சகுனியின் தாயம்



‘‘சோழ மன்னர் பெருநற்கிள்ளி ஏன் இன்னும் வரவில்லை?’’- கேட்ட சீன சக்கரவர்த்தி, யவன ராணி உருவத்தில் இருந்த பணிப்பெண்ணை உற்றுப் பார்த்தார். அவரது புருவங்கள் சுருங்கி விரிந்தன. சில கணங்களுக்குப் பின் தன் ஆசனத்தை விட்டு எழுந்தார். ‘‘நீ வருவதை யாரேனும் பார்த்தார்களா?’’‘‘இல்லை அரசே. தேடப்படும் நபரின் தோற்றத்தில் நான் இருப்பதால் என்னை மறைவாகவே இங்கு செல்லும்படி பணித்தார்...’’

‘‘ம்...’’ என்று கனைத்தபடி மேற்கொண்டு பேச முற்பட்ட சீன சக்கரவர்த்தி, சட்டென்று அமைதியானார். செவிகளைக் கூர்மையாக்கியபடி சாளரத்தை ஏறிட்டார். காரணம் புரியாத பணிப்பெண்ணும் அதே திசைக்கு தன் பார்வையைத் திருப்பினாள்.நீல வானத்தைத் தாண்டி வேறெதுவும் தெரியவில்லை. சீன சக்கரவர்த்தியும் தன் கண்களை அந்த இடத்தை விட்டு விலக்கவில்லை.சிறகடிக்கும் ஓசை எங்கோ தொலைவில் கேட்டது. இருவரும் பரபரப்பானார்கள். மெல்ல மெல்ல சாளரத்தில் படிந்த நிழல், பிறகு தன் உருவத்தை அடைந்தது.வெண் புறா.

பழக்கப்பட்ட இடம் போல் வெகு சுவாதீனமாக உள்ளே நுழைந்த புறா, மூன்று முறை வட்டமடித்து விட்டு சீன சக்கரவர்த்தியின் தோளில் அமர்ந்தது.அதை லாவகமாக தன் இடது கை ஆள்காட்டி விரலுக்கு இடம்பெயர்த்தவர், அதன் கழுத்தை வாஞ்சையுடன் தடவினார். ஐந்து முறை சிறகுகளை படபடவென அடித்த அந்தப் புறா, பிறகு சிறகை விரித்தது.

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்த சீன சக்கரவர்த்தி, தன் வலது கையை சிறகுக்குள் நுழைத்தார். விரல் நுனி அந்தப் பகுதியை ஆராய்ந்தது. முன்னும் பின்னுமாக நகர்ந்தது. ஓரிடத்தில் நின்றது. நகத்தினால் புறாவுக்கு வலிக்காதபடி அந்த இடத்தை துருவினார்.வெண் முத்து வெளியில் வந்தது.

அந்த முத்து சீன சக்கரவர்த்தியின் உள்ளங்கைக்கு வந்த அடுத்த கணம், அவர் விரலை விட்டு புறா விலகியது. வந்த வழியே வெளியேறியது.‘‘இந்த முத்து எதை உணர்த்துகிறது அரசே..?’’கேட்ட பணிப்பெண்ணை பார்த்து சீன சக்கரவர்த்தி புன்னகைத்தார். ‘‘எங்கிருந்து வந்தது என்று கேட்காமல் இருந்ததற்காக உன்னை பாராட்டுகிறேன்...’’

என்று சொல்லிவிட்டு -
‘‘நீ நினைப்பது போல் இது முத்து அல்ல...’’ என்று சொல்ல முயன்றார். ஆனால் -அதே வாக்கியத்தை வேறொருவர் உச்சரித்ததால் அதிர்ந்தார். சொன்னவர் யாரென்று அறிய சீன சக்கரவர்த்தியும் பணிப்பெண்ணும் ஒருசேர திரும்பினார்கள்.

திடுக்கிட்டார்கள்.காரணம், அங்கு இளமாறனும், யவன ராணியும் நின்று கொண்டிருந்தார்கள்.அதன் பிறகு அங்கு நடந்தது ரணகளம்.சீன சாத்தை சோழ மன்னர் பெருநற்கிள்ளி அடைந்தபோது இதன் முடிவைத்தான் கண்டார். சீன - சோழ வீரர்கள் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டிருந்தனர்.

