நியூஸ் வே



*அஜித் அடுத்த டைரக்டராக ‘வீரம்’ சிவாவை தேர்ந்தெடுத்து விட்டார். ஆனால், அதற்கு முன்னால் கால் ஆபரேஷன் நிச்சயம். இன்னும் கதை கேட்காமலேயே நம்பிக்கையில் சிவாவை ‘டிக்’ செய்திருக்கிறார் தல.

ஷூட்டிங்கிற்கு அஞ்சலி வந்தாலும், வீட்டில் தங்குவதில்லை. பாதுகாப்பாக ஹோட் டலில்தான் தங்குகிறார். அவரது கம்பெனியே அந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறது. ஒரே ஒரு டைரக் டருக்கு இப்படி பயப்படக் கூடாது!

*இந்திக்கும் தமன்னாவுக்கும் ஏழாம் பொருத்தம்போல. எட்டு வருடத்துக்கு முன் இந்தியில் அவர் அறிமுகமான முதல் படமே படு ஃபிளாப். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த ‘ஹிம்மத்வாலா’வும், சமீபத்தில் வெளியான ‘ஹம்சகல்ஸ்’ படமும் சரியாகப் போகவில்லை. ‘இட்ஸ் என்டர்டெயின்மென்ட்’ அடுத்த மாதம் ரிலீஸ். அந்தப் படமாவது ஹிட் அடிக்கவேண்டும் என்று தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கிறார் தமன்னா.

*யுவன் இப்போதெல்லாம் சொன்ன டயத்திற்கு பாட்டு கொடுத்துவிடுகிறார். எல்லோரும் பார்க்க முடிகிற நேரங்களில் ஸ்டுடியோவில் இருக்கிறார். ‘ஆனந்த யாழின்’ வெற்றி அவருக்கு அதிகப்படியான உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

*தென் ஆப்ரிக்காவில் வெள்ளையர்களின் நிறவெறியை எதிர்த்து எழுதிய வெள்ளை இனத்து பெண் எழுத்தாளர் நாடின் கோர்டிமர் தனது 90வது வயதில் மறைந்தார். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற இவர், புக்கர் உட்பட வாங்காத பரிசுகள் இல்லை. இவரது மூன்று நூல்கள் நிறவெறி காலத்தில் தடை செய்யப்பட்டிருந்தன. அரசியல் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து அரசைத் தீவிரமாக விமர்சித்தாலும், இவர் ஒருமுறைகூட கைது செய்யப்பட்டதில்லை என்பது ஆச்சரியம்!  

*கால்பந்து உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணியை விட அதிக புகழ் அடைந்தார் ஆக்ஸெல் டெஸ்பிகளேர். பெல்ஜியம் நாட்டு ரசிகையான இவர், தனது கவர்ச்சிகரமான அலங்காரத்தாலும் உடையாலும் மைதானங்களைக் கலக்கினார். ‘மிகச்சிறந்த ரசிகை’ என பலரும் இவரைத் தேர்ந்தெடுக்க, இவரது புகைப்படம் லட்சக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டது. அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘லாரியல்’ தனது விளம்பரத் தூதராக இவரை ஒப்பந்தம் செய்தது. ஆனால் அரிய வகை மான் ஒன்றை வேட்டையாடிவிட்டு இவர் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று வெளியாக, இந்த ஒப்பந்தம் ரத்தாகி விட்டது. போட்டோவால் புகழடைந்தவர், போட்டோவால் வாய்ப்பிழந்தார்.

*‘லிங்கா’ முடிந்ததும் இமயமலை ட்ரிப் அடிக்க திட்டமிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார். இம்முறை தனியே போகப் போவதில்லை. தனது ஆரம்ப கால நண்பர்கள், திரைப்படக் கல்லூரியில் தன்னுடன் படித்த நெருங்கிய நண்பர்களை அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார்.

*மறுபடியும் முழு வேகத்தில் திரையுலகிற்கு திரும்புகிறார் மீனா. தந்தை இறந்த பிறகு, தனித்திருக்கிற அம்மாவிற்கு துணை யாக அவரும் பெங்களூருவிலிருந்து திரும்பிவிட்டார். கணவரை வாரம் ஒருமுறை சென்று பார்க்கிறார்.

‘பில்லா-2’வில் பிகினியில் ஒரு வார்த்தையும் பேசாமல் முழு நீளத்துக்கு சோபாவில் படுத்துக் கிடப்பாரே... அவரை ஞாபகத்தில் கொண்டு வந்தீர்களா? அவர் தான் பார்வதி ஓமனக்குட்டன். திடீரென ‘‘இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்’’ என அதிரடியாக அறிவித்து விட்டார். யாருடா அது புது ராஜகுமாரன்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் வரலாற்றுப் பின்னணி கொண்டது. இதில் நாயகிஸ்ருதி. ‘‘சரித்திர காலத்தின் வித்தியாசமான காஸ்ட்யூம்களை அணிந்து நடிக்கப்போகும் அனுபவத்திற்காக காத்திருக்கேன்’’ எனும் ஸ்ருதியின் கண்களில் மின்னுகிறது ஆவல்.

