ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



அக்ஷய் குமாருடன் ‘ஷௌகீன்’ படத்தில் யாமி கௌதம் ஜோடியாக நடிப்பதாக இருந்தது. அக்ஷயும் யாமிக்கு சப்போர்ட் செய்தார். ஆனால் படத்தில் பிகினியில் தோன்ற வேண்டிய காட்சிகள் இருந்தன. இதற்காக யாமி கௌதமுக்கு பிகினி அணிவித்து போட்டோ எடுத்துப் பார்த்தார்கள். ஆனால் யாமி நீச்சல் உடைக்கு கூச்சப்பட்டார்; அதோடு அவருக்கு அது பொருத்தமாகவும் இல்லை. எனவே லிஸா ஹைடன் கைக்கு வாய்ப்பு போய் விட்டது.

‘பேன்டம்’ படத்தில் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் நடிக்க வேண்டும். ‘‘டூப் வைத்து எடுத்துக் கொள்ளலாம்’’ என டைரக்டர் சொன்னபோதும் சம்மதிக்கவில்லை கேத்ரினா கைஃப். ஷூட்டிங்குக்கு ஒரு மணி நேரம் முன்பாக வந்து சண்டைப் பயிற்சி செய்துவிட்டு அக்கறையோடு நடிக்கிறார்.

‘‘மாடலிங் செய்தபோது என்னை என் தெருவில் கூட பல பேருக்குத் தெரியாது. நடிகை ஆனபிறகு உலகமே மாறி விட்டது. பாலிவுட் படத்தில் நடித்தாலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் கூட கேஷுவலாக தெருவில் நடமாட முடியவில்லை. ‘ஐ... நர்கீஸ்’ என சூழ்ந்து கொள்கிறார்கள். ரஷ்யாவில்கூட இப்படி அனுபவம்’’ என சிலிர்க்கிறார் நர்கீஸ் ஃபக்ரி.

தனது பாய் ஃபிரண்ட் ஆதித்ய ராய் கபூருடன் சண்டை முடிந்து இப்போது சமாதானம் ஆகியிருக்கிறார் ஷ்ரத்தா கபூர். ‘‘கொஞ்சம் பழகினாலே யாரையும் எளிதில் நம்பி விடுவது எனது பலவீனம். இதனால்தான் சண்டை ஆனது. இப்போது கவனமாக இருக்கிறேன். கண்மூடித்தனமாக யாரையும், யார் சொல்வதையும் இனி நம்ப மாட்டேன்’’ என அனுபவ பாடம் சொல்கிறார் ஷ்ரத்தா.

நடிகை ஹெய்தி க்ளூம் தனது நான்கு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டே கிச்சனுக்குப் போகிறார். பாத்திரம் கழுவுவது, காய்கறி நறுக்குவது, மசாலா சேர்ப்பது என எல்லாம் செய்கிறார்கள் குழந்தைகள். ‘‘எனக்கு சமைக்கத் தெரியாது என சொல்வது யூத்களிடம் இப்போது ஃபேஷனாகி வருகிறது. என் குழந்தைகள் அப்படி இருக்கக் கூடாது’’ என்கிறார் ஹெய்தி.