ஜோக்ஸ்



கிளிக்கூண்டுல கிளி
இருக்கும்; புலிக்கூண்டுல புலி இருக்கும்.
ஆனால் மணிக்கூண்டுல ‘மணி’ இருக்காது.
 கடிகாரம்தான் இருக்கும்!
- காண்டா இருப்போரையும்
தத்துவம் சொல்லி போண்டா
சாப்பிட வைப்போர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம்,
ஔவையார்பாளையம்.

என்னதான் ‘மொட்டை’ போட்டுட்டு வரும் வழியில் விபத்தில் சிக்கி தப்பித்தாலும், ‘மயிரிழையில்’ உயிர் பிழைத்தார்னுதான் சொல்லுவாங்க; ‘மொட்டை இழை’யில் உயிர் பிழைத்தார்னு சொல்ல மாட்டாங்க!
- மொட்டைத் தலைக்கே முடி வெட்டியதாய் கணக்கு எழுதி, பணத்தை ‘ஆட்டையை’ போடுவோர் சங்கம்
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

தலைவருக்கு அதுக்குள்ளேயே தோல்வி பயம் வந்துடுச்சு!’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘2016 தனக்கு ராசி இல்லாத நம்பர்னு சொல்றாரே..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

நம்ம தலைவரோட மனைவி கூட்டத்திற்கு வந்திருக்காங்கன்னு எப்படிச் சொல்றே?’’
‘‘செருப்புகளோட ஒரு கரண்டியும் வந்து மேடையில விழு தே..!’’
- நா.கி.பிரசாத், கோவை.

‘‘என்னை ஏன் மச்சினின்னு
கூப்பிடறீங்க..?’’
‘‘என் மனைவி உங்களை
‘சிஸ்டர்’னு கூப்பிட்டாளே...
அதனாலதான் நர்ஸ்!’’

- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘தலைவர் திடீர்னு தேங்காய்ப்பால் கேட்கறாரே... ஏன்?’’
‘‘கட்சிக்குள்ளே ஒரே இடியாப்பச் சிக்கலாம்!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.

நம்ம தலைவரை சுத்த அல்பம்ங்கறியே... ஏன்?’’
‘‘ஒரு சைக்கிள் தந்தாக்கூட போதும்னு கட்சி தாவிடறாரே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.