சகுனியின் தாயம்



‘‘வாட்?’’ தேன்மொழி அதிர்ந்தாள். ‘‘ஸ்காட் வில்லியம்ஸை பிணைக்கைதியா பிடிச்சிருக்காங்க...’’ தமிழரசன் மீண்டும் அதே அழுத்தத்துடன் சொன்னார். ‘‘எங்க?’’ அமைதியாக இருக்க முயற்சித்தபடியே ரங்கராஜன் வினவினான். ‘‘சித்தூர்ல...’’

‘‘அங்க எதுக்கு ஸ்காட் வில்லியம்ஸ் போனான்?’’ கதிர் பரபரத்தான்.‘‘இளவரசனை தன் பக்கம் சேர்க்க...’’ அவர்கள் மூவரையும் பார்த்தபடியே பதிலளித்த தமிழரசன் தரையில் அமர்ந்தார். எவர்சில்வர் சொம்பிலிருந்த நீரைக் குடித்தார்.
‘‘இளவரசன் இங்கதானே இருக்கான்?’’

‘‘இல்ல. மூணு நாளைக்கு முன்னாடியே அவன் திவ்யாவோட திருப்பதிக்கு போயிட்டான் கதிர். திட்டம் போட்டு ஆளைத் தூக்கியிருக்காங்க...’’‘‘கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தோழர்...’’ என்றபடி ரங்கராஜன் அவர் அருகில் அமர்ந்தான். அனைவருக்கும் தேநீர் தயாரிக்கும்படி தன் மனைவியிடம் சொல்வதற்காக கதிர் உள்ளே சென்றான். தேன்மொழி சுவரில் சாய்ந்தபடி நின்றாள். பார்வை மட்டும் தமிழரசன் மீதே படிந்திருந்தது.

புரிந்து கொண்டவர் போல் பேச ஆரம்பித்தார். ‘‘எந்த ஆதாரத்தைத் தேடி நீங்க ரெண்டு பேரும் ராகவேந்திர ராவ் வீட்டுக்குப் போனீங்களோ, அதனோட நகலை அவர் இளவரசன் சார்ந்த அமைப்புகிட்டயும் கொடுத்திருக்கார்...’’‘‘யாரு? திருப்பதி தேவஸ்தான உறுப்பினரா இருந்தாருன்னு சொன்னீங்களே... அவரா ரங்கராஜன்?’’
கேட்ட தேன்மொழியை திரும்பிப் பார்த்து ‘ஆம்’ என்பது போல் ரங்கராஜன் தலையசைத்தான்.

இறந்தது போல் அந்த ராகவேந்திர ராவ் காட்சியளித்ததும், உடனடியாக அவர் தொண்டையில் சிக்கியிருந்த துணுக்கை ரங்கராஜன் அகற்றியதும், அவன் மருத்துவப் படிப்பை படித்திருந்தவன் என்பதை அந்த கணத்தில் தான் அறிந்து கொண்டதையும் நினைத்துப் பார்த்தாள். அந்த ராகவேந்திர ராவ் இவர்களது அமைப்பைச் சேர்ந்தவர் இல்லையா? அவளுக்குள் எழுந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக தமிழரசன் தொடர்ந்தார்.

 ‘‘தமிழகத்துல இருக்கிற எல்லா புரட்சிகர அமைப்புகளோடயும் அவருக்கு தொடர்பு இருந்ததால, எல்லாருக்குமே ஸ்காட் வில்லியம்ஸ் பத்தியும், ரெட் மார்கெட் தொடர்பாவும் தனக்கு கிடைச்ச ஆதாரங்களை கொடுத்திருக்கார். அப்படித்தான் இளவரசன் சார்ந்த குழுவுக்கும் கிடைச்சிருக்கு...’’