‘‘இது சூப்பர் திட்டம். கலக்கிட்ட ஸ்பைடர் மேன்...’’ - ஓநாய் உருவில் இருந்த தேவதை துள்ளிக் குதித்தாள்.‘‘என்ன சொல்றீங்க ஏஞ்சல்? எனக்கு ஒண்ணும் புரியலை...’’ இமைகளை விரித்தான் மகேஷ்.‘‘தத்தி. எவ்வளவு சக்தி வந்தாலும் இன்னும் குழந்தையாவே இருக்கியே...’’ அவன் கன்னத்தில் வடிந்த கண்ணீரை ஓநாய் நக்கியது.‘‘சீ... என்ன ஏஞ்சல் இது...’’ தன் சட்டையால் எச்சிலை துடைத்தான்.

‘‘இங்க பார்றா... நாங்க
வளர்க்கிற நாயெல்லாம் எத்தனை முறை எங்களை நக்கும் தெரியுமா?’’ ஹாரி பார்ட்டர் சிரித்தான்.

‘‘எவ்வளவு பெரிய ஆபத்துல இருக்கோம். இந்த நேரத்துல என்ன காமெடி வேண்டியிருக்கு...’’
‘‘த்தோடா. அறிவாளி கோபப்படறாரு...’’ ஸ்பைடர் மேன் அங்கும் இங்குமாக பறந்தபடியே சீண்டினான்.
‘‘ஸ்பைடர் மேன்... பீ சீரியஸ்...’’

‘‘எல்லாரும் சீரியஸாதான் இருக்காங்க. இது சின்ன ரிலாக்சேஷன். அவ்வளவுதான். டென்ஷன் ஆகாத. லெட் தெம் என்ஜாய்...’’ தன் பங்குக்கு ஓநாயும் டான்ஸ் ஆடியது.
‘‘ஏஞ்சல்... நீயும் இவங்களோட சேர்ந்துட்டியா?’’
‘‘சேராம? தலைல கை வைச்சுகிட்டு உட்கார சொல்றியா?’’
‘‘ஏஞ்சல்...’’

‘‘ஷ். நமக்கு ஒரு ஆபத்தும் இல்லை. புரிஞ்சுதா?’’
‘‘விளையாடறீங்களா ஏஞ்சல்? ஹாரி பார்ட்டருக்கு மந்திரவாதி தாத்தா சாபம் கொடுத்திருக்காரு...’’
‘‘அதைத் தூக்கி குப்பைல போடு...’’
‘‘ஏஞ்சல்...’’

‘‘லைஃபை சீரியசா அணுகாதே. எல்லா பிரச்னைக்கும் தீர்வு இருக்கு. அதைக் கண்டு
பிடிக்கறதுதான் முக்கியம். நம்ம சிக்கலுக்கு ஸ்பைடர் மேன் சொல்யூஷன் சொல்லிட்டான். பனி விலகினா மாதிரி இருக்கு. சட்டுனு மனசு லேசா ஆனதால துள்ளி குதிக்கத் தோணுது. அதை செய்தாச்சு. ஓகே. நௌ லெட்ஸ் மூவ்...’’
‘‘ஏஞ்சல்...’’

‘‘கம் மை சைல்ட். அருவிக்கு போகலாம். அலாவுதீனுக்கு சாப விமோசனம் தரலாம். அப்புறம் ராஜகுமாரியை சிறை மீட்கலாம்...’’
‘‘ஹாரி பார்ட்டருக்கு..?’’
‘‘எதுவும் ஆகாது. வா...’’
‘‘நான் என்ன சொல்ல வர்றேன்னா...’’
‘‘ஆணியே பிடுங்க வேண்டாம்...’’

மகேஷின் வாயைப் பொத்திய ஸ்பைடர் மேனும், ஹாரி பார்ட்டரும் அவனை தூக்கி ஓநாயின் மீது அமர வைத்தார்கள். ‘‘நீங்க எப்படி வருவீங்க..?’’‘‘இதோ இப்படித்தான்...’’ என்று மகேஷுக்கு பதில் சொன்ன ஸ்பைடர் மேன், அலேக்காக ஹாரி பார்ட்டரை தூக்கி தன் தோளில் அமர வைத்தான். பிறகு தன் வலது கை மணிக்கட்டை விரித்தான். பாய்ந்த சிலந்தி வேறொரு இடத்தில் பச்சக் என ஒட்டியது.

