ஜோக்ஸ்



டாக்டர்... இந்த பேஷன்ட் ஒரு பிரபல ஜோசியராம்!’’
‘‘அதுக்காக அவருக்கு ‘ஏழரைச்சளி’ பிடிச்சிருக்குன்னு சொன்னா, நான் என்ன மருந்தைக் கொடுக்கிறதாம்..?’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

எதுக்குய்யா திடீர்னு உண்ணாவிரதம் இருக்கச் சொல்றீங்க..?’’
‘‘தொண்டர்கள் பிரியாணி சாப்பிட ஆசைப்
படறாங்க தலைவரே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘ஆபீஸ்ல தூங்கினா சம்பளம் தர முடியாது...’’
‘‘ஏன் சார்... எழுப்பித் தர மாட்டீங்களா?’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

நைலான் வலையில் மீன் பிடிக்கலாம். சிலந்தி வலையில் மீன் பிடிக்க முடியுமா?
- கண்ணால் வலை விரித்து கன்னத்தில் விலையில்லா அடி வாங்கியோர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

டாக்டர் டென்ஷன் ஆயிட்டாரே... இன்ஸ்பெக்டர் அப்படி என்ன கேட்டார்?’’
‘‘துப்பு ‘துலக்க’ ஒரு பேஸ்ட் எழுதிக் குடுங்கன்னு கேட்டாராம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

வெகு நேரமாக மகாராணியார் மேல் மாடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாரே... என்னவாக இருக்கும்?’’
‘‘அங்கிருந்து பார்த்தால்தான் போர்முனையிலிருந்து மன்னர் ஓடிவரும் அழகை ரசிக்க முடியுமாம்!’’
- சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்.

என்னதான் மர மண்டையா இருந்தாலும், அதுல முடிதான் இருக்கும். பூ, காய், பழம் இருக்கும்னு எதிர்பார்க்கக் கூடாது...
- தலையாய பிரச்னைகளைக்கூட ஈஸியா டீல் பண்ணி ‘முடி’ப்போர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம்,  ஔவையார்பாளையம்.