தத்துவம் மச்சி தத்துவம்



எமனோட பாசக்கயித்துல பம்பரம் விட முடியுமா? சித்திர
குப்தனோட கணக்கு நோட்ல அல்ஜீப்ராவுக்கு ஆன்ஸர் கிடைக்குமா?
- ஆபரேஷன் தியேட்டரில் அட்மிட் ஆனதுமே ஆவிக்குரிய கனவுகளை வெளியிடுவோர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

‘‘நான் உங்க காதலுக்கு ஓகே சொல்லியும் யூஸ் இல்லே...’’
‘‘ஏன் நர்ஸ்?’’
‘‘நீங்க டாக்டர்கிட்ட ஆபரேஷனுக்கு ஓகே சொல்லியிருக்கீங்களே!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘மகளிரணித் தலைவி மேல தலைவருக்கு என்ன கோபம்..?’’
‘‘அடிக்கடி மேக்கப் இல்லாம கட்சி ஆபீஸுக்கு வந்து பயம் காட்டறாங்களாம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘இட்டுக்கட்டி எழுதுவதில் இப்புலவருக்கு ஈடு இணையே இல்லை மன்னா..!’’
‘‘எப்படி கூறுகிறீர் அமைச்சரே..?’’
‘‘தங்களையே புகழ்ந்து ஆயிரம் பாடல்கள் எழுதி விட்டாரே மன்னா!’’
- நா.கி.பிரசாத்,கோவை.

‘‘திஹார் ஜெயிலில் சாப்பிட்ட
வனுக்குத்தான் தெரியும், நான் ஏன் முன் ஜாமீன் வாங்க மறுத்தேன் என்பது...’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘உங்களுக்கு ஃபீவர் 100.1 இருக்கு...’’
‘‘நல்லா டியூன் பண்ணி பாருங்க சிஸ்டர்...’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘உங்க கணவருக்கு காலண்டர் கிழிக்கிற பழக்கம் இருக்குன்னா, அது நல்ல விஷயம்தானே! அதை ஏன் நோய்னு சொல்றீங்க?’’
‘‘அவர் பக்கத்து வீட்டு காலண்டர்களையும் தினம் தினம் வீடு வீடா போய் கிழிக்கிறார் டாக்டர்...’’
- எம்.எம்.தேவதாசன், சொக்கம்பட்டி.