பாம்!



இந்த சூட்கேஸின் உள்ளே இருப்பது டைம் பாம். வெளிநாட்டுத் தயாரிப்பு. ரொம்ப துல்லியமா வேலை செய்யும். படுபயங்கரமான செயல்திறன். இது மாதிரி ஒரு வரப்பிரசாதம் இதுவரை நம் இயக்கத்துக்குக் கிடைத்ததில்லை.

இன்று முதல் நம் ஆபரேஷன் எல்லாமே வெற்றிதான்’’ - அந்தக் கூட்டத்தின் தலை வன் கொக்கரித்தான். அவன் கட்டளைப்படி சூட்கேஸை எடுத்துக்கொண்டு காரில் போன இளைஞன், குறிப்பிட்ட அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வாசலில் காரை நிறுத்திக் காத்திருந்தான்.

வாட்ச்சில் டைம் பார்த்தான். இன்னும் பதினைந்து நிமிடம் இருக்கிறது. ஐந்து நிமிடம் கழித்து, காம்ப்ளக்ஸ் உள்ளே நுழைந்து, இந்த சூட்கேஸை எங்காவது ஒரு மூலையில் வைத்துவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.அந்த நிமிடமே அந்த இடம் அதிர்ந் தது!‘பூம்ம்...’‘காரில் வெடிகுண்டு வெடித்து, இளைஞர் உடல் சிதறி மரணம்’ - செய்தியை வாசித்துவிட்டு எரிச்சலுடன் செய்தித்தாளை எறிந்தான் கூட்டத்தின் தலைவன்.

உதவியாளன் அருகில் வந்தான்...‘‘நீங்க கொடுத்த டைம்பாம் வெளிநாட்டு தயாரிப்பு. அது துல்லியமா வேலை செஞ்சிடுச்சி பாஸ். ஆனா, அவன் கையில் கட்டியிருந்த வாட்ச் நம்ம ஊர் தயாரிப்பு. அது கால் மணி நேரம் ஸ்லோவா ஓடி கழுத்தறுத்துடுச்சி...’’  

சுபாகர்