சகுனியின் தாயம்



‘இளமாறனும் யவன ராணியும் கைப்பற்றத் துடிக்கும் பொருள் புகார் சிறைச்சாலையில் இருக்கலாம். இது என் சந்தேகம்தான்...’’ சேர மன்னர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை நிதானமாகச் சொன்னார்.‘‘எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்?’’ சீன சக்கரவர்த்தியின் குரலில் அமைதி தெரிந்தது. ‘‘அதங்கோட்டாசானை மணிபல்லவத் தீவில் சோழ மன்னர் சந்தித்ததாக குறிப்பிட்டார்...’’
‘‘ம்...’’

‘‘அப்போது, ‘நீயும், யவன ராணியும், சீன சக்கரவர்த்தியும் நினைப்பது போல் இளமாறன் சாதாரண பாண்டிய வீரன் அல்ல...’ என்று ஆசான் குறிப்பிட்டதாக சோழ மன்னர் நம்மிடம் தெரிவித்தார்...’’ ‘‘ஆமாம். அதற்கும் புகாரின் சிறைக்கும் என்ன தொடர்பிருக்கிறது?’’

‘‘நிறைய இருக்கிறது சீன சக்கரவர்த்தி. தமிழக சிறைகளில் பெரும்பாலும் குற்றவாளிகளை விட அரசியல் கைதிகளும் அந்தரங்க ரகசியங்களை அறிந்த பிரஜைகளும்தான் அடைக்கப்படுவார்கள். அந்த வகையில் புகாரின் சிறையில் நிச்சயம் கரிகால சோழன் காலத்து ரகசியம் ஏதேனும் அடைக்கப்பட்டிருக்கலாம். அதை வெளியே கொண்டு வர இளமாறனும், யவன ராணியும் முயலலாம்...’’

‘‘அதாவது அவ்விருவரும் கைப்பற்றத் துடிக்கும் பொருள் அஃறிணை அல்ல, உயிரிணை என்கிறீர்கள். அப்படித்தானே?’’ அதுவரை பலத்த சிந்தனையில் இருந்த சோழ மன்னர் பெருநற்கிள்ளி சட்டென்று கேட்டார்.

‘‘இதையே இன்னொரு வகையிலும் சொல்லலாம்...’’ சீன சக்கரவர்த்தியின் வார்த்தைகளில் தெரிந்த கூர்மை மற்ற இரு மன்னர்களின் உள்ளத்தையும் தைத்தது.
‘‘என்னவென்று?’’‘‘இளமாறன் சோழ அரச பரம்பரையைச் சேர்ந்தவன் என்பது...’’
‘‘புரியவில்லையே?’’

‘‘சோழ மன்னரே.... எங்கள் நாட்டில் ஒரு வழக்கம் உண்டு. அரியணைக்குச் சொந்தம் கொண்டாடும் வாரிசை அல்லது இது குறித்து உண்மை தெரிந்த அந்தரங்க மெய்க்காப்பாளர்களை சிறையில் அடைத்துவிடுவோம். அப்படி யாரையேனும் நீங்களோ, உங்கள் தந்தையோ அடைத்து வைத்திருக்கலாம்...’’
‘‘எனக்குத் தெரிந்து அப்படி யாரும் அங்கில்லை...’’
‘‘அறியாமல் இருந்தால்?’’

‘‘மன்னருக்குத் தெரியாமல் அப்படி நிகழ வாய்ப்பில்லை சீன சக்கரவர்த்தி. ஏனெனில் தீர்ப்பு கூறும் அதிகாரம் எங்கள் நாட்டில் அரசருக்கு மட்டுமே உண்டு...’’
‘‘ஒருவேளை அந்தப்புர ஆலோசனை மண்டபம் உங்கள் கண்ணில் மண்ணை தூவியிருந்தால்..?’’

‘‘என்ன சொல்கிறீர்கள்?’’‘‘கோபம் வேண்டாம் சோழ மன்னரே...’’ அவரை அமைதிப்படுத்திய சேர மன்னர், ‘‘சீன சக்கரவர்த்தி சொல்வதிலும் பொருள் இருக்கிறது...’’ என்றார்.
‘‘என்ன அர்த்தத்தைக் கண்டீர்கள்?’’

