஒடுக்கப்பட்ட சாதியா இருக்கிறவங்க பக்கத்து கிராமத்துல ஆளும் சாதியா இருப்பாங்க. அதனால சாதி அடிப்படைல மக்களை திரட்டறது அவங்களுக்கு கஷ்டமா இருந்தது...’’
‘‘ம்...’’

‘‘போதும் போதாததுக்கு அழித்தொழிப்புக்கு மக்கள் ஆதரவு தரலை. நக்சலைட்டுங்களை கடவுள் மாதிரி தள்ளி நின்னுதான் பார்த்தாங்களே தவிர, அவங்களோட இரண்டற கலக்கலை...’’
‘‘புரியுது...’’
‘‘தவிர, கொடூரமான ஒரு பண்ணையாரை கொன்னா எல்லாம் சரியாகிடும்னு நக்சல்பாரிங்க தப்புக் கணக்கு போட்டாங்க. ஆனா, அப்படி எதுவும் நடக்கலை. ஒருத்தன் செத்ததும் அடுத்தவன் அந்த இடத்துக்கு வந்தான். வந்தவனும் அதே சாதிக்காரனா இருந்தான். அதாவது ஆட்கள் மாறினாங்களே தவிர அடக்குமுறை அப்படியேதான் இருந்தது...’’
‘‘ம்...’’

‘‘இந்த உண்மைகளை நக்சல்பாரிகள் புரிஞ்சுகிட்டாங்க. அழித்தொழிப்பு வேலைக்கு ஆகாதுன்னு அனுபவபூர்வமா உணர்ந்தாங்க. இதுக்குப் பிறகுதான் மூணு பிரிவா பிரிஞ்சாங்க...’’
‘‘அதென்ன பிரிவுகள்?’’

‘‘குழு, கூட்டுக் குழு, மாஸ் லைன். குழுங்கறது அழித்தொழிப்பு சரின்னு நம்பற கோஷ்டி. கூட்டுக் குழு இதுலேந்து கொஞ்சம் வேறுபட்டது. அதாவது அழித்தொழிப்பு சரிதான். ஆனா, கூடவே மக்களையும் திரட்டணும்னு சொன்னாங்க...’’
‘‘ம்...’’

‘‘இந்த இரண்டையும் என் காலத்துலயே அடக்கிட்டேன். 1970களோட இறுதிலயும், 80களோட தொடக்கத்துலயும் இருபத்தாறு பேரை என்
கவுன்ட்டர் செஞ்சதா சொன்னேன் இல்லையா?’’
‘‘ஆமா...’’

‘‘அவங்க எல்லாருமே குழு, கூட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கினவங்கதான். 1980, ஆகஸ்ட் 6 அன்னிக்கி செல்வம், ராஜப்பா, பெருமாள்னு மூணு பேரை போட்டுத் தள்ளினோம். அதே வருஷம் செப்டம்பர் 11 அன்னிக்கி சுப்ரமணியத்தையும், சண்முகத்தையும் கொன்னோம். மறுநாள் பாலன் வசமா சிக்கினான். ஒருவகைல இவனை தமிழக நக்சல்பாரியோட தளபதின்னு சொல்லலாம். இவனோட மரணம் இயக்கத்துக்கே பேரிடியா அமைஞ்சது...’’
‘‘அப்ப அப்பு?’’

‘‘முன்னாடியே அவனை கொன்னுட்டோம்...’’
‘‘ஓகே...’’
‘‘அதுக்குப் பிறகு செப்டம்பர் 18 அன்னிக்கி பழங்குடி இனத்தை சேர்ந்த குருவிக்காரன் கனகராஜ், அக்டோபர் 13 சின்னதுரை  நொண்டி பெருமாள், மூணு நாள் பொறுத்து ஜெயபால்னு யாரையுமே விடலை...’’

‘‘இதெல்லாமே உங்க தலைமையிலான படைதான் செஞ்சது இல்லையா?’’
‘‘யெஸ். அதுக்குப் பிறகு நவம்பர் மாசம் முழுக்க எஞ்சியிருக்கறவங்களோட லிஸ்ட்டை எடுத்தோம். அவங்க நடமாட்டத்தை கண்காணிச்சோம்...’’
‘‘ம்...’’

‘‘டிசம்பர் மாசம் மறுபடியும் ஆரம்பிச்சோம். அந்த மாசம் 19ம் தேதி மனோகரனை என்கவுன்டர் செஞ்சோம். 28ம் தேதி கண்ணாமணியை கொன்னோம். கூட்டுக் குழுல தலைமை பொறுப்புல இருந்தவன்தான் இந்த கண்ணாமணி. ஒருவகைல மக்கள் யுத்தக் குழுவோட ஆரம்பகால தலைவன்னு இவனை சொல்லலாம்...’’
‘‘அச்சா...’’

