facebook வலைப்பேச்சு



மாமா பொண்ணு, அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுகள் சூழ வந்த கடைசி தலைமுறை நாமாகத்தான் இருக்க முடியும்.
- சசி ஷைல்

மெழுகைப் போல நொடிக்கு நொடி சாவுறத விட, ஒளியேத்திட்டு ஒரு நொடியில படக்குன்னு கண்ணு மூடுற தீக்குச்சி எவ்வளவோ பெட்டர்!
- கார்த்திக் ஆறுமுகம்

சிலர் விட்டுப் போன வெற்றிடங்களை யாராலும் நிரந்தரமாக நிரப்ப முடிவதில்லை...
- மஞ்சுபாஷினி ஜெகதானந்தன்

ஆசிலர் விட்டுப் போன வெற்றிடங்களை யாராலும் நிரந்தரமாக நிரப்ப முடிவதில்லை...
- மஞ்சுபாஷினி ஜெகதானந்தன்

நிலாவைப் பற்றிக்கொள்கிற என் பயணங்கள்,
என்னை எப்போதும் மீட்டெடுக்கின்றன...
- சக்திஜோதி

நிலாவைப் பற்றிக்கொள்கிற என் பயணங்கள்,
என்னை எப்போதும் மீட்டெடுக்கின்றன...
- சக்திஜோதி

காலோடு தலை போர்த்திக்கொண்டால் பேய், பிசாசால் நம்மைக் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணும் குழந்தையின் அறியாமை ரசிக்கவே வைக்கிறது.
- சாந்தி மாரியப்பன்

வாழ்வது அப்படியொன்றும் கடிதில்லை. மஞ்சள் எண் பலகை பொருத்திய டாடா குட்டி யானையும், அதில் பாட இளையராஜா பாட்டுகள் நிரம்பிய 8ஜிபி நினைவகமும் இருந்தால் போதும். எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம்!
- கவிஞர் மகுடேசுவரன்

கணவன் மனைவி க்கு இடையே அன்னியோன்யம் என்பது ஒருவர் தவறை மற்றவர் எந்த அளவுக்கு சகித்துக் கொள்கிறார் என்பதாகத்தான் இருக்கிறது.
- ப்ரவீனா ராஜன்

பிரெட்டை கண்டு பிடிச்சது வேணா வெள்ளக்காரனா இருக்கலாம்; அத வச்சு பஜ்ஜி போடலாம்னு கண்டுபுடிச்சது சாட்சாத் இந்தியன்தான்!
- குத்தாலம் பாலசுப்ரமணியம்

ரெட்டைப் பிள்ளைங்க இருக்க வீடும், ரெண்டு குக்கர வச்ச அடுப்பும் ஒண்ணு. சவுண்டு வரும்போது இதுவா அதுவான்னு கண்டுபிடிக்குறதுக்குள்ள ஆவி போய்டும்...

பெங்களூர் மாநகராட்சியில் ‘எலி ஊழல்’... 20 எலிகளைப் பிடிக்க ரூ.2 லட்சம் செலவு!
# எலிப்பொறியில் காஸ்ட்லியான வாஸ்து மீன் கருவாடு வச்சிருப்பானுங்களோ?
- கௌதமன் டிஎஸ் கரிசல்குளத்தான்

- ஸ்ரீதேவி செல்வராஜன்

 twitter வலைப்பேச்சு

@Aruns212
வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது.
# ஏதோ நமீதா, த்ரிஷா பத்தி சொன்னது போல!

@urs_priya   
என் கவலையெல்லாம் என் பிரார்த்தனைகளின்போது கடவுள் ஹெட்செட் அணியாமல் இருக்க வேண்டும் என்பதுதான்:)))

@senthilcp   
ஹோட்டல்ல அப்பளம் பரிமாறுன அடுத்த மைக்ரோ நொடில அத நொறுக்கி, வெச்ச சர்வரையே வெச்சமா? வைக்கலையா?னு நினைக்க வைப்பான் தமிழன்!

@Tottodaing  
பறவை சொன்ன ரகசியம்... ‘எல்லையற்ற இவ்வானில் இரையேதும் இல்லை’ என்பதே!

@naiyandi   
காதலைத் தொலைத்தவனும், சார்ஜரைத் தொலைத்தவனும் நிம்மதியாக இருந்ததாக
வரலாறு இல்லை!

 @iamkarki   
தலைவார சீப்பெடுக்கும்போதெல்லாம் சீக்கிய மதத்துக்கு மாறி விடலாம் என்ற எண்ணம் வலுப் பெறுகிறது.

@freeyavudu  
ஊர்வாயைமூட கைகள் போதாது... நம் காதுகளை மூடிக்கொள்ள நம் கைகளே போதும்!

@naaraju   
நேற்று ஓர் இந்தி நண்பனுக்கு, யார் தமிழ் நடிகர்கள், யார் தெலுங்கு என நீள்விளக்கம் கொடுத்தேன். ‘‘இப்போ சேகர்பாபு தமிழா’’ன்றான்.டேய், அது மகேஷ்பாபுடா!

@kattathora   
முகநக நட்பது நட்பன்று, ரம்ஜானுக்கு பிரியாணி தரும் அஹமது நட்பே நட்பு...

 @karuthujay   
மன்னிக்க பழகிக் கொண்டுவிட்டேன்... இனி துரோகிகளை சம்பாதிக்க வேண்டும்!

@TigerTayson
  எங்களுக்கு டவலு, பெட் ஷீட்டு, தலப்பா, முக்காடு... எல்லாமே வேஷ்டிதான்யா!

  # IsupportVesti

@tamilreporter
நீந்தும் மீனுக்குத் தெரியுமா...
தான் நீந்திக் கொண்டிருப்பது கேரி பேக்கில் என!

@RavikumarMGR    
பிளம்பர், டெய்லர், எலக்ட்ரீஷியன்... இவங்கள்லாம் எப்போ குடுத்த வாக்கைக் காப்பாத்துறாங்களோ அன்னிக்குத்தான் இந்தியா வல்லரசாகும்!