ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்!



பாலிவுட்டில் பெண்கள் மேக்கப் ஆர்ட்டிஸ்டாகப் பணியாற்றக் கூடாது என மேக்கப் ‘மேன்’ சங்கம் அடம் பிடித்ததுதான் கடந்த வார பாலிவுட் பரபரப்பு. இத்தனைக்கும் நடிகைகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பெண் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்கள் உண்டு. ஆனால், அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர மட்டும் தடை!

 ‘இதெல்லாம் 55 வருடத்துக்கு முந்தைய பழைய ரூல்ஸ்... அதை மாத்துங்க மாப்ஸ்’ என கோர்ட்டே இதை முடித்து வைத்துவிட்டது. எப்பேர்ப்பட்ட மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களை அந்த சட்டம் இதுவரை தடுத்து வந்தது தெரிய வேண்டாமா?

மெஹரா கொலாஹ்

‘படு அழகுடா’ என தீபிகா படுகோனேவைப் பார்த்து நாம் வியக்க இவர்தான் காரணம். கிட்டத்தட்ட அறுபது படங்களில் கதாநாயகிகளை கட்டழகிகளாக்கிக் காட்டியவர். 15 வருடங்களாக ஃபீல்டில் இருக்கும் இவர், அந்தக் கால கிரிக்கெட் வீரர் நாரி கான்ட்ராக்டரின் மகள்.

நம்ரதா சோனி

மேக்கப் துறையில் 12 வருடங்களாக அழகை விதைப்பவர். தடை இருந்தும் ‘மெயின் ஹூன் நா’, ‘ஓம் சாந்தி ஓம்’ என சூப்பர்ஹிட்
படங்களில் பணியாற்றி, இந்தியன் ஃபிலிம் அகாடமியின் விருதைப் பெற்றவர். நிறைய ஹீரோயின்கள் இவரால் அழகாகி
யிருந்தாலும், சோனம் கபூருக்கு இவர் நிழல் மாதிரி!

மார்வி ஆன் பெக்

லண்டனில் உள்ள டெலாமார் அகாடமி யில் மேக்கப் கலை படித்த முதல் இந்தியர். கடந்த 18 வருடங்களாக உலகம் முழுவதும் கை வலிக்கவிருதுகள் வாங்கியிருப்பவர். பாலிவுட் குயின்ஸ் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், பிபாஷா பாசு, கேத்ரினா கைஃப் எனப் பலருக்கும் இவர்பிரத்யேக பியூட்டிஷியன்!

சாரு கன்னா

ஆணாதிக்கம் காட்டிய மேக்கப் மேனாதிக்கத்தை எதிர்த்து வழக்குப் போட்டவர் இவர்தான். லாஸ் ஏஞ்சல்ஸில் மேக்கப் படித்த டெல்லி பொண்ணு. கடந்த எட்டு வருடங்களாக இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளோடு பணியாற்றி பாராட்டு பெற்ற இவருக்கு வயது ஜஸ்ட் 28.

(இப்ப சொல்லுங்க பாஸ், அழகாக்குறாங்க... அழகாவும் இருக்காங்க... இவங்களைப் போய் மிஸ் பண்ணலாமா? நாம ஏன் இவங்களை தமிழுக்குக் கூப்பிடக் கூடாது!)