‘‘இதுக்கு பிறகு கிட்டத்தட்ட நக்சலைட்டுங்க தமிழகத்துல அடங்கிட்டாங்கன்னே சொல்லலாம். ஆனாலும் ஒரு சிலர் துளிர் விட்டு வளர்ந்துக்
கிட்டுத்தான் இருந்தாங்க. இவங்க பட்டியலையும் பொறுமையா தயாரிச்சோம்...’’
‘‘ம்...’’

‘‘ஹிட் லிஸ்ட் தயாரானதும் ஆபரேஷனை மறுபடி தொடங்கினோம். 1981 ஜூன் 8 அன்னிக்கி தர்மன் இறந்தான். அதே மாசம் 26ம் தேதி மச்சக்காளையை பொறி வைச்சு பிடிச்சு சுட்டோம். ஆகஸ்ட் 23 அன்னிக்கி ஆர்.தனபால், அன்பு, சரவணன், சின்னதம்பினு ஒரே நேரத்துல நாலு பேரை போட்டுத் தள்ளினோம். அதோட நக்சல்பாரிகளோட கொட்டம் ஒழிஞ்சது...’’
‘‘இவ்வளவு நடந்திருக்கு. மீடியாவுல இதப் பத்தி செய்தியே வரலையா?’’

‘‘வந்தது. ‘மக்கள் சிவில் உரிமைக் கழகம்’, சுருக்கமா பியூசிஎல், மதுரை மாவட்ட கமிட்டி கொடுத்த விபரங்களை அடிப்படையா வைச்சு 82ம் வருஷம், ஜனவரி 10ம் தேதி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்ல கிளாட் ஆல்வாரிஸ் ஒரு பெரிய கட்டுரை எழுதினார்...’’
‘‘ஐ ஸீ. ஒரு சந்தேகம் வால்டர்... நக்சலைட்ல பெண்கள் யாருமில்லையா?’’

‘‘ஒரேயொருத்தி இருந்தா. பேரு அஜிதா. திருப்பத்தூர்ல தலைமறைவா இருந்தவளை சுத்தி வளைச்சு பிடிச்சோம். மூங்கில் கழில அவளை தலைகீழா தொங்கவிட்டு பத்து கிலோ மீட்டர் தூக்கிட்டு போனோம். கிராம மக்கள் எல்லாம் பயந்து போய் இதைப் பார்த்தாங்க. அதுக்கு பிறகு இயக்கத்துல சேரணும்ங்கற ஆசை யாருக்கும் வரலை...’’
‘‘முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்க வால்டர்...’’
‘‘மாஸ் லைனை கேட்கறீங்களா?’’
‘‘யெஸ்...’’

‘‘அதனோட சூத்திரதாரி தான் இந்த தமிழரசன். குழு, கூட்டுக்குழுவை சேர்ந்தவங்க மாதிரி இவன் ஆர்வக் கோளாறு இல்ல. தீவிரமான படிப்பாளி. மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ படைப்புகளை கரைச்சு குடிச்சவன். அதை நம்ம ஊருக்கு ஏற்ப அப்ளை பண்ணறவன். சாகசவாதம் மேல இவனுக்கு நம்பிக்கை கிடையாது. மக்களோட பங்களிப்பு இல்லாம ஆயுதப் போராட்டமும், சமூக மாற்றமும் சாத்தியமில்லைனு தீர்மானமா நம்பறவன்...’’

‘‘ம்...’’
‘‘அதனாலயே எஞ்சி இருந்த ஆதரவாளர்களை தமிழகம் முழுக்க அணிதிரட்டினான். அழித்தொழிப்புனால எந்தப் பயனும் இல்லைனு புரிய வைச்சான். விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், இலக்கியவாதிகள் மத்தில தனித்தனியா மக்கள் திரள் அமைப்பை கட்டினான். போல்ஷ்விக் கட்சி பாணியை அமல்படுத்தினான்...’’
‘‘போல்ஷ்விக்னா லெனின் ஆரம்பிச்ச கட்சியா?’’

‘‘ஆமா. ரஷ்யால அவர் என்ன செய்தாரோ அதை அப்படி மாவோ பாணில கடை
பிடிக்கிறான். அதுக்குத் தகுந்தா மாதிரி மார்க்சிஸ்ட்  லெனினிஸ்ட் கட்சியை கட்டிட்டு வர்றான்...’’
‘‘அதனாலதான் மக்கள் ஆதரவுல வாழறானா?’’

‘‘எக்ஸாக்ட்லி. இத்தனை வருஷங்களா தமிழரசனால தலைமறைவா வாழ முடியறதுக்கு காரணம் அதுதான்...’’
‘‘இவனோட கட்சில எத்தனை பேர் இருப்பாங்க?’’
‘‘சில ஆயிரம் பேர் இருப்பாங்க...’’
‘‘அவ்வளவுதானா?’’

‘‘அது ரகசிய கட்சி இல்லையா? அதனால உறுப்பினராக ஏக கெடுபிடி உண்டு. பட், மாஸ் லைனோட மக்கள் திரள் அமைப்புல கணிசமான பேர் இருக்காங்க...’’
‘‘எல்லாருமே செல்வாக்கானவங்களா?’’