‘‘கமான் கைஸ்...’’ கத்தியவன் சிலந்தியில் தொங்கியபடி பறந்தான்.‘‘மவனே என்கிட்டயேவா... யார் ஃபர்ஸ்ட் போறாங்கன்னு பார்க்கலாமா?’’ உறுமிய ஓநாய், தன் வேகத்தை அதிகரித்தது.
உற்சாகத்துடன் அவர்கள் பயணம் தொடர்ந்தது.

ஓநாயின் மீது அமர்ந்திருந்த மகேஷுக்கு மட்டும் இதயம் ‘திக் திக்’ என அடித்துக் கொண்டது.
‘தேவதை ஏன் ஓநாயின் உருவை எடுத்தாள்... அருவிக்கு சென்றதும் என்ன ஆகும்... ஹாரி பார்ட்டரை எப்படி ஸ்பைடர் மேன் காப்பாற்றப் போகிறான்... நல்லபடியாக அலாவுதீனுக்கு சாப விமோசனம் தர முடியுமா... மந்திரவாதி தாத்தா மீண்டும் ரத்தத்தை ஓநாயிடம் காட்டினால் என்ன ஆகும்...’அடுக்கடுக்காக எழுந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் மகேஷ் திணறினான்.

அதே நேரம் -கரன்ட் கம்பிகளுக்கு இடையில் சிறைப்பட்டிருந்த டூப்ளிகேட் தேவதையின் அருகில் மந்திரவாதி தாத்தா சென்றார்.தன் கையில் இருந்த மந்திரப் பொடியை அந்த கம்பிகளின் மீது தூவினார்.அவ்வளவுதான். இமை மூடி திறப்பதற்குள் அந்த கம்பிகள் மறைந்தன.தன் வலது கையை உயர்த்தினார்.

அதிலிருந்து பாய்ந்த ஒளி, டூப்ளிகேட் தேவதையின் நெற்றிப் பொட்டை அடைந்து அவள் உடலுக்குள் ஊடுருவியது.தட்ஸ் ஆல். மைக்ரோ செகண்டில் அவள் மந்திரவாதி தாத்தா முன் மண்டியிட்டாள்.

‘‘உங்க அடிமைக்கு என்ன கட்டளை குருவே...’’‘‘உன்னை ஓநாயாக மாற்றப் போகிறேன்...’’‘‘சரி...’’‘‘நேராக அருவிக்குச் செல்...’’‘‘உத்தரவு...’’‘‘அங்கு சென்றதும்...’’ மடமடவென்று கட்டளைகளை பிறப்பித்தார்.

எல்லாவற்றுக்கும் சரி சரி என டூப்ளிகேட் தேவதை தலையசைத்தாள்.
‘‘இனி நீ செல்லலாம்...’’ என்று அவர் சொல்லி முடிக்கவும் ஓநாயாக அவள் மாறவும் சரியாக இருந்தது.அதே நிறம். அதே உயரம். அதே எடை.

அச்சு அசலாக மகேஷ் எந்த ஏஞ்சலின் மீது பயணம் செய்கிறானோ அதே ஓநாயின் ஜெராக்ஸ் ஆக அவள் காட்சியளித்தாள்.‘‘  நிஷீ  ...’’ என மந்திரவாதி தாத்தா அடிவயிற்றில் இருந்து கத்தியதும் இந்த ஓநாயும் பாய்ந்தது, சாப விமோசனம் தரும் அதே அருவியை நோக்கி.
இந்த இரண்டு தரப்பையும் எதிர்நோக்கியபடி அங்கு ஒரு ஜீவன் காத்திருந்தது.

அது வெண் புறா.‘‘ஏன் தாமதம் மாமா. உங்களுக்காக எத்தனை நாழிகைகள் காத்திருப்பது..?’’
படபடத்த துரியோதனனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சகுனி குழம்பினார்.