‘‘ம்...’’ என்று உச்சுக் கொட்டினானே தவிர ரங்கராஜன் வேறு எதுவும் சொல்லவில்லை. கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு மக்களைத் திரட்டி போராட்டத்தில் இறங்கியிருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்படி சாகசச் செயல்களில் இறங்கிவிட்டார்களே... இதனால் தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து புரட்சிகர குழுக்களுக்கும் ஆபத்தாயிற்றே?‘‘இந்த நெருக்கடியை நாம சந்திச்சாகணும். ஏன்னா, ஸ்காட் வில்லியம்ஸை மீட்க அரசு நியமிக்கப் போற குழுவுக்கு தலைவரா வால்டர் ஏகாம்பரம் ஆகலாம்னு நம்பத்தகுந்த தகவல் சொல்லுது...’’

‘‘அவன் சாதாரணமாவே மார்க்சிய லெனினிய அமைப்புகளை வேட்டையாடுவான். இப்ப சலங்கை கட்டி ஆடுவானே...’’ மூவருக்கும் டீ கொடுத்தபடியே கதிர் சொன்னான்.
‘‘ஆடட்டும். 1980கள்ல எப்படி நாம இதை எதிர்கொண்டோமோ அப்படி இப்பவும் களத்துல நின்னு சந்திப்போம். மக்கள் நம்ம பக்கம் இருக்காங்க. ரெட் மார்கெட் பத்தின விவரங்களை எவ்வளவு விரைவா முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா அவங்ககிட்ட கொண்டு போய் சேர்ப்போம்...’’

‘‘தோழர், ஒரு சந்தேகம்?’’ - டீயை உறிஞ்சியபடியே கதிர் இடையில் புகுந்தான். ‘‘கேளுங்க...’’‘‘எந்த நம்பிக்கைல சித்தூர் பக்கம் ஸ்காட் வில்லியம்ஸை கடத்தியிருக்காங்க? அவங்க அமைப்புதான் இப்ப ஆந்திராவுல செயலிழந்து போயிருக்கே?’’‘‘உண்மைதான். ஆனா, தங்கப்பனோட குலதெய்வக் கோயில் அங்கதானே இருக்கு?’’தேன்மொழிக்கு எதுவும் புரியவில்லை. ‘‘எந்த தங்கப்பன்?’’பதில் சொல்வதற்காக வாய் திறந்த ரங்கராஜன் சட்டென்று அமைதியானான். காரணம், வாசல் பக்கம் கேட்ட செருப்புச் சத்தம். விவரம் அறிய வெளியே சென்ற கதிர், சில நிமிடங்கள் கழித்து அதிர்ச்சியுடன் உள்ளே வந்தான். அவன் கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. அதை மற்ற மூவரும் பார்க்கும்படி தரையில் விரித்தான்.

முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் அந்தத் தலைப்பு மின்னியது.‘சந்தனக் கடத்தல் தங்கப்பனை பிடித்தே தீருவோம் - முன்னாள் காவல்துறை அதிகாரியான வால்டர் ஏகாம்பரம் சூளுரை’ இரு சார்வாகனர்களின் கண்களும் சந்தித்தன. கணங்கள் கரைந்ததும் மீண்டும் தரைக்குச் சென்றன. அங்கிருந்த தாலியை பார்த்தார்கள். அது காந்தாரிக்கு சொந்தமானது என்பது அவர்களுக்கு புரிந்தது. ஆனால் -அதை இருவருமே கையில் எடுக்கவில்லை. அது போலவே எரிந்துக் கொண்டிருந்த சிதையின் பக்கமும் திரும்பவில்லை. அவர்களது முகங்கள் முன்பு போலவே உணர்ச்சியற்று காட்சியளித்தன.

‘‘நீங்கள் சொல்வதில் பிழையிருக்கிறது...’’ தனக்கு நேராக அமர்ந்திருந்தவரை பார்த்தபடி சார்வாகனர் மவுனத்தை கலைத்தார்.‘‘அது என்னவென்று சுட்டிக் காட்ட முடியுமா?’’‘‘சகுனி அழிக்க நினைப்பது பீஷ்மரின் வம்சத்தை அல்ல...’’‘‘பிறகு?’’‘‘குரு வம்சத்தை. அதன் வேர்க்கால்கள் எக்காலத்திலும் துளிர்விடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் கவனமாக தாயத்தை உருட்டுகிறார்...’’

‘‘தன் தந்தையின் தொடை எலும்பிலிருந்து தயாரான தாயத்தைத்தானே?’’ ‘‘ஆமாம். எந்த மகனுமே அனுபவிக்கக் கூடாத துன்பம் அது. ஒரு கவளம் உணவுக்காக சண்டையிடும் தன் சந்ததியினரைப் பார்க்கப் பார்க்க சுபாலனின் உள்ளம் தகதகவென கொழுந்து விட்டு எரிந்தது. இதைத் தடுக்க நினைத்தார். அதே நேரம் பீஷ்மரையும் பழிவாங்க முடிவு செய்தார். எனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைவரையும் அழைத்தார்...’’

‘‘ம்...’’‘‘ ‘எது நடக்க வேண்டும் என்று பீஷ்மர் நினைத்தாரோ, அது இம்மி பிசகாமல் அப்படியே நடக்கிறது. உணவுக்காக நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் நாம் அனைவருமே இறந்துவிடுவோம். அத்துடன் நமக்கு இழைக்கப்பட்ட அநீதியும் மறைந்து விடும். நாம் ஒரு தவறும் செய்யவில்லை. ஜோதிடம் என்ன சொன்னதோ, அதைத்தான் சாஸ்திர சம்பிரதாயப்படி செய்தோம்.

 உலக வழக்கை நாம் மீறவில்லை. ஆனாலும் அதை பீஷ்மர் குற்றமாக நினைக்கிறார். நம்மை தண்டிக்கிறார். இந்த அதிகாரம் அவருக்கு எப்படி வந்தது? சர்வ வல்லமை பொருந்திய குலமாக குரு வம்சம் இருப்பதால்தானே? அதை நாம் அழிப்போம். அப்போதுதான் வல்லான் வகுத்ததே சட்டம் என்ற நடைமுறை மாறும். மறையும். எப்படியும் நாம் அனைவரும் இறக்கத்தான் போகிறோம். பீஷ்மர் அதற்கான ஏற்பாட்டைத்தான் செய்திருக்கிறார்.

இதிலிருந்து நாம் தப்ப முடியாது. ஆனால், அவர் விருப்பப்படி நம் இறுதிக் காலம் அமையக் கூடாது. பதிலாக நம் எண்ணப்படி அது அமைய வேண்டும். அதற்காக திட்டமொன்றை வகுத்திருக்கிறேன். இதற்கு நீங்கள் அனைவரும் சம்மதிக்க வேண்டும்’ என்று நிறுத்திய சுபாலன் அடுத்த கணம் தன் கடைசி மைந்தனான சகுனியை அருகில் அழைத்தார்...
‘‘ம்...’’

‘‘அவனது வலது காலை உடைத்தார். அப்போது சகுனிக்கு வயது ஏழு. பாலகன். வலி பொறுக்க முடியாமல் அந்த சிறுவன் அலறிய அலறல் இப்போதும் என் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது...’’‘‘என்ன சொல்கிறீர்கள் சார்வாகனரே... இந்தச் சம்பவம் நடந்தபோது நீங்கள் அங்கிருந்தீர்களா?’’‘‘ஆமா. சுபாலனின் குடும்பத்தினர் அடைத்து வைக்கப்பட்ட சிறையின் தலைமைக் காவலனாக அப்போது நானிருந்தேன்...’’என்று இவர் சொல்லி முடிக்கவும் முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆடாக மாறியிருந்த சிதையின் தீ நாக்குகள் வானத்தை நோக்கி உயரவும் சரியாக இருந்தது.

அஸ்தினாபுரத்திலிருந்த மற்றவர்களின் கண்களுக்கு அந்த ஜுவாலையின் உருவம் தெரிந்ததோ இல்லையோ -அரண்மனை உப்பரிகையில் கடந்த காலத்தை அசை போட்டபடி நின்றிருந்த சகுனியின் பார்வைக்கு அது தெளிவாகத் தெரிந்தது.உள்ளத்தில் அனல் வீசியது. நரம்பு புடைக்க தன் உள்ளங்கையை இறுக மூடியவர் சில கணங்களுக்குப் பின் அதைத் திறந்தார். தாயம் குருதியில் நனைந்திருந்தது.

