ஜோக்ஸ்



ஸ்பீக்கரு...

‘‘கட்சியில் நிதி நிலை சரியில்லாத தால் ஓட்டுக்குப் பணத்தை பின் தேதியிட்ட காசோலையாக அளிக்கிறோம். தேர்தலில் நாங்கள் ஜெயித்தால் சம்பாதித்து பணத்தை பேங்க்கில் போடுவோம் என்று உறுதி கூறுகிறோம்!’’
 வி.சகிதா முருகன். தூத்துக்குடி.

‘‘ ‘செய்வீங்களா... செய்வீங்களா’ன்னு கூட்டத்தைப் பார்த்து கேட்டது தப்பாப் போச்சுய்யா...’’
‘‘ஏன் தலைவரே..?’’
‘‘அஞ்சு வருஷம் தொகுதிப் பக்கம் நீங்க வந்தீங்களான்னு திருப்பிக் கேட்குறாங்க!’’
 ராம்ஆதிநாராயணன்,
தஞ்சாவூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் எலெக்ஷன்ல ஒரு டாக்டர் வேட்பாளரா போட்டியிட்டாலும், ஓட்டுச்சாவடியில் வாக்குச்சீட்டுதான் கொடுக்க முடியும்... மருந்துச்சீட்டு கொடுக்க முடியாது!
 மருத்துவருக்கே ட்ரீட்மென்ட் கொடுத்து விண் பண்ண முயற்சிப்போர் சங்கம்                                                                                     ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.

‘‘கோயில் வாசல்ல இருக்கிற பிச்சைக்காரர்களுக்கு, தன்கூட வந்தவங்களையும் காசு போடச் சொல்றாரே தலைவர்... ஏன்?’’
‘‘கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கிறாராம்...’’
 பர்வீன் யூனுஸ், சென்னை44.

‘‘தடைகளைத் தாண்டினாதான் சாதனை புரியலாம்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்..?’’
‘‘தேர்தல் ஆணையம் விதிக்கிற தடைகளை மீறிக்கிட்டே இருக்காரு..!’’
 தாமு, தஞ்சாவூர்.

‘‘வாக்கு சேகரிக்க
கிளம்பலாமா..?’’
‘‘இருங்க தலைவரே...
முதல்ல கூட்டத்தை
சேகரிக்க வேண்டாமா?’’
 அ.ரியாஸ், சேலம்.