தத்துவம் மச்சி தத்துவம்



என்னதான் அடுக்கு மாடி வீட்டை அம்மா பெயரில் வாங்கினாலும் ‘அப்பார்ட்’மென்ட்னுதான் சொல்லணும். ‘அம்மார்ட்மென்ட்’னு சொல்ல முடியுமா?
- பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பி விட்டு வீட்டுல நண்பர்களோட குடியும் கும்மாளமுமாய் இருப்போர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

என்னதான் ஜாதகத்துல முதல் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம்னு இருந்தாலும், அந்த பாதத்தையெல்லாம் வச்சு ஒரு அடி கூட நடக்க முடியாது!
- காதலியின் காலடித் தடம் பார்த்து நடப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘ஒற்றன் எதற்கு கூடவே அரண்மனை வைத்தியரையும் அழைத்துக்கொண்டு வருகிறான்?’’
‘‘மன்னரிடம் போர்ச் செய்தியைச் சொல்லும்போது அவருக்கு நெஞ்சு வலித்தால் உதவுவாரே என்றுதான்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘எல்லாருக்கும்
ஒரு கவலைன்னா,
தலைவருக்கு வேற கவலை!’’
‘‘என்ன அது?’’ ‘‘நஸ்ரியா, அமலா பாலைத் தொடர்ந்து சமந்தாவும் கல்யாணம்
பண்ணிக்குவாங்களோன்னுதான்!’’

‘‘தலைவர் எல்லா மீட்டிங்லயும் பாதிக்கதை சொல்றதோட நிறுத்திக்கறாரே... ஏன்?’’
‘‘அப்பதான் மீதிக் கதையை கேட்க, மக்கள் அடுத்த மீட்டிங்குக்கு வருவாங்களாம்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘தலைவர் அநியாயத்துக்கு
அப்பாவியா இருக்கார்!’’‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘நூறு ரூபாய்க்கு சில்லரை கொடுத்தால்,
அஞ்சு ரூபா கமிஷன் தர்றாங்களே...
அதுதான் சில்லரை வணிகமான்னு
கேக்கறாரு!’’

- அதிரை புகாரி,
அதிராம்பட்டினம்.

‘‘கல்யாணப் பத்திரிகையில்
மணப்பெண்ணுக்குத் தெரிந்தவர்
கள்னு ஏழெட்டு ஆண்கள் பெயர் போட்டிருக்குதே... யார் அவங்க?’’
‘‘மணப்பெண்ணோட
முன்னாள் காதலர்களாம்!’’
- ஏ.எஸ்.யோகானந்தம்,
ஔவையார்பாளையம்.