அதே நேரம், மயானத்தில் அமர்ந்திருந்த இரு சார்வாகனர்களும் தரையைப் பார்த்தார்கள். சில நாழிகைக்கு முன் அங்கு விழுந்திருந்த காந்தாரியின் தாலி இப்போது அங்கில்லை.
‘‘வாவ்... இதுதான் அந்த வாட்டர் ஃபால்ஸா? சூப்பரா இருக்கு...’’

மகேஷ் வாயைப் பிளந்தபடியே தரையில் இறங்கினான். ‘‘தர்ட்டி செகண்ட்ஸ்ல நாம வந்துட்டோம். இன்னும் நாலரை நிமிஷம்தான் இருக்கு. அதுக்குள்ள வேலையை முடிக்கணும்...’’ என்றவன் தன் தோளில் அமர்ந்திருந்த ஸ்பைடர் மேனையும் ஹாரி பார்ட்டரையும் இறக்கினான். தன் விரலிலிருந்து மோதிரத்தை கழற்றினான். அவர்கள் இருவரைச் சுற்றிலும் வட்டமிட்டான்.

‘‘இந்த இடத்தைவிட்டு நீங்க அசையக் கூடாது...’’
‘‘இன்னமும் எங்களை நீ
நம்பலையா மகேஷ்?’’

‘‘அப்படி நான் எப்ப சொன்னேன் ஸ்பைடர் மேன்?’’
‘‘அப்புறம் ஏன் இந்த சர்க்கிள்?’’ ஹாரி பார்ட்டர் படபடத்தான்.

‘‘இங்க பாருங்க. இந்த அருவில பறக்கும் நாகம் இருக்காம். நீங்க ரெண்டு பேரும் வெஸ்டர்ன் கன்ட்ரீஸை சேர்ந்தவங்க. பாம்பு பத்தி எல்லாம் உங்களுக்குத் தெரியாது. அது ஈஸ்டர்ன் கல்ச்சர். தவிர, அலாவுதீனுக்கு சாப விமோசனம் கொடுக்கறதா வாக்கு கொடுத்தவன் நான்தான். அதனால இந்த அபாயத்தை நான்தான் சமாளிக்கணும். உங்களை இதுல மாட்டிவிட நான் விரும்பலை...’’‘‘இப்படி பிரிச்சுப் பேசாத மகேஷ்... உனக்கு ஹெல்ப் பண்ணணும்னு நாங்க விரும்பறோம்...’’

‘‘யெஸ். ஹாரி பார்ட்டர் சொன்னதை நான் ஆமோதிக்கறேன். பாம்புன்னா உனக்கும்தானே பயம்?’’‘‘ஆமா. உள்ளூர படபடப்பாத்தான் இருக்கு ஸ்பைடர் மேன். அதுக்காக உங்களை எப்படி நான் இதுல இழுத்துவிட முடியும்? வேண்டாம். அது தப்பு. ஹாலிவுட் லெவல்ல நீங்க ரெண்டு பேரும் ஜாம் ஜாம்னு இருக்கீங்க. அப்படியே சந்தோஷமா இருங்க. இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன். நீங்க ரெண்டு பேரும் பாதுகாப்பா இங்கயே இருங்க...’’

சொன்ன மகேஷ் அருவி பக்கம் திரும்பினான். நூறடி தொலைவில் அந்த வாட்டர் ஃபால்ஸ் இருந்தது. அதை நோக்கி நடந்தான். இருவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘‘பாவமா இருக்கு ஹாரி பார்ட்டர். பேசாம உண்மையை சொல்லிடலாமா..?’’
‘‘என்னன்னு?’’

‘‘நீ தேடி வந்த வாட்டர் ஃபால்ஸ் இது இல்லைனு...’’‘‘அவ்வளவுதான். சூனியக்கார பாட்டி நம்ம ரெண்டு பேரையும் எரிச்சு சாம்பலாக்கிடுவாங்க. பரவாயில்லையா?’’‘‘ஏய்... என்ன இப்படி பயமுறுத்தறே?’’

