facebook வலைப்பேச்சு



முன்னெல்லாம் செல்போன்ல பேசிக்கிட்டு போனா, ‘‘யாரு பெத்த புள்ளையோ, தனியா பேசிக்கிட்டு போகுது’’ன்னு சொல்லுவாங்க. இப்பல்லாம் எதுத்தாப்புல இருக்கறவங்க கிட்ட பேசினாலும், ஏதோ போன்ல பேசறாங்கன்னு நினைச்சுக்கிட்டு மூஞ்ச திருப்பிக்கிட்டு போறாங்க. கூடிய சீக்கிரம் எதிர்த்தாப்பல இருக்கறவங்ககிட்டகூட போன்ல தான் பேசணும் போல. சுந்தரி விஸ்வநாதன்

பணமற்றவனின் பகற்பொழுதைப் போல இரக்கமற்று அழுத்தி நிறைக்கின்றன நினைவுகள்...
 சதீஷ்குமார்

நம்பர்கள் இல்லாத கரன்சி நோட்டும், நண்பர்கள் இல்லாத மனிதன் வாழ்வும் செல்லாக் காசு ஆகிவிடும்
சிவகாமி சூரஜ்

கிச்சன்ல இருந்து வாசனை வந்தா அது அம்மா சமையல்; ‘வாசனை வருதா’ன்னு சத்தம் வந்தா பொண்டாட்டி சமையல்!
அம்புஜா சிமி

வாழ்க்கை வெறும் குஸ்காதான்... அதில் காய்கறி, மட்டன், சிக்கன், முட்டை சேர்ப்பதெல்லாம் அவனவன் சாமர்த்தியம் சார்ந்தது!
கௌரி குருநாதன்

பக்கத்துல இருக்குறவருக்கு இன்கமிங் கால் வரும்போது அத அட்டெண்ட் பண்ணாம நம்மகிட்ட உடனே கொடுத்தார்னா... அவரு நம்மள பொய் சொல்ல வைக்கப் போறார்னு அர்த்தம்!
டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

இந்த கார்ப்பரேட் கம்பெனிகள் மனிதனிடம் எதிர்பார்க்கும் வேலைத்திறனை, சதுக்க பூதமே வந்தாலும் நிறைவேற்றி வைக்க முடியாது போல!
# என்னமா டார்கெட் வைக்கிறாங்க, 2 வருஷ வேலைய 2 வாரத்துல முடிக்கணுமாம்.
- ஜெய்சினா எம் எக்ஸ்

‘குரு சிஷ்யன்’ படத்தில பாண்டியன் கைய உடைச்சி, ரஜினி தண்டனைய தள்ளிப் போட வைப்பாரே... அது மாதிரி ஏதாவது பண்ண முடியாதான்னு ஆபீஸ்ல ஒருத்தரு கேக்குறாரு!
யோசிச்சுப் பார்த்தேன்... ஜெத்மலானிய விட ரஜினி பெரிய சட்டமேதையாதான் இருக்கணும்.
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

ரொம்ப பேசினா வாயாடி... கம்முன்னு இருந்தா திமிர் பிடிச்சவ...
# ம்க்கும்
- ப்ரியா முரளி

ரகசியமென எண்ணும் விஷயத்தை யாருடனும் பகிர்ந்து கொள்வது ஆபத்து; உங்களால் காப்பாற்ற முடியாததை அவர் காப்பார் என எப்படி நம்பலாம்?
- மஞ்சுபாஷினி ஜெகதானந்தன்

தமிழ்நாட்டுப் பெண்கள் பாவம்தான். டிவியில சீரியல் பார்த்தா வீட்டுக்குள்ள உட்கார்ந்து அழுவுறாங்க. அதே டிவியில் நியூஸ் பார்த்தா ரோட்டுல உட்கார்ந்து அழுவுறாங்க.
- விநாயக முருகன்

twitter

@Star_Jeyabal
வெறும் 1330 ட்விட்ட போட்டு உலகம் பூரா டிரில்லியன் ஃபாலோயர் வச்சு இருக்கும் திருவள்ளுவர், ட்விட்டர்களின் முன்னோடி!

@karuthujay
பணக்காரத்தனம் என்பது ஆசையாய் வளர்க்கும் நாயை இரவில் ஏ.சி. ரூமில் தூங்க வைத்துவிட்டு காவலுக்கு வீட்டு வாசல்ல செக்யூரிட்டியைப் போடுறது:)

 @BoopatyMurugesh
கஷ்டப்பட்டு மேலே ஏறிய மனிதன், மொத்தமா சறுக்கும்போது சந்தோஷமாக இருக்குமிடம் ‘தீம் பார்க்’ மட்டும்தான்...

 @saysatheesh
டி.வி.ல முழு நேரமும் மோடி பேச்சையே காட்டுறாங்கன்னு காங்கிரஸ் டென்ஷன் ஆவுறது தப்பு... மன்மோகன் ‘பேசினா’ காட்ட மாட்டோம்னு சொன்னதில்லையே
தூர்தர்ஷன்?

@bommaiya   
முகேஷால புகை பிடிப்பது குறைஞ்சிருக்கோ இல்லையோ, பிறக்கிற குழந்தைங்களுக்கு ‘முகேஷ்’னு பேர் வைக்கிறது குறைஞ்சிருக்கு...

@VenkysTwitts   
4 முறை திருமணம் தடைபட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - செய்தி
# 4 தடவ கடவுள் காப்பாத்தியும் அஞ்சாவது தடவ மெனக்கெட்டு செத்துருக்கான் பாருங்க..!

@kumar faculty
அடுத்தவர்களுக்குப் பறித்தால் குழி, உங்களுக்குப் பறித்துக் கொண்டால் அஸ்திவாரம்..!

@aravindslm 
‘‘கடவுளே! எனக்குக் கஷ்டங்களை மட்டும் கொடு... எப்பவுமே நான் வேண்டியதை நீ கொடுத்தது இல்லை,
அதனால் கேட்கிறேன்’’ :)

@Iam_SuMu   
ம்ம நாட்ல உள்ள நல்லவங்க / திறமைசாலிங்களை பல தடவை அயல் நாடுகளே நமக்கு அடையாளம் காட்டியுள்ளன...
# இம்முறை கைலாஷ் சத்யார்த்தி

@maryjonesna
அடம் செய்ய விரும்புகின்றனர்... குழந்தைகள்!

@143di   
நன்கு படித்த, அழகான, குணமுள்ள, நிரந்தரப் பணியிலுள்ள, நல்ல குடும்பத்தைச் சேர்ந்த...
# இதுக்கு ‘பொண்ணு இல்ல’ன்னு சொல்லிட்டுப் போங்கடா!

 @elavasam 
 ‘தீபாவளி அன்றும் கொஞ்சம் கூட ஆர்வமே இல்லாமல் இருக்கிறாரே’ என நான் வியந்த என் தந்தையாகவே இன்று நான் ஆனதை எண்ணிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

@KalpanaTalks
எல்லார் வீட்டிலும் கண்டு கொள்கிறார்களோ இல்லையோ, கத்திக் கொண்டே இருக்கிறான்...
# டிவி

@mekalapugazh
‘சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கலாம்’ என்று நினைப்பதே சிறு வயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை...