தத்துவம் மச்சி தத்துவம்



எங்கேயாவது தீப் பிடிச்சிட்டா தீயை அணைச்சு பிரச்னையைத் தீர்க்கலாம். ஆனால் யாருக்காவது பேய் பிடிச்சிட்டா பேயை அணைச்சு பிரச்னையைத் தீர்க்க முடியுமா?
- கறிவேப்பிலையை வைத்து பேயை ஓட்ட முயற்சிப்போர் சங்கம்
-ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.

‘‘மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க..?’’
‘‘தூக்கத்துல எதிர்க்கட்சி மகளிரணித் தலைவி பேரைச் சொல்லி நீங்க முணகினதுக்காம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘பொண்ணு என்ன படிச்சிருக்கு..?’’
‘‘இந்த வாரம் வந்த எல்லா புத்தகங்களையும் படிச்சிருக்கு..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘ஒரு நாய்தானே வளர்க்கறீங்க... ஆனா ரெண்டு நாய் குரைக்கற சத்தம் வருதே, எப்படி?’’
‘‘ஒண்ணு கிராஸ் டாக்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘பேஷன்ட்டை பார்த்த உடனே டாக்டர் சொல்லிடுவார்...’’
‘‘எதை... நோயையா?’’
‘‘இல்ல, பேஷன்ட் ட்ரீட்மென்ட்டுக்கு வந்திருக்காரா... நர்ஸை ஜொள்ளுவிட வந்திருக்காரான்னுதான்..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘ஏதாவது சொல்ல விரும்புகிறாயா..?’’
‘‘பதினைந்து வருஷமா கேட்டுட்டு இருக்கீங்க. இனிமே சொல்றதுக்கு எதுவும் இல்லை எசமான்!’’
- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டிக்குக் கடன் வாங்கலாம். ஆனால் யாராலும் தீ‘வட்டி’க்கு கடன் வாங்கவும் முடியாது!
- வெட்டியாக தத்துவம் சொல்லாமல் வெரைட்டியாக தத்துவம் சொல்லுவோர்
சங்கம்
-ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.