‘‘உங்களுக்கு தெரியாத அரண்மனை ரகசியம் உங்கள் அன்னைக்கோ, பெரியன்னைக்கோ, சிற்றன்னைக்கோ தெரிந்திருக்கலாம். நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் என்று நினைத்து உங்களிடமிருந்து மறைத்திருக்கலாம். காதும் காதும் வைத்தது போல் சம்பந்தப்பட்ட நபரை வேறு குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைத்திருக்கலாம்...’’
‘‘நீங்கள் சொல்வது அனைத்தும் ஊகம்தானே?’’

‘‘மறுக்கவில்லை. அதே நேரத்தில், எழுந்த சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதிலும் தவறொன்றுமில்லையே?’’ ‘‘புரிகிறது. வாருங்கள் நேரடியாகவே விசாரணையில் இறங்குவோம்...’’

பெருநற்கிள்ளியை பின்தொடர்ந்து சேர மன்னரும் சீன சக்கரவர்த்தியும் சென்றார்கள்.
புகார் சிறையை மூவரும் அடைந்தபோது -எந்த அதிர்ச்சியும் அவர்களுக்காக காத்திருக்கவில்லை.

அடைக்கப்பட்டிருந்த அனைவரும் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள். வழிப்பறிக் கொள்ளையர்கள். வணிகர்களிடம் திருடியவர்கள். முக்கியமான விஷயம், வழக்கை விசாரித்து இவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தவர் பெருநற்கிள்ளிதான். அரசியல் கைதியோ, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வயதானவரோ... அங்கு ஒருவருமில்லை.

மூன்று மன்னர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். கண்களைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. ‘இளமாறனும், யவன ராணியும் எதற்காக புகாரையே சுற்றிச் சுற்றி வருகிறார்கள்... எந்தப் பொருளை அபகரிக்க முயல்கிறார்கள்...’ என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. வேறு வழியில் முயற்சிக்கலாம் என்றபடி புறப்பட்டுச் சென்றார்கள்.

அப்படிச் சென்றவர்களை இரு சோழ வீரர்கள் வாயில் வரை சென்று வழியனுப்பினார்கள்.
அவர்களில் ஒருவன், மாறுவேடத்தில் இருந்த இளமாறன். மற்றவர், ஆண் வேடம் தரித்த யவன ராணி.

அவர்கள் இருவரும் தேடி வந்த பொருள் அந்த சிறைச்சாலையின் மூன்றாவது கொட்டடியில்தான் இருந்தது.

‘‘கமான்... கமான்... அந்த மோதிரத்தைத் தேய் மகேஷ்... அதுக்காகத்தான் நான் காத்திருக்கேன்...’’ தன் புருவத்திலிருந்த ஒரு முடியைக் கிள்ளி காற்றில் ஊதிய கையோடு மாயக் கண்ணாடியை பார்த்து மந்திரவாதி கர்ஜித்தார். பேய் சிரிப்பு சிரித்தார்.

அதே நேரம் -
அவர் எதிர்பார்த்தது போலவே தன் விரலிலிருந்த மோதிரம் ஏன் ஒளிர்கிறது என்று அறிய அதை மகேஷ் தேய்த்தான்.
அடுத்த நொடி -

அங்கு தேவதை தோன்றினாள். யெஸ், அவனுக்கு வரம் கொடுத்த அதே ஏஞ்சல்தான். சூனியக்காரப் பாட்டியால் சிறையில் அடைக்கப்பட்டவளேதான்!
‘‘சொல்லு மகேஷ்... எதுக்காக என்னை கூப்பிட்ட?’’
‘‘ஓ... சாரி ஏஞ்சல். தவறுதலா இதை நான் தேய்ச்சுட்டேன்...’’
‘‘தவறோ, சரியோ... நான் வந்துட்டேன். என்ன வேணும்னு கேளு...’’
‘‘கேட்டே ஆகணுமா?’’

‘‘ஆமா. நான் கொடுத்தே ஆகணும்...’’
‘‘சரி, அந்த வாட்டர் ஃபால்ஸ் எங்க இருக்குன்னு சொல்லுங்க...’’
‘‘எந்த அருவி?’’
‘‘அதுதான் சூனியக்கார பாட்டி பாதுகாத்துட்டு இருக்காங்களே ஒரு நீர்வீழ்ச்சி...’’
‘‘ஓ... அதுவா?’’