பின்னால் இருந்தபடி அவர் உள்ளங்கையைக் கிள்ளியவன் முன்னால் வந்தான். ‘‘மன்னிக்க வேண்டும் இளவரசே! ஊரடங்கிய பின்னர் மாமாவை அழைத்து வர வேண்டுமென்று நீங்கள் கட்டளையிட்டதால் நான்தான் பயணத்தைத் தாமதப்படுத்தினேன்...’’‘‘சரி... சரி... நீங்கள் வந்ததை யாரும் பார்க்கவில்லையே?’’‘‘இல்லை இளவரசே...’’

‘‘நல்லது மாமா! உடனே சிகிச்சையை ஆரம்பியுங்கள்...’’‘‘சிகிச்சையா?’’ சகுனியின் குழப்பம் துரியோதனனையும் தொற்றிக் கொண்டது. ‘‘உங்களுக்கு எதுவும் தெரியாதா?’’‘‘தெரியாது இளவரசே. நான் எதுவும் சொல்லவில்லை...’’

‘‘முட்டாள்...’’ - பற்களைக் கடித்தான் துரியோதனன். ‘‘இவனை எங்கிருந்து பிடித்தீர்கள் மாமா? சரியான மக்காக இருக்கிறானே..?’’ ‘‘பரதனை சொல்கிறாயா..?’’ தெளிவு ஏற்படுவதற்காக உரையாடலை நீட்டினார் சகுனி.‘‘இவன் பெயர் பரதனா..? நல்ல பெயரை வைத்துக் கொண்டு பிராணனை வாங்குகிறான். உங்கள் நிழல் என்று அறிந்துதான் இவனை அனுப்பினேன். ஆனால், உங்களை விட மெதுவாக செயல்படுகிறான்...’’சகுனி பார்வையை தாழ்த்தி தன் கால்களை பார்த்தார்.

‘‘மன்னிக்க வேண்டும் மாமா. உங்கள் ஊனத்தை நான் சுட்டிக் காட்டவில்லை...’’‘‘குறிப்பிட்டாலும் தவறில்லை...’’‘‘அது உங்கள் பெருந்தன்மை. சரி, விஷயத்துக்கு வருகிறேன். துச்சாதனன் அடிபட்டிருக்கிறான். அவனுக்கு தாங்கள்தான் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்த அஸ்தினாபுரியிலேயே உங்களை விட்டால் வேறு சிறந்த மருத்துவர் இல்லை. அதனால்தான் வரவழைத்தேன்...’’சகுனி பதறினார். ‘‘துச்சாதனனுக்கு என்ன ஆயிற்று?’’‘‘எல்லாம் என் தலையெழுத்து...’’‘‘துரியோதனா...’’

‘‘வேறென்ன சொல்லச் சொல்கிறீர்கள் மாமா? பாண்டவர்கள் என்று திரௌபதியை மணந்தார்களோ அன்று முதலே விளக்கெண்ணெய் குடித்த குரங்காக துச்சாதனன் சுற்றிக் கொண்டிருக்கிறான். இன்று மாலை பாஞ்சாலி குளிக்கும் நேரமாகப் பார்த்து அவள் அரண்மனைக்குச் சென்றிருக்கிறான்.

புடவை இல்லாமல் அவளைப் பார்க்க வேண்டும் என்ற தன் ஆசையைத் தீர்த்துக் கொள்ள முயன்றிருக்கிறான். அதற்காக குளியலறை பக்கம் இருக்கும் சாளரத்தில் ஏற முற்பட்டிருக்கிறான். இவனது துர்புத்தி தெரிந்து திரௌபதி அங்கு பச்சிலையைத் தடவி வைத்திருக்கிறாள். அது வழுக்கியிருக்கிறது. கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டிருக்கிறான்...’’

‘‘அடடா...’’‘‘விஷயம் வெளியில் தெரிந்தால் தலைகுனிவாகிவிடும். அதனால்தான் காதும் காதும் வைத்தது போல் இந்த ஆதூரச் சாலைக்கு அவனை அழைத்து வந்தேன். அரண்மனை மருத்துவர் சிகிச்சை அளித்தால் நம் மானம் சந்தி சிரிக்கும். எனவேதான் பரதன் மூலமாக உங்களை ரகசியமாக வரவழைத்தேன்...’’
‘‘சரி. இப்போது அவன் எங்கிருக்கிறான்..?’’

