ஜோக்ஸ்



‘‘அங்கே என்ன கூட்டம்..?’’
‘‘புது ரக பட்டாசோட ஆடியோ ரிலீஸ் பண்றாங் களாம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘தீபாவளி நேரத்துல திருடப் போய் இப்படி அநியாயமா மாட்டிக்
கிட்டியே கபாலி...’’
‘‘தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்குப் போகணும்னு நான்தான் ஆசைப்
பட்டேன் ஏட்டய்யா!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘தீபாவளிக்கு பட்டாசு டிசைன்ல புடவை எடுத்தது தப்பாப் போச்சுங்கறியே... ஏன்?’’
‘‘எதிர்வீட்டுக்காரி தீப்பெட்டியும் கையுமா என் பின்னாலேயே சுத்திக்கிட்டிருக்கா..!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘தீபாவளி அன்னைக்கு குழந்தைக்கு பேர் வைக்கச் சொல்லி தலைவர்கிட்ட குடுத்தது தப்புங்கறியே... ஏன்?’’
‘‘ஏதோ ஞாபகத்துல ‘தவுசண்ட் வாலா’ன்னு பேர் வச்சுட்டாருய்யா!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘என்னய்யா இது... குற்றப்
பத்திரிகையில நான் செய்யாத குற்றங்களையெல்லாம் நிறைய சேர்த்திருக்காங்க?’’
‘‘இந்த முறை குற்றப் பத்திரிகை கூடுதல் பக்கங்களோட தீபாவளி சிறப்பு மலரா வரணும்னுதான் தலைவரே!’’
- ம.விருதுராஜா, திருக்கோவிலூர்.

‘‘பேரனோட ராக்கெட்டை வாங்கி தலைவர் திருப்பித் திருப்பி என்ன பார்க்கறார்..?’’
‘‘ராக்கெட்டுல எஞ்சின் எந்தப் பகுதியில இருக்குதுன்னு தேடறார்!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

என்னதான் தீபாவளி துப்பாக்கியில ரோல் போட்டு சுடலாம்னாலும், ‘நெகட்டிவ் ரோல்’ எல்லாம் போட்டு சுட முடியாது!
- சினிமாவோ, சீரியலோ, நெகட்டிவ் ரோல் மட்டுமே செய்வோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.