ஹாலிவுட் ஜாலிவுட் பாலிவுட்



ரண்பீர் கபூருடன் காதலாகி கசிந்துருகும் கேத்ரினா கைஃப், அவரது மனதில் இடம் பிடிப்பதற்கு ஸ்பெஷல் ரூட் கண்டுபிடித்திருக்கிறார். இதுவரை ரண்பீருடன் நெருக்கமாக இருந்த நடிகைகள் பலரையும் கழற்றி விட்டது, அவரது அம்மா நீட்டு சிங். அம்மா பிள்ளையான ரண்பீர், அவர் பேச்சைத் தட்டியதில்லை. இதனால் நீட்டு சிங்குடன் டின்னர், ஷாப்பிங் என போக ஆரம்பித்திருக்கிறார் கேத்ரினா.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நன்கு சமைக்கத் தெரிந்தவர். சினிமாவின் உபதொழிலாக இப்போது ஹோட்டல் ஆரம்பித்திருக்கிறார். இலங்கையின் தலைநகர் கொழும்புவில் தன் நண்பரோடு சேர்ந்து அவர் ஆரம்பித்திருக்கும் இந்த ஹோட்டலில், இயற்கை உணவுகள்தான் ஸ்பெஷல் ரெசிபி!

இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டபிறகு காதலர் எரிக் ஜான்ஸன் கரம் பிடித்திருக்கிறார் ஜெஸிகா சிம்ஸன். ‘‘இன்னும்கூட இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை. எங்கள் திருமணம் ஆயுளுக்கும் அலுக்காது. ஒருவரது பலவீனங்களை மற்றவர் அறிந்தபிறகே திருமணம் செய்திருக்கிறோம். எங்கள் உறவு கசக்காது’’ என்கிறார் ஜெஸிகா.

‘ஏக் வில்லன்’ படத்தின் புரொமோஷனுக்காக போன இடங்களில், புகைப்படக்காரர்களுக்கு தனியாக போஸ் கொடுக்க மறுத்துவிட்டார் ஷ்ரத்தா கபூர். இதனால் கடுப்பான போட்டோ ஜர்னலிஸ்ட்டுகள் அவரைப் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். மேடையிலிருந்து அவர் இறங்கியபிறகே படம் பிடிப்பார்கள். இப்படி புறக்கணிக்கப்பட்டால் முகம் தெரியாமல் போய் விடுவோம் என பயந்த ஷ்ரத்தா, பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் ஆகியிருக்கிறார்.

கணவர் ரிக் சாலமனை விவாகரத்து செய்தபிறகு நீண்ட கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார் பமீலா ஆண்டர்சன். ‘திருமண உறவில் கிடைக்கும் காதல் பிடிக்கிறது. ஆனால் அதில் சந்தோஷம் கிடைக்காததுதான் எங்கோ இடிக்கிறது’ என ஃபீல் பண்ணியிருக்கிறார் கவிதையில்!