துரியோதனன் முன்னால் செல்ல சகுனி பின்தொடர்ந்தார். உடன் வந்த பரதன் அவர் செவியில் முணுமுணுத்தான். ‘‘நம் ரகசியக் குழுவில் இருக்கும் யாரும் பொற்காசுகளுக்கு விலை போக மாட்டார்கள்...’’‘‘தவறாக உன்னை நினைத்ததற்காக என்னை மன்னித்து விடு...’’ காற்றுக்கும் கேட்காதபடி சொற்களை உதிர்த்த சகுனி, அதன் பின்னர் மௌனம் காத்தார்.
ஆதூரச் சாலையின் உள்ளே புற்களின் மீது துச்சாதனன் படுத்திருந்தான். அவனருகில் சென்று நாடி பிடித்துப் பார்த்தார்.

‘‘தெரிந்த மயக்க மருந்தை புகட்டியிருக்கிறேன்...’’ துரியோதனனின் வார்த்தைகளில் கவலை தெரிந்தது.‘‘பயப்பட எதுவுமில்லை...’’ என்றவர் பரதனை நோக்கித் திரும்பினார். ‘‘அந்தப் பச்சிலையை எடுத்து வா...’’சகுனியின் கட்டளைக்கு பரதன் அடி பணிந்தான். அதே நேரம் -அஸ்தினாபுரத்தின் மறு கோடியில் இருந்த வேறொரு ஆதூரச் சாலையில் அர்ஜுனனுடன் உரையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணர், தன் பேச்சை நிறுத்தினார்.

சிறகடிக்கும் ஓசை எங்கோ தொலைவில் கேட்டது. இருவரும் பரபரப்பானார்கள். மெல்ல மெல்ல சத்தம் அதிகரித்தது. வெண் புறா ஒன்றும் பார்வைக்குத் தட்டுப்பட்டது.
பழக்கப்பட்ட நபர் என்பதற்கு அடையாளமாக வெகு சுவாதீனத்துடன் பகவானை அடைந்த அந்த புறா, அவரை மூன்று முறை வட்டமடித்தது. பின்னர் அவர் தோளில் அமர்ந்தது.
அதை லாவகமாக தன் இடது கை ஆள்காட்டி விரலுக்கு இடம்பெயர்த்தவர், அதன் கழுத்தை வாஞ்சையுடன் தடவினார். ஐந்து முறை சிறகுகளை படபடவென அடித்த அந்தப் புறா, பிறகு சிறகை விரித்தது.

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்த கிருஷ்ணர், தன் வலது கையை சிறகுக்குள் நுழைத்தார். விரல் நுனி அந்தப் பகுதியை ஆராய்ந்தது. முன்னும் பின்னுமாக நகர்ந்தது. ஓரிடத்தில் நின்றது.நகத்தினால் புறாவுக்கு வலிக்காதபடி அந்த இடத்தை துருவினார்.வெண் முத்து வெளியில் வந்தது.காத்திருந்த காவலர்கள் கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் கையில் லத்தியுடன் திபுதிபுவென இளவரசனின் கிராமத்துக்குள் நுழைந்தார்கள்.படபடவென சிறகை அசைத்தபடி வெண் புறா ஒன்று அங்கிருந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை.

‘‘தீமை ஒழியணும்னு நீங்க பேசினது தப்பாப் போச்சு தலைவரே...’’
‘‘ஏன்யா?’’‘‘தீபாவளிக்கு எல்லோரும் உங்க உருவ பொம்மையை கொளுத்தறாங்களே!’’

‘‘தலைவர் ஏன் இப்படி அலறியடிச்சு ஓடறார்..?’’‘‘ஜெயில்ல இருந்து ரிலீஸான அவரை தொண்டர்கள் வெடி மாலையோட வரவேற்றாங்களாம்..!’’

‘‘தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்?’’‘‘தொண்டர்கள் அவருக்கு ‘கம்பிக்குள் வாழும் கம்பி மத்தாப்பே’ன்னு தீபாவளி வாழ்த்து பேனர் வச்சிருந்தாங்களாம்!’’

- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

(தொடரும்)

கே.என்.சிவராமன்