*விஜய் ஆன்டனி, அனிருத், ஜி.வி.பிரகாஷை தொடர்ந்து ஸ்ரீகாந்த்தேவாவும் திரையில் முகம் காட்டப் போகிறாராம். வில்லனாக நடிக்க கேட்டு வரும் வாய்ப்புகளை ஏற்பதா, வேண்டாமா என யோசிக்கிறார் அவர். பிரமாண்ட வில்லன் ரெடி!

*கே.வி.ஆனந்த் பழைய நடிகர் கார்த்திக் நடிப்பில் மிரண்டுவிட்டார். ‘‘என்ன சார், இவ்வளவு இயல்பான நடிப்பை வச்சுக்கிட்டு வீட்டில இருக்கீங்க... ப்ளீஸ், ஃபுல்டைமா வாங்க சார்’’ என்று கேட்டுக் கொண்டார். அதை ட்விட்டரிலும் போட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார் ஆனந்த்.

பரபரப்பாக இருக்கிறது பாலா அலுவலகம். தான் இயக்கும் ‘தாரை தப்பட்டை’, சொந்த தயாரிப்பில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படம் என ஒரே சமயத்தில் இரண்டு படங்களை தொடங்கியிருக்கிறார். ‘தாரை தப்பட்டை’க்காக வரலட்சுமி சிக்கென்று மாறியிருக்கிறார். ‘‘பரத நாட்டியம் தொடங்கி பாலே வரைக்கும் நடனக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், கரகாட்டக் கலையே தனிதான்’’ என உருகும் வரு, முறையான பயிற்சியுடன் ஆட்டம் போட ரெடியாகி விட்டார்.

‘முகமூடி’ படத்தில் நடித்த பூஜா ஹெக்டே அப்போது யாருடைய கவனத்தையும் பெரிதாகக் கவரவில்லை. ஆனால், இப்போது ஹ்ரித்திக் ரோஷன் ஜோடியாகவே நடிக்கிறார். உண்மைதான், ப்ரியங்கா சோப்ரா ‘தமிழன்’ படத்தில் நடித்தபோது கூட நாம் அதிகம் கண்டுக்கவில்லையே!

*இரவினில் ஆட்டம், பகலினிலும் ஆட்டம்... வெங்கட்பிரபுவின் டெய்லி புரோகிராமில் முக்கிய அம்சம் இது. தப்பா நினைச்சிடாதீங்க... ஓயாத சினிமா வேலையில் உடற்பயிற்சியே இல்லாமல் வெயிட் போட்டு விட்டதால் காலை, மாலை இரு வேளையும் இறகுப் பந்து விளையாடி உடம்பை இறக்கிக் கொண்டிருக்கிறார்.

*பாண்டிராஜ் இயக்கும் சூர்யாவின் சொந்தப் படத்துக்கு ஒரு முக்கிய கேரக்டரில் ஜோதிகாவை நடிக்க வைக்க நினைத்தார். எவ்வளவுதான் நடிப்பதற்காக மனதை கரைக்கப் பார்த்தாலும், ‘ஸாரி’ என சொல்லிவிட்டார் ஜோ. இப்போது அதே கேரக்டரில் பிந்து மாதவி நடிக்கிறார். பொன் வைக்கிற இடத்தில் பூவா?

‘ஆம்பிளை’ படத்திற்காக சுந்தர்.சியிடம் நயன்தாராவை சிபாரிசு செய்தார் ஆர்யா. ஆனால், ஹன்சிகா அந்த இடத்தில் இருப்பதால் இந்தப் படத்திற்கு மட்டும் ‘நோ’ சொல்லி விட்டார் சுந்தர்.சி. அவர் படத்தில் காமெடி ரோலில் நடிக்க பிரியப்படுகிறார் நயன்.

*முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சந்தித்திருக்கிறது ‘ஒருதலைராகம்’ படக்குழு. ‘ஒருதலைராகம்’ சங்கர் இயக்கியுள்ள ‘மணல் நகரம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர்கள், பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து நெகிழ்ந்தனர். ‘‘காதல் காட்சிகளை வாயில் மியூசிக் போட்டபடியே டி.ராஜேந்தர் நடிக்கச் சொல்லிக் கொடுப்பார்’’ என்று ரூபா சொல்ல, அடுத்து பேச வந்த டி.ஆர், தான் டைரக்ட் செய்த ஸ்டைலை நடித்துக் காட்டி அப்ளாஸ் அள்ளினார்.