பக்குவத் தலைவி



அண்டார்டிகாவில் கால் பதித்த முதல் தமிழ் பெண் ஷானு சுப்ராவைப் பார்த்து வியந்தோம். அவர் அடுத்தடுத்து நிகழ்த்தவிருக்கும் சாகசத்தை நினைத்தால்தான் மனம் கலங்குகிறது. எங்கள் பிரார்த்தனைகள் அவருக்கு!
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

புல்லட் ரயில்கள் எல்லாம் நமக்கு ஆடம்பரம். இருக்கும் ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தினாலே போதும் என்று சரியாகச் சொல்லி விட்டீர்கள். இருப்பதா, பறப்பதா என்பதை சம்பந்தப்
பட்டவர்கள் முடிவு செய்யட்டும்!
- ம.அக்ஷயா அரூர்.

சிங்காரச் சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு விவரம் கச்சிதம். சென்னையில் இத்தனை நாய்களா? அவற்றுக்கு இப்படிப்பட்ட குணமா? என ஒவ்வொரு தகவலும் அசர வைத்தது!
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

‘‘இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்’’ என பார்வதி ஓமனக்குட்டன் சொன்னதாய் குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்களே. இத்தனை ஓபனா போஸ் கொடுக்கும் ஓமனா தன் முடிவை மாத்திக்கவே மாட்டாங்களா?
- கே.வி.ரகுநாதன், மதுரை.

‘ஆண்பாவம்’ படத்தில் பாண்டியராஜனை பாப்புலராக்கிய பாடல் ‘காதல் கசக்குதய்யா...’ பற்றிய தகவல்கள், வாலிபக் கவிஞர் வாலிக்கு சரியான நினைவஞ்சலியாக அமைந்தது.
- லெட்சுமி மணிவண்ணன், சிக்கல்.

அட்டைப் படத்தில் டாப்ஸியின் படம், டாப்! முந்திரிப் பழம் மாதிரி மொழுக் மொழுக்குனு இருக்காங்க. வசீகரப் பார்வையில சுண்டி இழுந்துட்டாங்க எங்களை.
- இரா.குமார், சேலம்.

மரபணு மாற்றப் பயிர்கள் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் என்பதில் ‘ஆரஞ்சு கலர் வாழைப் பழமும்’ விதிவிலக்கல்ல. அது
மாதிரி ஆராய்ச்சிகளை ஒரு போதும் நாம் அனுமதிக்கக் கூடாது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘வேலை வாங்கித் தருவதாக பணம் பறிக்கும் இணையதளங்கள்’ பற்றிய உஷார் ரிப்போர்டை சரியான நேரத்தில், வெளியிட்டு வேலையில்லா பட்டதாரிகளின் (வி.ஐ.பி) வயிற்றில் பாலை வார்த்துவிட்டீர்கள்!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

நீங்களும் த்ரிஷாவை சிக்கலில் மாட்ட வைக்க எவ்வளவோ கொக்கி கொஸ்டியன்களைப் போட்டுப் பார்க்கிறீர்...  கொஞ்சமும் கோபப்படாமல் பதிலளித்து ஒரு பக்குவத்துக்கு வந்துட்டாங்க பாருங்க என் தலைவி!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

வாரா வாரம் பாம்பன் சுவாமிகளின் அற்புதங்களை படித்து மெய்சிலிர்க்கிறேன். இந்த வாரம் இதய நோய் நீக்கும் ‘கமல பந்தம்’ மந்திரத்தை வெளியிட்டு பாம்பன் சுவாமிகளின் பக்தர்கள் நெஞ்சத்தை பரவசப்படுத்திவிட்டீர்கள்!
- எஸ்.வினதா, காங்கேயம்.