ஜோக்ஸ்



‘‘என்ன இது.... போருக்கு ஐம்பது பேர் மட்டும் போறாங்க?’’
‘‘மன்னர் ‘லோ பட்ஜெட் போர்’ அறிவிச்சிருக்கார்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘நம்ம டாக்டர் மேல அந்த பேஷன்ட் ஏன் கொலைவெறியோட இருக்கார்?’’
‘‘குடியை மறக்க மருந்து கேட்டவருக்கு நர்ஸை மறக்கற மருந்து கொடுத்துட்டாராம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

மங்கள்யான் படம் எடுத்து அனுப்புதாமே..?’’
‘‘ஆமா தலைவரே! அதுக்கு இப்ப என்ன?’’
‘‘அந்தப் படத்துல ஹன்சிகா நடிக்கிறாங்களான்னு கேட்டு சொல்லுய்யா!’’
- எல்.மூர்த்தி, பி.மணியட்டி.

‘‘எழுபது வருஷ அரசியல் வாழ்க்கையில அறுபது வருஷம் நான் ஜெயில்ல கழிச்சவன்யா... இதுல இருந்து என்ன தெரியுது?’’
‘‘உங்க க்ரைம் ரேட் அதிகம்னு தெரியுது தலைவரே!’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘ஹாஸ்பிட்டல்ல திடீர்னு என்ன போராட்டம்?’’
‘‘நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப நர்ஸ்களோட எண்ணிக்கையைக் கூட்டணுமாம்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் மிட்நைட்ல சுடச்சுட இட்லியை அவிச்சாலும், இட்லில இருந்து ஆவிதான் வருமே தவிர, கொட்டாவி வராது!
கொட்டாவி விட்டுக்கொண்டே கொடுமையாய் சிந்திப்போர் சங்கம்
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.

என்னதான் வெண்டைக்காயை ‘லேடீஸ் ஃபிங்கர்’னு சொன்னாலும் அதுக்கு நெயில் பாலீஷ் போட்டு அழகு பார்க்க முடியுமா?
வெண்டைக்காயை வைத்து கொழ கொழ தத்துவம் எழுதுவோர் சங்கம்
வி.சகிதாமுருகன், தூத்துக்குடி.