facebook வலைப்பேச்சு



கயிறென்றால் அறுந்துதான் போகும். தொங்கிக் கொண்டிருப்பவர்களாக இருந்தால், நீங்கள் நீதிபதிகள்; பிடித்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தால், நீங்கள் கொலைகாரர்!
- நந்தன் ஸ்ரீதரன்

சரியாக வந்து கொண்டிருக்கும் நமக்கு நேர் எதிரில்
சடார்னு ராங் ஸைட்ல நம்மள கீழே தள்ளி விடுற மாதிரி வந்துட்டு,
‘‘பாத்து போங்க ஸார்’’னு அக்கறையாக சொல்லிட்டு போவான்...
அப்ப வரும் பாருங்க ஒரு கடுப்பு!
- ஹரிசுதன் சிவசுப்ரமணியன்

பெரிய ரப்பரால்
சிறிய தவறை
அழித்துக் கொண்டிருந்தேன்
ரப்பர் சிறிதாகிக் கொண்டே வர
தவறு பெரிதாகிக் கொண்டே போனது!
 ராஜா சந்திரசேகர்

பசிக்கவில்லையெனும்
குழந்தையின் பிடிவாதத்தின் பின்னாலிருக்கக் கூடிய உண்மையான
 காரணம் அநேக அம்மாக்களுக்குத் தெரிந்தே இருக்கும்.
- மஞ்சுபாஷினி
ஜெகதானந்தன்

10 ஆயிரத்துக்கு துணி எடுத்தாலும்,
20 ரூபா
கூட பெறாத கட்டைப் பைக்கு கடைக்காரன் கூட மல்லுக்
கட்டுற பழக்கத்தை நம்ம ஆளுங்க விட மாட்டாங்களா?
# அது நான்தாங்க!
- ப்ரியா முரளி

தியேட்டர்ல கூட்டம் இல்லாம இருக்குற
அத்தனை படமும் குழந்தைகளுக்கான படம்தான்!
- போட்டோக் கார்

வாழ்க்கையில் விரும்புவது விரும்பப்படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிறது...
- தர்ஷினி சூர்யகலா

சிறகு கோதும் குருவி சிக்குடைக்கும் பெண்ணையே நினைவுபடுத்துகிறது...
- சுந்தரி விஸ்வநாதன்

கரும்பலகையில்
வரைந்த நிலவை
அழித்து விட்டது
மழை
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

கடவுளையும்
ஆட்டி வைக்கும்
வல்லமை பெற்றவன்
குரங்காட்டி.
ஆடுறா ராமா... ஆடுறா ராமா!
- மன்னை
முத்துக்குமார்

ஆண்டவா... ஆன்லைன் ரீசார்ஜ நான் பார்த்துக்குறேன்;
ஆண்ட்ராய்ட் ஃபோன் சார்ஜ் அவுட்டாகாம மட்டும் நீ பார்த்துக்கோ!
#  எல்லா சாமியையும் நான் பிரே பண்ணுறேன்
- ஸ்ரீதேவி செல்வராஜன்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு நிழலுலக தாதாக்கள் மிரட்டல்...
# ‘அஞ்சான்’ ஹிந்தி ரீமேக்ல நடிக்கச் சொன்னாங்களாம்!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

நேற்று விஷால் திருட்டு விசிடிக்காக களத்தில் இறங்கி கண்டுபிடித்தார்; இன்று பார்த்திபன்.
ஒரு படம் ரிலீஸ் ஆனால், அந்தப் பட இயக்குனரும் நடிகரும் களத்தில் இறங்கி போராட வேண்டுமா? இது புதிய வழி
முறையா...
உங்க வீட்டில் திருட்டு நடந்தால் நீங்கள்தான் திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது புதிய தீர்ப்பா?
- வசந்த பாலன்

twitter வலைப்பேச்சு

@mrithulaM     
பாட்டில் விலை உயர்வால் பாதிக்கப்படப் போவது
வீட்டு
பட்ஜெட்தான். குடிகாரன்
எப்பவும்
போலதான்
குடிப்பான்!

@skpkaruna     
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பிரிட்டிஷ்காரன் இந்தியாவின் ஆன்மாவை
இந்த அளவிற்குப் புரிந்து கொள்ள முடியுமா என நம்மை வியந்து போக வைத்தார் அட்டன்பரோ!

@Iam_SuMu   
சில பெண்களை கடக்கும்போது இந்தப்
பொண்ணு அழகாயிருக்குதா, இல்லியா என்ற குழப்பத்துடனே கடக்க
வேண்டியதாக உள்ளது!

@manju_twits
கரப்பான் பூச்சிக்கும், பல்லிக்கும் குழந்தைகள் பயப்படாதபோது,
எதை குழந்தைத்தனம் என்கின்றனர்!?

@Yaaro_ 
 பார்க்கிற கல்லூரி எல்லாத்துலயும் 100% பிளேஸ்மென்ட்னு போர்டு இருக்கு.
அப்ப தமிழ்நாட்ல வேலை இல்லாம இருக்கவங்கெல்லாம் ஐரோப்பால படிச்சவங்களா இருக்குமோ!

@minimeens     
சிங்கத்த சினிமால பாத்திருப்ப, டிவில பாத்திருப்ப, ஜூல பாத்திருப்ப, மழைல நனைஞ்சு பாத்திருக்கியா?
# பாரு, பப்பரப்பேன்னு இருக்கு!

@thoatta 
அவனவன் மனைவிய ‘டி’ போடவே பயப்படுறான்.
ஒடிசால ஒருத்தன் மனைவி டீ போடலன்னு மனைவியவே போட்டுத் தள்ளி
யிருக்கான்!

@pitchumani   
கண்ணமங்கலம் அருகே பரபரப்பு, மாணவியின் கண்களில் மணல் கொட்டும் அதிசயம்!
# ஏய், லாரிய கண்ணமங்கலத்துக்கு
விடுங்கடா...

@Araikurai
என் வாழ்வில் வந்து போன டீச்சர்களில் தேவதைகளுக்கு சரிநிகர் ராட்சசிகளும் இருந்தார்கள் என்பதை...

@writernaayon   
எனக்கு பரம்பரைச் சித்த வைத்தியராக ஆசைதான். என்  பாட்டன், பூட்டனார்களின் புகைப்படங்களில்லையென்பது தான் தடையாக உள்ளது.

@thoatta   
டாஸ்மாக்கின் தேசிய மொழியே ஜிப்ரதிஷ் பாஷைதான்!

@thoatta   
பெரும்பாலான குடிகாரர்கள் ‘ஐஸ் பக்கெட் சேலஞ்சை’ ஒரு முறையாவது கடந்திருக்கிறார்கள்!

@senthilcp   
‘கத்தி’ படத்தில் மக்கள் பிரச்னைக்காகக் குரல் கொடுக்கும் விஜய்
# இப்ப பிரச்னையே ‘கத்தி’யால விஜய்க்குப் பிரச்னை வருமா,
வராதான்னுதான்!

@jeranjit     
எனது கல்லறை வாசகம்: அப்படி வேடிக்கை பாத்துட்டே இருந்தா எப்படி..? இடம் கிடைக்காது, சீக்கிரம் வாங்க!

@narsimp   
காலங்காலமாக உப்பு வச்சு தேய்ச்சுட்டு இருந்தான்.
‘அய்யய...’ன்னு கேலி பண்ணி பேஸ்ட்ட குடுத்து கெடுத்துட்டு, இப்ப வந்து அதுல உப்பு இருக்காங்குறானுங்க.