‘‘உண்மை எப்பவும் அப்படித்தான் அச்சுறுத்தும். கீப் கொய்ட்...’’‘‘ஆனாலும்...’’ ‘‘ஷட் யுவர் மவுத் ஸ்பைடர் மேன். என்ன நடக்குதுன்னு நாம வேடிக்கை மட்டும் பார்ப்போம்...’’
சொன்ன ஹாரி பார்ட்டர் அருவிப் பக்கம் திரும்பினான். அதிர்ந்து போனான்.எதற்காக அவன் முகம் இப்படி பேயறைந்தது போல் மாறுகிறது என்று அறிய ஸ்பைடர் மேனும் அந்தப் பக்கம் திரும்பினான். திகைத்தான். காரணம், ஐந்து தலை நாகத்தின் மேல் நின்றபடி மகேஷ் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான்.

அதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ‘காவியத் தலைவன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘வாங்க மக்கா வாங்க...’ பாடலுக்கு! மூன்று அரசர்களும் சென்ற ரதம் மறையும் வரை இளமாறனும் யவன ராணியும் அசையாமல் அங்கேயே நின்றார்கள். அதன் பின்னர் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். இளமாறனின் கரம் உயர்ந்தது. ராணியின் தலைப்பாகையை சரி செய்தது. கண்களால் உரையாடியவர்கள் ஒரே நேரத்தில் திரும்பினார்கள். சிறைக்குள் வந்தார்கள். வேல்களைத் தாங்கியபடி தங்கள் இடத்தில் பழையபடி நின்றார்கள்.

அரை நாழிகை சென்றதும் சிறைக்கு வெளியே அரவம் எழுந்தது.‘‘வாருங்கள் உணவருந்தலாம்...’’ என்றபடியே காவலர் தலைவன் வந்தான். அதனை தொடர்ந்து ஒவ்வொருவராக உணவுக் கூடம் நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.இளமாறனும் யவன ராணியும் மட்டும் தங்கள் இடத்தை விட்டு அசையவில்லை. ‘‘உங்களை வேறு தனியாக அழைக்க வேண்டுமா?’’ சலிப்புடன் கேட்டான் காவலர் தலைவன்.

‘‘இல்லை. மற்றவர்கள் வந்த பிறகு நாங்கள் செல்கிறோம்...’’‘‘நல்லது...’’ என்றபடி விடைபெற்ற காவலர் தலைவன், விநாடிக்கும் குறைவான பொழுதில் இளமாறனின் கண்களை சந்தித்தான். ‘‘வீரர்கள் உணவருந்தி விட்டு வர எப்படியும் ஒரு நாழிகை ஆகும்...’’புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக இளமாறன் இமைகளை மூடித் திறந்தான்.காவலர்கள் அனைவரும் சென்ற பிறகு ராணியை அழைத்துக் கொண்டு சிறைச்சாலையின் மூன்றாவது கொட்டடிக்கு விரைந்தான். ‘‘இந்த இடம்தானே?’’

‘‘சந்தேகமே வேண்டாம். இதே இடம்தான்...’’ பதிலளித்த ராணி, தன் இடுப்பிலிருந்து ஒரு பொருளை எடுத்தாள். அது, ஆட்டின் கொம்பு. முழங்கை அளவுக்கு அது இருந்தது.

‘‘பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஒரு அளவே
இல்லையா..?’’‘‘என்ன ஆச்சு தலைவரே?’’
‘‘காணாம போன மலேசிய விமானத்தைத் தேடிக்கிட்டு என் வீட்டுக்கு சி.பி.ஐ. வந்திருக்கே!’’

‘‘நான் தினமும் நான்கு லிட்டர் தண்ணீர்
குடிக்கிறேன்...’’‘‘உப்பைத் தின்னவன் அப்படி செஞ்சுதான் ஆகணும் தலைவரே!’’

‘‘நான் ஒருத்தனே தனியா உட்கார்ந்து இருக்கேன் சிஸ்டர்!’’
‘‘அதனாலதான் இதை தனியார் மருத்துவமனைன்னு சொல்றாங்களா டாக்டர்?’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

(தொடரும்)

கே.என்.சிவராமன்