ஜோக்ஸ்



தூக்கத்துல நம்ம ஏட்டய்யா ஸ்டேஷன்ல உளறுவதைப் பார்த்துட்டு எல்லாரும் பயப்படறாங்களா, ஏன்?’’
‘‘யார் யார் கிட்டே மாமூல் வாங்கி இருக்கோம்ங்கிறதை எல்லாம் வரிசையா சொல்லிடறாராம்!’’
- மு.மதிவாணன், அரூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

மெயின் கேட்டுக்கு பூட்டு போடலாம். காம்பவுண்டு கேட்டுக்கு பூட்டு போடலாம். டோல்கேட்டுக்கு பூட்டு போட முடியுமா?
- பூட்டு போட்ட பாத்ரூமுக்குள் உட்கார்ந்து பாட்டு பாடுவோர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

‘‘புறமுதுகிட்டு ஓடும்போதும்
மன்னரோட குசும்பு குறையலை...’’
‘‘எப்படிச் சொல்கிறீர்கள் அமைச்சரே?’’
‘‘ ‘இந்த வேகம் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா?’ன்னு எதிரியைப் பார்த்து பாடிக்கிட்டே ஓடறாரே!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘கல்யாணத்துக்கு அப்புறம் நடிப்பீங்களா..?’’
‘‘சேச்சே... கட்டின புருஷன்கிட்டே நடிக்கறது நல்லாவா இருக்கும்?’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘கிளீன் இந்தியா கோஷத்தை
கபாலியும் கடைப்பிடிக்கிறானா...
எப்படி?’’‘‘திருடற வீட்டை சுத்தப்படுத்தியும் கொடுத்துட்டு வர்றானே!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘அந்த கவர்ச்சி நடிகை புடவையில ஏன் ‘எல்’ போட்டிருக்கு..?’’
‘‘முதல் தடவையா புடவை கட்டியிருக்காங்களாம்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

தத்துவம் மச்சி தத்துவம்

பழைய புத்தகக் கடையில இங்கிலீஷ் புக் கிடைக்கும், கணக்கு புக் கிடைக்கும், ஏன் கதை புக் கூட கிடைக்கும்... ஆனால், பேஸ்புக் கிடைக்குமா?
- சிஸ்டமேடிக்காக சிந்திப்போர் சங்கம்
- ஜி.தாரணி, மதுரை.