இன்டர்வியூ 4



நேர்காணலில் போய் அமர்ந்ததும் சங்கரிடம் 10 கேள்விகளை வரிசையாகக் கேட்டார் எம்.டி. அவனால் 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல முடிந்தது. ‘‘நீங்க போகலாம்’’ என்று எம்.டி சொன்னதும், நொந்து போய் வெளியில் வந்தான்.அடுத்து முரளி என்ற இளைஞன் உள்ளே அழைக்கப்பட்டான். ‘இவன் எப்படிப் பண்ணுகிறான் பார்ப்போம்’ என்று காத்திருந்தான் சங்கர். சற்று நேரத்தில் உற்சாகமாக வெளியே வந்தான் அந்த இளைஞன். ‘‘உள்ள 10 கேள்வி கேட்டாங்களா?’’
‘‘ஆமாம் சார்!’’

‘‘நீங்க எத்தனைக்கு பதில் சொன்னீங்க?’’‘‘7 பதில் சரியா சொல்லிட்டேன்!’’ என்றதும் சங்கரின் மனம் புஸ்ஸென்று காற்று இறங்கியது. உள்ளே...  ‘‘யாரை செலக்ட் பண்ண போறீங்க சார்?’’ என்று எம்.டியிடம் மேனேஜர் கேட்டார். ‘‘நாம கேட்ட 10 கேள்விகளில் 3 கேள்விகள் கம்பெனி பத்தினது. 7 கேள்விகள் பொதுவானது. கம்பெனி பத்தின 3 கேள்விகளுக்கும் சங்கர் மட்டும்தான் பதில் சொன்னார். பொதுவா கேட்ட 7 கேள்விக்குத்தான் முரளி பதில் சொன்னார். நமக்கு கம்பெனிதானே முக்கியம்? அதனால சங்கருக்குத்தான் வேலை’’ என்றார் எம்.டி புன்னகையோடு!    

இரா.பாரதிதாசன்