‘‘ஆமா. அதேதான். அந்த வாட்டர் ஃபால்ஸுல இருக்கிற தண்ணீரை தெளிச்சாதான் அலாவுதீனுக்கு சாப விமோசனம் கிடைக்குமாம்...’’
‘‘ஓகே. இந்தக் கடல்லேர்ந்து நூறு மைல் தூரத்துல அந்த அருவி இருக்கு...’’
‘‘ம்...’’

‘‘கோடு கிழிச்சா மாதிரி நேரா போ. எந்தப் பக்கமும் வளையாதே...’’
‘‘சரி...’’

‘‘ஆனா, இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள அங்க நீ போயாகணும். ஆறாவது நிமிஷத்துல அந்த நீர்வீழ்ச்சி மறைஞ்சுடும். அப்புறம் அது திரும்பவும் தோன்ற நூறு வருஷங்கள் ஆகும்...’’
‘‘ஆஹா... இதோ இப்பவே அங்க போறேன்...’’
‘‘ஒன் மினிட் மகேஷ்...’’
‘‘என்ன ஏஞ்சல்?’’

‘‘அந்த அருவியை பறக்கும் நாகம் பாதுகாத்துட்டு வருது...’’
‘‘என்னது... பாம்பா?’’
‘‘ஆமா. அதுவும் அஞ்சு தலை நாகம். அதை வீழ்த்தினாதான் உன்னால நீரை எடுக்க முடியும்...’’
‘‘ஐயோ... பாம்புன்னா எனக்கு பயமாச்சே?’’

‘‘அது முன்னாடி. இப்பத்தான் நீ சர்வசக்தி படைச்சவனாச்சே...’’
‘‘ஆனாலும் உடம்பெல்லாம் நடுங்குது ஏஞ்சல்...’’
‘‘தைரியமா போ. கண்டிப்பா வெற்றி உனக்குத்தான்...’’
‘‘சரி, ஏதாவது ஐடியா?’’
‘‘எதுக்கு?’’

‘‘பாம்பை வீழ்த்த...’’
‘‘அதை சொல்ற அதிகாரம் எனக்கில்லை மகேஷ்...’’
‘‘ப்ளீஸ்! ஏதாவது க்ளூவாவது கொடுங்களேன்...’’
‘‘அப்படி கொடுத்தா என் தலை வெடிச்சுடும்...’’

‘‘அப்படீன்னா வேண்டாம்... விட்டுடுங்க! நான் சமாளிச்சுக்கறேன்...’’
‘‘சாரி மகேஷ்... என்னை தப்பா எடுத்துக்காதே!’’
‘‘சேச்சே... நோ ப்ராப்ளம்!’’
‘‘ஓகே. ஆல் தி பெஸ்ட்...’’
‘‘தேங்க்ஸ் ஏஞ்சல்...’’

சொன்ன மகேஷ், ஸ்பைடர் மேனையும், ஹாரி பார்ட்டரையும் சுமந்தபடி அருவியை நோக்கி காற்றில் பறக்க ஆரம்பித்தான். அதே நேரம் -மின்சாரக் கம்பிக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த தேவதை புழுவாகத் துடித்தாள்.‘‘தப்பு நடந்து போச்சே... இனி நான் என்ன செய்வேன். என் தோற்றத்துல மகேஷ் முன்னாடி நின்னது நானில்ல...

 அந்த சூனியக்காரப் பாட்டி. பாவம் அவன், சின்னப் பையன். அதனாலதான் அவனால கண்டுபிடிக்க முடியலை. ஒரு செகண்ட் தன் முன்னாடி நின்னவளோட காலை பார்த்திருந்தான்னா உண்மை புரிஞ்சிருக்கும். பட்... இனி அதைப் பத்தி பேசிப் பயனில்லை... இனி நடக்க வேண்டியதைத்தான் பார்க்கணும்.

