ஜோக்ஸ்



‘‘போதையில ஒரு உண்மையைக் கண்டுபிடிச்சுட்டேன்யா...’’
‘‘என்ன தலைவரே அது?’’
‘‘சரக்கடிச்சா மங்கள்யானைவிட வேகமா செவ்வாய்க்கு பயணிக்கலாம்னுதான்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘அவர் போலி ஜோசியர்னு எதை வச்சி சொல்றே..?’’
‘‘உங்க ராசிக்கு நீங்க நடிகை ஹன்சிகாவுக்கு கோயில் கட்டி வழிபடணும்னு சொல்றாரு..!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

போலீஸ் ஸ்டேஷன்ல லாக்கப் ரூம் இருக்கும். அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல மேக்கப் ரூம் இருக்குமா?
- பொண்டாட்டியை அடிச்சிட்டு மகளிர் போலீஸிடம் அடி வாங்கும் ஆண்கள் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

என்னதான் கூகுள்ல எதையும் தேடலாம்னாலும், ஒரு பொண்ணுகிட்ட தொலைச்ச மனசை எல்லாம் அதுல தேட முடியாது!
- தேடித் தேடி தொலைந்து போனோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘இன்ஸ்பெக்டர் சார், நேத்து திருடு நடந்த வீட்ல இந்த ஸ்கெட்ச் பென் கிடந்தது!’’
‘‘ஸ்கெட்ச் போட்டு திருடச் சொன்னதை கபாலி தவறா புரிஞ்சிக்கிட்டான் போலிருக்கு!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘குற்றப்பத்திரிகையை படிச்ச தலைவர் கடுப்பாயிட்டாரே... ஏன்?’’
‘‘அதுல கடைசியில, ‘புழல், திகார் ரெண்டு ஆப்ஷன்ல ஒன்றை டிக் செய்யவும்’னு கேட்டிருக்குதாம்..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘நான் கேட்கிறேன். ‘தமிழ்நாடு மாநிலம்’ என்ற பெயர் நன்றாகத்தானே உள்ளது! அதை ஏன் மின் மிகை மாநிலம் என்று மாற்ற வேண்டும்..?’’
- அனார்கலி, தஞ்சாவூர்.