‘‘சித்தாந்த ரீதியா வலுவானவங்க. மக்களை நேருக்கு நேர் சந்திச்சு சமூக பிரச்னைகளை விளக்கறவங்க. ஸோ, ஆபத்தானவங்கதான்...’’
‘‘பல விஷயங்கள் இப்பத்தான் புரியுது... முழுவீச்சோட நக்சல்பாரி மூவ்மென்ட் வளர்ந்ததா நீங்க சொன்னது கூட இதன் அடிப்படைலதானே?’’
‘‘ஆமா...’’

‘‘ஓகே. வேற ஏதாவது விவரங்கள்?’’
‘‘இல்லை ஸ்காட். எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிட்டேன்...’’
‘‘தேங்க் யூ வெரி மச் வால்டர்... அழைப்பை மதிச்சு வந்ததுக்கு நன்றி...’’
‘‘இதுல போய் என்ன இருக்கு? என் கடமையை செஞ்சேன். தேவையான எல்லா விவரங்களையும் உங்ககிட்ட சொல்லணும்னு மேலிடத்து உத்தரவு. அதை நிறைவேத்தினேன். தட்ஸ் ஆல்...’’
‘‘இந்த போட்டோ உங்களுக்கு வேணுமா?’’ தமிழரசனின் பழைய புகைப்படத்தை காட்டியபடி கேட்டான்.

‘‘வேண்டாம். வேற காப்பி இருக்கு. இந்த பென்சில் டிராயிங்கை கூட நீங்களே வைச்சுக்கலாம்...’’
‘‘தேங்க்ஸ் எ லாட்...’’ என்ற படி அவருக்கு கை குலுக்கியவன் இனோவாவை விட்டு இறங்கினான். கடல் அலையின் சீற்றம் அவன் உள்ளத்தில் எதிரொலித்தது. கொந்தளிக்கும் உள்ளத்துடன் தன் காரை நோக்கி நடந்தான். அவனைக் கண்டதும் டிரைவர் பவ்யமாக கதவைத் திறந்தான். தொண்டையில் சிக்கிய முள்ளாக ஏதோ ஒன்று அவனை உறுத்திக் கொண்டே இருந்தது.
காரில் ஏறி அமர்ந்ததும் அந்த முள் விலகியது.

சுகாதாரத் துறை அதிகாரியான ராமின் பூர்வீகம் திருப்பத்தூர் என்பதும், தேன்மொழி யின் பெற்றோர் தர்மபுரியை சேர்ந்தவர்கள் என்பதும் அவன் நினைவுக்கு வந்தது. 
உதட்டைக் கடித்தான். ராமை விட இப்போது தேன்மொழிதான் ஆபத்தானவள். நிறைய விஷயங்களை ஆராயத் தொடங்கியிருக்கிறாள். அவள் மட்டும் உண்மையைக் கண்டு
பிடித்து தமிழரசனுடன் கைகோர்த்துவிட்டால் முடிந்தது கதை. ‘மெடிகோ’ நிறுவனத்தால் ஜென்மத்துக்கும் தமிழகத்தில் ரெட் மார்க்கெட் பிசினஸை செய்யவே முடியாது...
என்ன செய்யலாம்... தேன்மொழி இப்போது எங்கிருக்கிறாள்... என்று அவன் யோசித்த அதே நொடி அவள் ரங்கராஜனுடன் ஒரு வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அது, திருப்பதி தேவஸ்தான உறுப்பினருக்கு சொந்தமான வீடு.

‘‘தலைவர் சென்டிமென்ட்டா ஓட்டு கேட்க வேண்டியதுதான், அதுக்காக இப்படியா?’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘ஒவ்வொரு வீடா போய் மாமியார்  மருமகள் சண்டையை சமாதானம் பண்ணி ஓட்டு கேட்கிறாரு!’’
 பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

‘‘தலைவர் ரொம்ப பீதியில இருக்கார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘நாற்பது தொகுதி யிலும் ‘நோட்டா’ வெற்றி பெற்றால் அதை நம் கட்சி ஆதரிக்குன்னு பேசுறாரே!’’
 பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.

‘‘ஓட்டுக்கு தலைவர் 950 ரூபாய் குடுக்கறார், ரவுண்டா ஆயிரம் ரூபாய் குடுத்தா என்ன?’’
‘‘ஐம்பது ரூபாய்
சர்வீஸ் டாக்சாம்!’’
 வி.சகிதாமுருகன்,
தூத்துக்குடி.

‘‘தலைவரே! உங்களை வேட்பாளரா அறிவிச்சதுமே ‘வெற்றி நிச்சயம்’ங்கிறாங்க...’’
‘‘ஹி... ஹி... அப்படியா?’’
‘‘ஆமா... எதிர்க்கட்சிக்காரங்க!’’
 தாமு, தஞ்சாவூர்.

(தொடரும்)