ஆனா... ஆனா... என்னால என்ன செய்ய முடியும்? வழி எதுவும் தெரியலையே... அலாவுதீனுக்கு சாப விமோசனம் தர்ற அருவி, மகேஷ் போற திசைக்கு நேர் பின்னாடி இருக்கே... இதை எப்படி அவனுக்குத் தெரியப்படுத்த? அவனை எப்படியாவது அந்த அஞ்சு தலை நாகத்துகிட்ட மாட்டி விடணும்னு மந்திரவாதி தாத்தாவும் சூனியக்கார பாட்டியும் ப்ளான் பண்ணியிருக்காங்க. இதை முறியடிக்கணும்... மகேஷை காப்பாத்தணும்... என்ன செய்யலாம்? கடவுளே... எனக்கு சக்தியைக் கொடு...’’மண்டியிட்டு மன்றாடினாள். அவளையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து கன்னத்தில் வழிந்தது...

‘‘ஒரு கவளம் உணவு ஏழு பேருக்குப் போதுமே..?’’
கேட்ட சக சார்வாகனரை உற்றுப் பார்த்த அந்த மனிதரும் சார்வாகனர்தான். இருவரும் அஸ்தினாபுரத்துக்கு வெளியே இருந்த மயானத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகில் சிதை ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விண்மீன்களின் கண்சிமிட்டலை அனுபவித்தபடி தன் சகாவை பார்த்து புன்னகைத்தார்.
‘‘எதற்காக சிரிக்கிறீர்கள்? நான் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது?’’

‘‘தவறொன்றுமில்லை. சார்வாகனர்களான நமக்கு ஒரு கவளம் உணவு ஒரு நாளைக்கல்ல... ஒரு வாரத்துக்குக் கூட போதும். ஆனால்..?’’
‘‘ஏன் நிறுத்திவிட்டீர்கள்?’’‘‘காந்தார தேசத்து மன்னர் குடும்பத்துக்கு அது போதாது. ஒரு நாளைக்கு நான்கு வேளை அறுசுவை உணவை உண்டு பழக்கப்பட்டவர்களால் இதை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?’’‘‘முடியாதுதான். அதனால்தான் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்களா?’’

‘‘ஆம். அப்படி நடக்க வேண்டுமென்றுதான் பீஷ்மர் விரும்பினார். அதனால்தான் கட்டளையிட்டபடி ஒரு கவளம் உணவை ஒரு நாளுக்கு வழங்கச் சொல்லவில்லை. பதிலாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு நாளொன்று க்கு ஒரு வேளை உணவை மட்டும்... அதுவும் அரை வயிறு நிரம்பும் அளவுக்கு கொடுக்கச் சொன்னார்...’’
‘‘எதனால் இப்படி மாற்றினார்...’’
‘‘அப்போதுதானே வயிறு முரண்டு பிடிக்கும்...’’

‘‘புரியவில்லையே..?’’
‘‘இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது சார்வாகனரே... வயிறு முற்றிலும் காய்ந்துவிட்டால் செயலிழந்துவிடும். எனவே கொஞ்சமாக உணவை வழங்கினார்கள். இதனால் எந்நேரமும் ‘பசி... பசி...’ என காந்தார தேசத்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் கதற முடிந்தது. ஒரு வாரம் வரை இப்படி ஒருவேளை உணவை வழங்கியவர்கள் பிறகு ஒரு கவளம் சோற்றுருண்டையை மட்டும் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு கொடுத்தார்கள். இதுவும் ஐந்து நாட்கள்தான். அதன் பின்னர் ஏழு பேருக்குமாக சேர்த்து ஒரேயொரு கவளத்தை மட்டும், அதுவும் ஒரேயொரு வேளை மட்டும் வழங்கினார்கள். இதனால்தான் அந்த விபரீதம் நடந்தது...’’

‘‘ம்...’’
‘‘பசி அரக்கனை வெல்லும் சக்தி மானிடர்களுக்கில்லை. பசியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க... தர்மம், நியாயம், நேர்மை, அறம் எல்லாம் பறந்து போகும். எப்பேர்ப்பட்ட இழி செயலிலும் இறங்கத் துணிவு ஏற்படும். அடுத்தவர்களைக் கொன்று அவர்கள் சதையை உண்ணும் வேகம் அதிகரிக்கும்.

