தகதக தீபாவளி ரிலீஸ்!



ஷாப்பிங் ஸ்பெஷல்

தீபாவளி ஷாப்பிங் ஆச்சே... சிட்டியில் ஒரு கடை விடாமல், ஒவ்வொரு கடையிலும் ஒரு ரேக் விடாமல், அத்தனையும் அள்ளிப் போட்டு, அதில் ஒன்றை டிக் பண்ணுவதுதான் நம் பெண்களின் ஷாப்பிங் ரூல்ஸ்!

ஆனால், இந்த பண்டிகை பரபரப்பில் இதெல்லாம் சாத்தியமா?
டோன்ட் வொர் ரி! நீங்க வீட்டிலிருந்தே விண்டோ ஷாப்பிங் பண்ணிட்டு, ஒரு முடிவோட கடைக்குப் போகலாம். தமிழகத்தின் முக்கியமான சில கடைகளின் தீபாவளி ஸ்பெஷல் வரவுகள் இங்கே...

என்.ஏ.சி ஜுவல்லரி

வாசலிலேயே ‘வாவ்!’ சொல்ல வைக்கின்றன மயிலாப்பூர் என்.ஏ.சி. ஜுவல்லரியின் தீபாவளி புதுசுகள். நெக்லஸ், செயின், வளையல், கம்மல், மோதிரம் என இந்த சீஸனுக்கு மொத்தமாக 50 ஆயிரம் வெரைட்டிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இரண்டு சவரன் நகைகளே 5 சவரன் அயிட்டம் போல ‘பார்வையாக’ செய்யப்பட்டிருக்கின்றன. ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 45 ஆயிரம் ரூபாய் வரையில் ஜொலிக்கும் அனைத்து மாடல்களும் ‘நச்’ ரகங்கள்!

தி சென்னை சில்க்ஸ்

இந்த முறை தி சென்னை சில்க்ஸ், பட்டுப் புடவைகளில் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறது. ‘விவாஹா ஜமுல் பெட் பிளவர்ஸ்’, ‘மல்டி முப்பாக விவாஹா பட்டு’ எனக் கலக்கும் இவை, ரூ.24,995 மற்றும் ரூ.34,995 என்ற விலையில் துவங்குகின்றன. ஒரே புடவையில் அத்தனை வண்ணங்கள் அழகாக இணைந்திருப்பது இந்த புடவைகளின் சிறப்பு.

 இதோடு, ‘காக்ரீலாங் நெட்டடு சல்வார்’, ‘காட்டன் சல்வார்’ போன்றவை மெருகூட்டுகின்றன. காக்ரீலாங் 2,495 ரூபாயிலிருந்து ரூ.50 ஆயிரம் வரையும், காட்டன் 695 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் வரையும் கிடைக்கின்றன. ஆண்களுக்கான இந்தோ வெஸ்டர்ன் ஸ்டைல் உடைகள் விதவிதமான கலர்களில் கண்ணைப் பறிக்கின்றன. ஸ்பெஷல் வேஷ்டிகள், குழந்தைகளுக்கான உடைகள் என எல்லா வகையினருக்கும் ஆடைகள் பளிச்சிடுகின்றன, தி சென்னை சில்க்ஸில்!

போத்தீஸ்

போத்தீஸின் பாப்புலரான ‘வசுந்தரா’ பட்டுப் புடவைகளில் இப்போது புதுவரவு, ‘வசுந்தரா ஸாட்டின்’. பாரம்பரிய டிசைன்களை கண்கவர் வண்ணங்களில் தரலாம் என்பது இதன் ஸ்பெஷல். வழுக்கும் மிருது, அழகு அற்புத ஃபினிஷ்... இவை ஸாட்டினின் சிறப்புகள். விலை ரூ.6155 முதல். கூடவே, ‘நீத்தா’, ‘டீனா’, ‘ஜெஸ்ஸி’, ‘லீலா’ என வகை வகையான புடவைகள் கண்களைப் பறிக்கின்றன. வெல்வெட் மற்றும் நெட் மெட்டீரியல்களில் நேர்த்தியான ஸ்டோன் வேலைப்பாடுகளோடு உருவாக்கியிருக்கும், ‘நக்ஷத்ரா’ சுடிதார்களும், காட்டன் மற்றும் சிந்தெட்டிக் மெட்டீரியல்களில் வடிவமைக்கப்பட்ட ‘மர்தானி’ சுடிதார்களும் டீன் ஏஜ் பெண்களை கொள்ளை கொள்ளும் அழகு!

ரதி சில்க்ஸ்

வானவில் வண்ணங்களைக் குழைத்து விதவித பட்டுப் பாவாடைகளையும், தாவணிகளையும் அசத்தலாய் அடுக்கியிருக்கிறது சேலம் ‘ரதி சில்க்ஸ்’. கல் வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுவதால், குழந்தைகளையும் இளம்பெண்களையும் கட்டிப் போடுகின்றன இந்தப் புதுவரவுகள். குழந்தைகளுக்கு சாரி அணிவித்த பொலிவைக் கொடுக்கும் ‘நெட்டட் சாரீ டிரஸ்’, ‘பிக் புட்டா காய்ன்’, ‘ராயல் 3சி’ என ஒவ்வொரு புதுவரவும் ‘பளிச் லுக்’ தருகின்றன. இவற் றின் விலை ரூ.650 டூ ரூ.1450 வரைதான்!

சுந்தரி சில்க்ஸ்

‘மத்தாப்பு கலெக்ஷன்’தான் சுந்தரி சில்க்ஸில் செமயாய் பின்னியெடுக்கும் புது வரவு. திருவிழாவிற்கென்றே வடிவமைக்கப்பட்ட ரிச் லுக் பட்டுகள் இவற்றில் ஹைலைட். இதன் விலை ரூ.6 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது. இதில், ‘கிளி’ டிசைன் கலெக்ஷன்ஸ், வெகுவாய்க் கவர்கின்றன. இதன் விலை ரூ.8 ஆயிரம் முதல் தொடங்குகிறது. இன்னும், பனாரஸ், கோட்டா, ஜெய்ப்பூர் காட்டன் என பலவித சேலைகளின் கலர்ஃபுல் அணிவகுப்பு, பளிச்!

முஸ்தபா கோல்டு மார்ட்

கொல்கத்தா டிசைன், மும்பை டிசைன் என விதவிதமான கலெக்ஷன்கள் நிறைந்திருக்கின்றன ‘முஸ்தபா கோல்டு மார்ட்’டின் இந்த வருட தீபாவளி புது வரவில்! நெக்லஸ், வளையல்கள் அனைத்தும் பிரத்யேக வடிவமைப்பில், ஜொலிஜொலிக்கின்றன. குறிப்பாக, எட்டு, பத்து கிராம்களில் வந்திருக்கும் ‘லைட் வெயிட்’ கலெக்ஷன்கள் கழுத்தை நிறைக்கின்றன.

 ‘குந்தன்’ கற்கள் வைத்த நெக்லஸ் அணிந்து பார்த்தால், அப்படியே வைர நெக்லஸ் ஃபீலிங்! நெக்லஸ்கள் அனைத்தும் 30 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. லைட் வெயிட் கலெக்ஷன்கள் துவங்குவது 25 ஆயிரம் ரூபாயிலிருந்து!

தொகுப்பு: பேராச்சி கண்ணன்