facebook வலைப்பேச்சு




பாதி ராத்திரி இருட்டுல வெளிய போக பயந்த யாரோதான் அட்டாச்டு பாத்ரூம் கண்டுபிடிச்சிருக்கணும்...
- அரட்டை கேர்ள்

உடனடியாக நடக்கவில்லை என்பதற்காக எப்போதுமே நடக்காமல் போய் விடாது.
- ராமலக்ஷ்மி ராஜன்

திரும்பிப் பார்க்கிறது
சில நேரத்தில அவசியம் மாதிரி, திரும்பிப் பார்க்காம போயிட்டே இருக்கறதும் சில நேரத்தில ரொம்ப அவசியம்.
- தீபா நாகராணி

‘‘பையனுக்கு சமைக்கத் தெரியுமா’’ன்னு பொண்ணு வீட்டுக்காரங்க கேக்கற காலம் வெகு தொலைவில் இல்லை...
- அம்புஜா சிமி

ஒழுங்குகளின் கூச்சல்கள் நெட்டித் தள்ளுகிறது வாழ்க்கையை பூமி புலப்படாஒரு பெரும்பள்ளத்தை நோக்கி
- இளமதி

எதிர்ப்பின்  மனம், மொழி, நிறம், கருப்பு!- குமரகுருபரன்
ஜெயராமன்

நேரத்தை சேமிக்க வந்ததாக நினைக்கும் கைபேசியும், இணையமும்தான் இன்று அதிக நேரத்தைத் தின்கின்றன!
- சக்தி வேல்

முதல் தலைமுறை பட்டதாரியாகப் படித்து, வேலையில் சேர்ந்து, தங்கையின் திருமணத்தை நடத்தி, அப்பனின் கடனை அடைத்தவனை விட, எவன் இங்கே சாதித்தவன்?
- நிஜாமுதின்

ஜெனரேஷன் கேப் என்பது, நாம கடைக்குப் போக 1 ரூபாய் லஞ்சமா கேட்டோம், இப்ப இருக்குற குழந்தைங்க 10 ரூபாய் கேக்கறாங்க...
- மிஸ்டர் வாண்டு

அத்வானி இன்றைக்கு நிம்மதியாகத் தூங்குவார்!
# இடைத்தேர்தல் முடிவுகள்
- மனுஷ்ய புத்திரன்

5.30 மணிக்கு இட்லி சாப்பிட்டு விட்டு 6 மணிக்கு எக்சர்ஸைஸ் செய்த அர்னால்டு!
# சாப்பிட்ட கையோட எக்சர்ஸைஸ் பண்ணக் கூடாதுன்னு அவரு வூட்டு பெரியவங்க சொல்லிக் கொடுக்கலையா?
- மாயவரத்தான்
கி ரமேஷ்குமார்

கட்சி ஆளுங்க பழக்கதோஷத்துல அர்னால்டு கைலயும் 200 ரூபாய் கொடுத்து மறக்காம ஓட்டு போட்ருன்னு சொன்னாங்களாம்...
# அவரு வேற தொகுதி பாஸ்!
- பூபதி முருகேஷ்

மேடம் ஆட்சி யில் கல்வி, தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: அர்னால்ட்
# நீ பேசு ராசா. அப்புறம் அடுத்த டப்பிங் படம் இங்க ரிலீஸ் ஆகாம போய்டும்!
- போட்டோக் கார்

காதலிகளுக்கு
மாமியார்கள் இருப்பதில்லை
காதலன்களுக்கு
மாதாந்திர பில்களிருப்பதில்லை
சொர்க்கமாயிருக்கிறது
காதலிக்கையில்...
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

twitter வலைப்பேச்சு

@mrithulaM   
‘ஏற்கனவே ஆசிட் ஊத்தின மாதிரிதானே இருக்கு’ன்னு
தான் பெண்கள் ஆண்கள் மேல ஆசிட் ஊத்துற தில்லையோ :)

@Tottodaing
சைக்கிளையும், ரீ சைக்கிளையும் கட்டாயப்படுத்தினாலே உலகம் பிழைத்துக் கொள்ளும்!

@g_for_Guru
எங்கேயோ வர்ற ஃப்ரண்டுக்கு லிஃப்ட்டை புடிச்சு வைக்கறானுங்க, என்னமோ இதான் சொர்க்கத்துக்குப் போற கடைசி வண்டி மாதிரி :(

@k_for_krish 
பெரியார் பெண்களுக்காக சொன்ன அத்தனையையும் பெண்கள் ஏற்றுக்கொண்டார்கள். கடவுள் மறுப்பையும், பெரியாரையும் தவிர :)

@iKappal   
காலத்தின் சாட்டை
யடிகளில் உள்ள நன்மை என்னவெனில், சுவடுகள் வெளியே தெரியாது..!

@urs_ priya 
இறுதிவரை யாருமே நம்மை துரோகத்தால் நினைவு
கூராத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டும்!

@ThePayon 
மழையைப் பாடுபொருளாக்கி அழகு பார்த்த சங்கப் புலவர்கள், அது கொண்டு வரும் கொசுக்களைப் பற்றியும் ஏதாவது பாடியிருக்கிறார்களா?

@laksh_kgm   
ஒபாமாவை எளிதாக விமர்சித்து விடுகிறேன். ஆனா, வார்டு கவுன்சிலரைப் பத்திப் பேசத்தான் பயமா இருக்கு...

@Lorrykaran
இசையமைப்பாளர் யார் எனத் தெரிந்தபின் பாடலை ரசிக்கிறீர்களா? ஆமெனில் நீங்கள் ரசிப்பது இசையை அல்ல!

@kanapraba 
‘எங்கள் தாய்மொழி தமிழை மற்றவன் அழிக்கக் கூடாது; அதை நாமே ஆள் வச்சு செய்வோம்’ என்ற நிலையில் இருக்கிறது உலகம்!

@thoatta 
அனுமாருக்கு ஆதார் கார்டு கொடுத்திருக்காங்களாம்... போங்கப்பா, நமக்கு கொடுத்த ஆதார் கார்டுலயும் நாம அனுமார் மாதிரிதான் இருக்கோம்!

@raajaacs 
இருள் வனத்தில் என்ன எழுதுகிறது மின்மினிப்பூச்சி?

@kasaayam   
தான் பிடித்த முயலுக்கு மூணு கால்கள்னு சொன்னா சொல்லிட்டுப் போறாங்க, லெக் பீஸ் ஒண்ணு கம்மியா சாப்பிடட்டுமே...

@jeganjeeva   
கோபம் மண்வெட்டி மாதிரி அடுத்தவங்க மனசை சீராக்க, களை பிடுங்க உதவணும். கோடாரி மாதிரி எப்பவும் அடுத்தவங்கள காயப்படுத்தக் கூடாது.

@Sakthivel_twitt 
பறவையை கூண்டு வாங்கி அடைக்காதீங்க, அதுங்க நல்லாவே கூடு கட்டும். அந்தக் காசுல ஒரு மரம் நடுங்க, அதுகளுக்கும் சேர்த்து பயன்படும் :)