கிடைக்கும் உணவை பங்கிட்டுக் கொள்ளத் தோன்றாது. இதனால்தான் ஆளும் வர்க்கம் எப்போதும் உழைக்கும் மக்களுக்கு அரை வயிற்றுக்கு கஞ்சி வழங்குகிறது. உணவு கிடைக்கவும் வேண்டும். அதே நேரம் அது போதவும் கூடாது. இப்படியிருந்தால்தான்
சிந்தனை, உணவில் மட்டுமே நிற்கும்...’’
‘‘ம்...’’

‘‘பீஷ்மரின் நோக்கம் சுபாலனையும் அவன் வம்சத்தவரையும் அழிப்பதுதான்.
எனவேதான் அவர்களே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும்படி செய்தார்...’’
‘‘ம்...’’

‘‘எதிர்பார்த்தது போலவே கிடைக்கும் ஒரு கவள உணவையும் தாங்களே உண்ண வேண்டும் என ஒவ்வொருவரும் நினைத்தார்கள். பங்கு கேட்க வந்த தங்கள் ரத்த பந்தங்களை அடித்து உதைத்தார்கள்...’’

‘‘இதை தடுத்து நிறுத்தத்தான் சுபாலன் அந்த முடிவுக்கு வந்தாரா?’’
‘‘ஆம்... அந்த முடிவு தான் தாயத்தையும் உருவாக்கியது... சகுனியையும் வாழ வைத்தது... இப்போது கௌரவர்களையும், பாண்டவர்களையும் ஒருசேர அழிக்கவும் போகிறது...’’
‘‘அதாவது பீஷ்மரின் வம்சமே பூண்டோடு பொசுங்கப் போகிறது. அப்படித்தானே?’’
இதற்கு பதில் சொல்ல அந்த சார்வாகனர் முயன்றார்.

ஆனால் -
‘உஸ்ஸ்ஸ்ஸ்’ என்று எழுந்த சத்தம் உரையாடலை தடுத்து நிறுத்தியது.
என்னவென்று அறிய இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். புருவத்தை உயர்த்தினார்கள்.
காரணம்... அந்த ஓசை, எரிந்து கொண்டிருந்த சிதையின் தீ நாக்குகளிலிருந்து வெளிப்பட்டதுதான். அது மட்டுமல்ல, நெருப்பின் ஜுவாலையும் ஓர் உருவமாக மாறியிருந்தது.

அந்த உருவம் -முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஓர் ஆட்டின் தோற்றம்.
ஏற்றிய புருவத்தை இருவரும் இறக்குவதற்குள் அடுத்த சம்பவம்.

சிதை பட்டென்று வெடித்துச் சிதறியது. மங்கல நாண் ஒன்றும் பறந்து வந்து அவர்கள் காலடியில் விழுந்தது.
எடுத்துப் பார்க்காமலேயே அது என்னவென்று இருவருக்கும் புரிந்தது.

தாலி. காந்தாரி தன் முதல் திருமணத்தின்போது தனக்குத் தானே அணிந்துக் கொண்ட நாண்...
‘‘இளவரசனும் திவ்யாவும் பெரிய தப்பை செய்திருக்காங்க...’’ என்றபடியே கதிரின் இல்லத்துக்குள் நுழைந்தார் தமிழரசன்.
‘‘என்ன சொல்றீங்க?’’ தேன்மொழி புரியாமல் கேட்டாள்.
‘‘ஸ்காட் வில்லியம்ஸை பிணைக் கைதியா பிடிச்சிருக்காங்க...’’

‘‘குற்றப் பத்திரிகையை
வாங்கின தலைவர் தலை குனிஞ்சுட்டாரா... ஏன்?’’
‘‘ஆயிரம் பக்கத்துல எதிர்பார்த்துப் போனா, வெறும் ஐம்பது பக்கத்துல சின்னதா இருந்துச்சாம்!’’

‘‘தலைவரோட சம்சாரம் ஏன் கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போறாங்க..?’’
‘‘அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மாதிரி, அவங்க அதிருப்தி மனைவி ஆகிட்டாங் களாம்!’’

‘‘நர்ஸரி ஸ்கூல் திறப்பு விழான்னதும், மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு தலைவர் கிளம்பிட்டாரே... ஏன்?’’‘‘நஸ்ரியா ஸ்கூல்னு அவர் காதுல விழுந்திருக்கு!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

(தொடரும்)

கே.என்.சிவராமன்